INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

FAIZA ALI

 A POEM BY

FAIZA ALI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


My daughter and myself only.
On failing to come your grant
would be stopp ed,
said they”.
"At home all are starving
They gave us 2000 and brought us here”
“We have given you job. So, you have to be present”,
they insisted.”
_These reprimands and retributions
seem to be just and fair
Yet
Even in violence inherent
shocking sub-texts.
Wails
Laments
Screams
Gushing forth from the wounds
the same-colour blood.
That everything was for
just a bottle of liquor
is unbelievable but all the same true
as ever
in all strategic arousal of feelings
and emotions
it is these hapless poor folks
instigated; injured.
Seeing tears swelling
in the eyes of
My son sitting in front of laptop
and my daughter standing behind
on one leg
I couldn’t control my tears
O the Kings of Tomorrow
lying in wait to ascend the throne….
Beware!
Don’t you dare dream
of turning these gullible folks into
hoodlums and henchmen
for safeguarding your Seats of Power
Aaliya Aaliya
"நானும் மகளும் மட்டுமே..
வராவிட்டால்
சமூர்த்தி உதவித் தொகையை நிறுத்திடுவதாக சொன்னார்கள்..."
"வீட்டில் பசி பட்டினி..
2000 தந்தே
அழைத்து வந்தார்கள்.."
"வேலை தந்திருக்கிறோம்
வரவே வேண்டுமென்றார்கள்..."
நியாயமாய் தெரிகிற தண்டனைதான்..
எனினும்
வன்முறைக்குள்ளும்
அதிர்ச்சி தரும் உட்கிளைகள்..
எரித்தல்.. எரிதல்
ஒப்பாரி..
கூக்குரல்
பச்சைக் காயங்களில் கொப்பளிக்கும் ஒரேநிறக் குருதி.
வெறுமனே ஒரு போத்தல் சாராயத்திற்காகத்தான்
எல்லாமென்பதை
இன்னமும் முழுசாய் நம்ப முடியவில்லை.
எல்லாக் காலங்களிலும் போலவே
உணர்வு போதைகளில்
தூண்டப்படுவது
இவ்வப்பாவி ஏழைகளே
மடிக்கணனி முன்னமர்ந்திருந்த
மகனினதும்
அவன் முதுகிற்குப் பின்னால் ஒற்றைக்காலில் நின்ற
மகளினதும்
நிறைந்து தளும்பிய
கண்கள் கண்டு
அழுகை முட்டிக் கொண்டு வருகிறது எனக்கும்..
அரியணைக்காய்
காத்துக் கிடக்கும்
நாளைய
அரசர்களே..
மறுபடியும்
நீங்களும்
இதேபோல
அப்பாவிகளைக்
குண்டர்களாக்கி
உங்கள்
நாற்காலிகளையும்
காவல் காக்கலாம் என்று மட்டும்
தயவு செய்து
கனவு காணாதீர்கள்.

எஸ். ஃபாயிஸா அலி.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024