A POEM BY
VEERAMANI
Your love and my love
accumulate alike
in different densities
Your song and my song
ring alike
in different tongues
Your journey and my journey
continue alike
in different paths.
Your tears and my tears
burn the same
With bitterness the same
Happiness
has hues galore
Forms myriad
Our sorrows
have no differences
whatsoever.
உன்னுடைய புன்னகையும்
என்னுடைய புன்னகையும்
ஒன்றுபோலவே
நெய்யப்பட்டிருக்கின்றன
வெவ்வேறு இழைகளால்
உன்னுடைய அன்பும்
என்னுடைய அன்பும்
ஒன்றுபோலவே
திரண்டிருக்கின்றன
வெவ்வேறு அடர்த்தியுடன்
உன்னுடைய பாடலும்
என்னுடைய பாடலும்
ஒன்றுபோலவே
இசைக்கின்றன
வெவ்வேறு மொழிகளில்
உன்னுடைய பயணமும்
என்னுடைய பயணமும்
ஒன்றுபோலவே
தொடர்கின்றன
வெவ்வேறு பாதைகளில்
உன்னுடைய கண்ணீரும்
என்னுடைய கண்ணீரும்
ஒன்றுபோலவே சுடுகின்றன
ஒன்றுபோலவே கரிக்கின்றன
மகிழ்ச்சிக்கு
ஆயிரம் வண்ணங்கள்
வடிவங்கள்
பேதங்கள்
ஏதுமற்றவை
நம் துயரங்கள்
வீரமணி
No comments:
Post a Comment