THREE POEMS BY
KAVI KAVIN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
IN TAMIL MANY POETS REMAIN UNSUNG HEROES, WHO CONTINUE TO WRITE POETRY FOR THE SHEER JOY OF IT DESPITE BEING UNACKNOWLEDGED AND FINANCIALLY INSECURE. POET KAVIN WHO PASSED AWAY RECENTLY HAS WRITTEN MANY POIGNANT POEMS. INSIGHT GIVES THREE OF HIS POEMS AND THEIR ENGLISH TRANSLATIONS HERE BY WAY OF PAYING RESPECT TO HIM AND TO HIS POESY.
தமிழில் கவிஞர்களாக அறியப்படும் கவிஞர்கள் சிலர். கொண்டாடப்படுபவர்கள் வெகு சிலர். சாதாரண கவிஞர் கள் சிலர் அசாதாரணக் கவிஞர்களாக முன்னிலைப்படுத் தப்படுவதும் உண்டு. அதேபோல் அடர்செறிவாக தொடர்ந்து எழுதி அதிகம் அறியப்படாமலேயே முடிந்து விடும் கவிஞர்கள் அனேகம் பேர். கவிஞர் கவின் சமீபத்தில் அமரராகிவிட்டார் என்று இப்போதுதான் படித்து மிகவும் வருத்தமாயிருந்தது. நாம் எல்லோருமே தினசரி வாழ்க்கையை ஒப்பேற்றவும் அலைந்துகொண் டிருப்பதால் நாம் மதிக்கும் கவித்துவம் கொண்ட சக கவிஞர்களைக்கூட உரிய நேரத்தில் உரியவிதமாய் மரியாதை செய்ய இயலாமல் போய்விடுகிறது. என் எளிய மரியாதையாய் கவிஞர் கவின் உயிரோடிருக்கை யில் அவருடைய இரண்டு மூன்று கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றியிருந்தால் மனதுக்கு நிறைவாயிருந்திருக்கும். செய்யவில்லை. இப்போது அவருடைய ஓரிரு கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றுகிறேன். . வாழ்வின் அர்த்தம் குறித்த தேடலையும் பிரதியின் அர்த்தம் குறித்த தேடலையும் கவிதை பேசுவதாகக் கொண்டு முடிந்த வரை மொழி பெயர்த்திருக்கிறேன். திருத்தங்கள் தேவையிருப்பின் தெரிவிக்கவும் என்று அவரிடம் கேட்கமுடியாத நிலை. கவிஞர் கவினுக்கு என் நன்றியும் மரியாதையும் -
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
(1)
There searching for me I would come all alone….
The forest that enters through my ears
that are not familiar with the sounds of forest
would probe me searching and seeking….
I who hides all anguished
would be apprehended by I
who has come in search of I…
That jungle would stand exclusive
safeguarding my footprints
and give them to me
who comes throwing open the jungle.
On that day
these words would say
of my jungle meant for jungles….
(2)
The droplet of water travels.
The upper end and the lower end growing daily
hamper the fervour…
The demonism of the winds mindless uproar’s prime-force
causing anguish
yet wandering all over the plant the droplet
continues searching.
With the confusion regarding the root-end and the bud-end
near the root arrived at
apprehensions pertaining to central root and fibrous root
prevail……
Going past Epics, novels with no spontaneous overflow
unrefined alchemic climate listless thorn-glaring branch
_the journey of the droplet continues.
The other drop settled on the flower-petal
elegantly
has no worry whatsoever….
Journey without search, luxurious
The trails of search
at a corner of the ultimate end….
With the Search having its own justice
with no disputes about the blessed ultimate finish
of the great grand inferences .
ஒரு தாவரத்தின் இறுதி முனையை தேடி பயணிக்கிறது அந்த நீர்த்துளி..
மேல் முனையும் கீழ் முனையும் நாளும் வளர்ந்து
முனைப்பை தடுக்கின்றன ..
அர்த்தமற்ற சத்தமேற்றும் காற்றின் பிரதான உந்துதலின் ராட்சசம் துயரூற்ற,
ஆனாலும் தாவரமெங்கும் பரவி தேடியபடி திரிகிறது துளி,
வேரின் முனை துளிர் முனை என குழப்பமற்று போய் சேர்ந்த வேரருகே,
ஆணிவேர் சல்லிவேர் சங்கடங்கள்...
காப்பியங்கள் , சொல்வழுக்கா புதினங்கள் மெருகேற்றா ,
ரசவாத காலநிலை சாரமற்ற,
முள் முறைக்கும் கிளை கடந்து போகிறது துளியின் பயணம்..
பூவின் இதழ் மீது தங்கி ஒய்யாரமாய் நின்ற மற்றோர் துளிக்கு எக்கவலையும் இல்லை..
தேடலற்ற பயணங்கள் சொகுசானதாய் ..
தேடுகிற தடங்கள் இறுதி முனையின்
ஓர் ஓரமாய்
தேடல் நீதியுடன்,
பரம்பொருள்களின் ஆசிர்வாத இறுதிமுனை பற்றிய தர்க்கமற்று....
