INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, September 3, 2022

AYYAVOO PERAMANATHAN

 A POEM BY

AYYAVOO PERAMANATHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Upon the hump of the cow
in the grazing land
from out of blue arrives
a Black Drongo*
Sitting like a mahout zooming its eyes and
pecking at the insects sprouting on the lawn
and swallowing them
it digests the magnificence of search
The cow that bears the Dorogo bird
just like carrying a calf
Is the benevolence of Love.
When it goes leaping on the branches of the horns and sit
the tree fallen long ago
breaks apart in memories
The tiny bird that has shaken the very sky
floats as a child sailing in a boat
filled with fear-struck ecstasy.
Standing in the wind on the ear of the cow
that swirls its tail
it whispers that it has wings smaller than the tail
and bigger than the sky.
The shade lying beneath the lone palm tree
growing out of the root and stretching
stands horizontally holding an umbrella
for the friendship that has joined hands and ripened
Having grazed the luminous hour
while the cow was returning to its shed
banging against the clouds
and embracing them all
the Black Dorango vanish
At this instant
from the sky’s swelling udders
starts secreting
in the hue of rain
cow’s milk pristine.

* Karichaankuruvi.

அய்யாவு பிரமநாதன்

எங்கிருந்தோ வந்து விடுகிறது
மேய்ச்சல் வெளியில்
மாட்டின் திமில் மீது கருச்சான் குருவி
யானைப் பாகனைபோல் அமர்ந்துகொண்டு கண்களை உருப்பெருக்கி புல்வெளியில் முளைவிடும் பூச்சிகளை கொத்தி விழுங்கி
தேடலின் உன்னதத்தை செரிக்கிறது
கன்றைப்போல்
குருவியை சுமக்கும் மாடு ஓர் அன்பின் காருண்யம்
அசையும் கொம்பின் கிளைகளில் தாவித்தாவி உட்காந்தபோது என்றோ சரிந்த பட்ட மரம் நினைவுகளில் முறிகிறது
ஆகாயத்தையே அசைத்த குருவி
படகில் பயணிக்கும் குழந்தைபோல் அச்சம் கலந்த பரவசத்தில் மிதக்கிறது
நீண்ட வாலை
சுழட்டி அடிக்கும் மாட்டின் காதில் காற்றில் நின்றபடி
வாலைவிட சிறிய
வானத்தைவிட பெரிய சிறகுகள் இருப்பதாக
கிசுகிசுக்கிறது
ஒற்றைப் பனைமரத்தடியில்
கிடந்த நிழல்
வேரிலிருந்து வளர்ந்து நீண்டு கிடைமட்டமாக குடைபிடித்து நிற்கிறது இணைந்து
கனிந்த நட்பிற்கு
வெளிச்சப் பொழுதை மேய்ந்த மாடு தொழுவம் திரும்பும்போது மேகங்களை
மோதித்தழுவி
மறைகிறது குருவி
இத் தருணம் வானின்
கனத்த மடிக் காம்புகளிலிருந்து சுறக்கத் தொடங்குகிறது
மழையின் நிறத்தில்
பசுவின் பால் .

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE