surging downwards
rise up to the sky as the spray of rain
He who filling one in another
walking on an even base
quietly watches bemused.
In order to test his patience
a vision comes shaped out of the
divine court
and while getting immersed in the words
created out of the celestial dance gifted by it
in ecstatic revelry
everything written turned soaked to the core.
Unable to bear the angst of the words
drenched and trembling
Crying aloud complaining
the Omniscient appearing to appease
appointed the Sun and the Wind
as slaves to me
and went away
Seeing the direction of my words’ radiance
the wind swirls this globe.
But, alas
I am not able to enslave this ocean
At least now
should somehow learn the technique of
slicing and severing
atleast now.
பேரருவி விழும் சப்தத்தில்
நீராடும் மக்கள் எழுப்பும் உற்சாகக் குரல்கள்
தூவானமாய் வான் முட்ட உயர்கிறது
ஒன்றை மற்றொன்றில் நிரப்பி
சம தளத்தில் நடை பயில்பவன்
அமைதியாக வேடிக்கை பார்க்கிறான்
அவனது பொறுமையை சோதிக்க
சித்திரசபையிலிருந்து உருக் கொண்டுவருகிறொரு சித்திரம்
அது கையளித்ததோ விரல்களின் நடனத்தில்
உருக் கொள்ளும் சொற்களை
களிகூர்ந்து நீராடும் போது
எழுதிய அத்தனையையும் நனைந்து போயிற்று
சொற்கள் குளிரில் நடுங்கப் பொறுக்காது
கத்திக் கூச்சலிட
சமாதானப் படுத்த வந்த ஈசன்
கதிரவனையும்
காற்றையும் எனக்கடிமையாக நியமித்துவிட்டுச் சென்றான்
என் சொற்கள் சுடரும் திசைபார்த்து
இந்தப் புவியைச் சுழற்றுகிறது காற்று
என்னவொன்று இந்த ஆழியைத் தான்
அடிமையாக்க முடியவில்லை
சங்கறுக்கும் சூட்சுமத்தை
இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும்
கடங்கநேரியான் தமிழ்நாடு
No comments:
Post a Comment