.....கவிக்கவின்.
(3)
நம் அனைவரின் கூட்டுமுயற்சியில் உருவான FLEETING INFINITY இருமொழிக் கவிதைத்தொகுப்பில்தொகுப்பில் கவிஞர் கவினுடைய கவிதையொன்று இடம்பெற்றிருப்பதைப் பார்த்து அவருடைய கவித்துவத் திற்கு என் எளிய மரியாதையை அவர் உயிரோடிருக்கும்போதே செய்து விட்டதாக ஓர் அல்ப மனநிறைவு கிடைத்தது. 2019இல் வெளியான FLEETING INFINITY இருமொழிக் கவிதைத் தொகுப்பில் 39வது கவிதையாக(பக்கம் 102) இடம்பெற் றிருக்கும் கவிஞர் கவினின் கவிதையை இங்கே பதிவேற்றியுள்ளேன்.
ஆற்றைக் கடந்துகொண்டிருந்த
துறவி கூறினார்
துறவியைக் கடந்துகொண்டிருக்கும்
ஆற்றைத் தரிசியுங்கள் என…..
ஆற்ரைக் கடந்துகொண்டிருந்தபோது
அவன் சொன்னான்
துறவிகளை ஆறு
ஒன்றும் செய்யாதென….
அழுக்கெடுக்காதா
என்று விழுந்த கேள்வியை விழுங்கி
ஓடிய ஆற்றின் முதுகைப் பற்றி
உடைத்து
உடைந்த துகள்களைக் கையிலேந்தி
தலைமேல் தாவிக்கொண்டான்
என்னோடு நதியை
உடுத்திக்கொண்டிருந்தவன்….
ஆற்றைக் கடந்துகொண்டிருந்தபோது
அவன் மீண்டும் சொன்னான்
துறவை ஆறு வெறுக்கிறதென…
ஆற்றின் குடும்பமேது
என விழப்போன கேள்வியை
வழிமறித்து விழியால் ஏந்தியவன்
கூறினான்
நதியை நஷ்டப்படுத்தாமல்
கடந்துவா
அதனை நதி விரும்பாதென….
ஆற்றைக் கடந்துகொண்டிருந்தபோது
அவன் சொல்லச்சொன்னான்
ஆறே என் துறவை தானமாக இடுகிறேன் –
பெற்றுக்கொள் என…
கரையோரம் குளிக்கும் பெண்களின் காமஸ்தூலங்களைத்
தொட்டேந்திய
நதியின் தூண்டலை என் கழுத்துவரை
நிரப்ப
நீரினை விரித்துப்படுத்துப் புரளும்
காற்றினை ஆழ உள்ளிழுத்தவனாய்….
ஆற்றைக் கடந்துகொண்டிருந்தபோது
அவன் எழுதினான்
பூமியில் ஊன்றிய பாதச்சுவடுகளை
வானில் வருடிய உச்சிமுகட்டை
இறுக அணைத்து தாங்கிப்பிடித்தபடி
மெல்ல நகரும் நதியைக் கொஞ்சம்
உண்டுகொள்கிறேன்
நீயும் செய்
நதியை விழுங்கியவன் ஆகிறாய்
என்பதாக….
துறவும் துய்ப்பும்
நதியை விழுங்கிய பின்
நதியைக் கடந்துகொள்வதெனக்
கூறியதைஆற்றில் வீசிக் கரையேறினான்
ஆற்றைக் கடந்துகொண்டிருந்தவன்….
கரையேறி நின்ற
துறவி சொன்னார்
நான் நதியால் கடந்துவந்தது
இன்னொரு முறை
தன்னை என…..
The saint crossing the river asked
to have a ‘darshan’ of the river
that was crossing the saint….
While crossing the river He observed
that the river won’t harm the saints….
Swallowing the query whether
it wouldn’t remove the dirt,
grabbing the back of the running river
and breaking it into splinters,
holding the powder in palm
He who was wearing the river along with me
sprinkled it upon his head….
While crossing the river
He reiterated
that the river abhors renunciation…
Ere the query which river’s family
could fall
blocking and holding it with his eye
said He _
came past the river
without causing any shortfall
for the river doesn’t like it at all…..
While crossing the river
He was asked to tell
“O River, I hereby renounce my revered saintliness
as sacred offering –
Have it….” Filling right up to the larynx the lure of the river
that has felt and held the luscious forms
of females
bathing along the river-bank
spreading the water, stretching on it,
inhaling deeply the swirling wind….
While crossing the river
He wrote
Let me gulp a little
the river that moves softly
holding tight the summit that caressed the sky,
The imprints on the soil
You too follow suit
You become one having the river mouthful…”
He who was crossing the waters _
throwing off those of the ascetic and the libertine
Saying, Let the river be crossed after gulping it all”
climbed on the bank.
The ascetic already on the bank observed _
That which he had crossed across the river
was his own Self once more…..
No comments:
Post a Comment