INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

PRABHA ANBU

 A POEM BY

PRABHA ANBU

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


It is he or she who has no time to think of us

who knows not the value of togetherness
who we keep thinking about,
loving all the more.
Searching for the call that was not
we keep turning the mobile
upside down
all the while
The smss sent in those days
prior to separation
become etched in our memory
after falling apart.
In our quest for love
a craving
a disappointment
tears abundant
become permanent
the parting
Even when we shed tears
Of agony intense
If the person whom we love the most
journey along as mere wayfarer
then the parting is not going to be of
any concern to them
Those living with the burden
of Love Indifferent
become wretched idiots.
Till the time we keep chasing them
in hot pursuit
they won’t follow suit.

நம்மை நினைத்துப் பார்க்க நேரமில்லாத
உறவின் மகத்துவம் புரியாத
ஒருவரைத்தான் நாம்
நேசித்துக்கொண்டிருக்கிறோம்
வராத அழைப்பைத்தேடி
அடிக்கடி தொலைபேசியைப் புரட்டுகிறோம்
பிரிவிற்கு முன்பான நாட்களில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள்
பிரிவின் பின்பு
மனதில் பாடமாகிவிடுகிறது
அன்பிற்கான தேடலில்
ஒரு ஏக்கம்
ஒரு ஏமாற்றம்
மிகுதியான கண்ணீர்
நிரந்தரமாகிவிடுகிறது
கதறித் துடித்து நாம் அழும் போதுகூட
நம் நேசத்துக்குரியவர்கள்
வழிப்போக்கரைப்போல்தான் பயணிக்கிறார் எனில்
நம் பிரிவு அவர்களை ஒருபோதும் கவலைப்படுத்தப் போவதில்லை
பலவீனமான அன்பை சுமந்து வாழ்வதால் முட்டாள்களாகிவிடுகிறோம்
நாம் தேடிக்கொண்டிருக்கும்வரை
நம்மை அவர்கள் தேடப்போவதில்லை....

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE