INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

THAMIZHNATHY

 A POEM BY

THAMIZHNATHY

Translated into English by Latha Ramakrishnan
(*First Draft)

Upon the Beira Lake
falls the Buddha Poornima Moon
At the embayment the sea’s roar
is combined with People’s uproar
The waves lash against the waves and scatter
raging as ever.
Nothing has changed.
Fortunately this time we have got sanction from the State
to shed tears.
Nothing is as simple as the four ‘A’s
that have by chance found a place in this verse
Alas!
Justice is upheld.
for the time being
This is a democratic country.
Suffice to have several assurances, compromises,
secret bargains
for filling the emptied coffers.
Those that can be filled up by nothing
are our Memories’ warehouses.
Nothing at all has changed here
Upon the tombs ruined
splash the tears of people tormented
Justice delayed till now
emit stench unbearable as that of
corpse rotting for long
Nandhi Kadal beats its heart and wail.
The lap of the sea’s creek
and the Bay of Bengal base
at Mullivaaikaal
are not one and the same!
At the bank of Beira Lake
paper lanterns
Here lamps oscillating on all sides
seeking Justice.
Let none believe hearsay
We are
They are
As before
As before

பேர வாவியின் மீது
புத்த பூர்ணிமா
நிலவு விழுகிறது
காலிமுகத்தில் கடலோசையுடன் சனங்களின் ஓசையும் கலக்கிறது
அலைகள் மாறா மூர்க்கத்துடன்
கரைமோதி மடிகின்றன.
மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை
அதிர்ஷ்டவசமாக, அழுவதற்கு இம்முறை
அரசிடமிருந்து 'அனுமதி' கிடைக்கப்பெற்றோம்.
இக்கவிதையில் தற்செயலாக வந்துவிழுந்த
நான்கு 'அ' கள் போல இலகுவானதில்லை எதுவும்.
அந்தோ!
நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது
தற்காலிகமாக இதுவொரு
ஜனநாயக நாடு!
சில வாக்குறுதிகள் விட்டுக்கொடுத்தல்கள்
இரகசிய பேரங்கள்
காலியாக்கப்பட்ட
கஜானாவை நிரப்பப்
போதுமானவை
எதைக் கொண்டும்
நிரப்பப்பட இயலாதவை
எங்களது
நினைவின் கிடங்குகள்.
இங்கு எதுவும் மாறிவிடவில்லை.
சிதைக்கப்பட்ட கல்லறைகளின் மேல்
வதைக்கப்பட்ட மனிதர்களது கண்ணீர் வீழ்கிறது
இதுவரை வழங்கப்படாத நீதி
நாட்பட்ட பிணமென நாறுகிறது.
நெஞ்சிலடித்து அரற்றுகிறது நந்திக்கடல்.
காலிமுகக் கடல்மடியும்
முள்ளிவாய்க்கால் வங்கக் கடலடியும்
ஒன்றன்று!
பேர வாவிக் கரையில்
வெளிச்சக்கூடுகள்.
இங்கோ நியாயம் வேண்டி நாற்றிசையும்
அலைவுறும் தீபங்கள்
கட்டுக்கதைகளை எவரும் நம்பவேண்டாம்.
நாங்கள் இருக்கிறோம்
அவர்கள் இருக்கிறார்கள்
அதேபோல
அதேபோல.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024