A POEM BY
PUNNAGAI POO JAYAKUMAR
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Going to sleep
after watching the ghost serial
looking dazed the next morn
said she,
“Yesterday the ghost pulled me
tugging at my sari, you see”.
Looking at Mother
turned into an aged-child
memory envisioned
the bond
ensuing in the changing times
between Start and Finish.
காலமாற்றம்
பேய்க் கதைகள்
சொல்லி எங்களை
பயங்காட்டி வசப்படுத்தியவள்
தொலைக்காட்சி
பயங்கரப் பேய் தொடரை
பார்த்து உறங்கச் சென்றவள்
நேற்று இரவு என்னை
பேய் சீலையை பிடித்து
இழுத்தது என்றாள்
பிரமை பிடித்தது போல்
விடியற்காலையில்.
வயதான குழந்தையாய்
மாறிய தாயை வைத்து
சித்தரித்துக்கொண்டது
நினைவு
காலமாற்றத்தில்
தொடக்கப்புள்ளிக்கும்
முற்றுப்புள்ளிக்குமான
இணைப்பை.
புன்னகை பூ ஜெயக்குமார்
No comments:
Post a Comment