A POEM BY
ADHEEDHAN SUREN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
on the Full-Moon Day
When asked what was that
The toy given by Daddy
said the child seated in the hand
regally.
Wishing to continue the chat
when asked
the reason for it being
somewhere far above
‘It was I who placed it there’
said the child, joy-personified
stretching its little hand
towards the sky
To ward off the lurking danger of it
being snatched away by a fellow-child
It had placed it up there
the child whispered into the ear.
Reducing in size
with the passing of each day
On a day when it just went off the radar
The heart missing a beat
running hastily
When he informed that the Moon safely hidden up there
had gone missing
Slowly stretching forward the little hands
concealed at the back
and spreading them
clapping its hands
impishly laughing at he who
stood there feeling disappointed
not knowing the fact that
in order to play
It had brought it all the way
from there to here
the child’s eyes bore
Full Moons two more.
மேலும் இரண்டு...
-----------------------------------
முழுநிலவு நாளில்
ஜொலித்திட்ட அம்புலியைக் காட்டி
அது என்னவென்று கேட்டவனிடம்
தந்தை தனக்களித்த விளையாட்டுப் பொருள்
என பதில் தந்தது
கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த குழந்தை
இன்னும் பேச்சினை வளர்க்க வேண்டி
அவ்வளவு உயரத்தில் இருப்பதன்
காரணம் வினவிட
தான்தான் அங்கே வைத்ததாய்க் கூறி
பிஞ்சுவிரல் நீட்டிக் குதூகலித்தது
சக குழந்தையொன்று
அதனைப் பிடுங்கிக்கொள்ளும் அபாயாமிருப்பதால்தான்
எட்டாத் தொலைவில் வைத்திருக்கும் காரணத்தை
காதுக்குள் இரகசியாய்ச் சொன்னது
தினம் தினம் தேய்ந்து
முழுதாய்க் காணாமல் போனதொரு நாளில்
மனம் பதைபதைக்க
வேகமாய் ஓடிச் சென்று
வின்னில் பதுக்கப் பட்டிருந்த நிலவு
தொலைந்து போன செய்தியைச் சொன்னதும்
பின்னே மறைத்திருக்கும் கைகளை
மெல்ல முன் கொண்டுவந்து
விரித்துக் காட்டி
விளையாட வேண்டி
நேற்றே பத்திரமாய் எடுத்துவைத்திருப்பது தெரியாமல்
ஏமாந்து வந்திருப்பவனைக் கேலிசெய்து
கைகொட்டிச் சிரித்த
மழலையின் கண்களுக்குள்
மேலும் இரண்டு பௌர்ணமிகள்.
அதீதன் சுரேன்
No comments:
Post a Comment