INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

 A POEM BY

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE BIRD AND ITS FLIGHT
From misfired targets
Imaginations spread
Then what would have happened to the bird?
In haste to reach its nest
It would have swam
With yet another nonchalance
It would have walked to the fruit garden
The reasons for refusing to fly
My son draws as bird’s exclusive moments
In the drawing sheet turned shooting flames
Behind the bars sits the bird
At the hour when my son had gone to play
I reminded the bird of flight
It keeps oscillating in instances beyond flying
At the instant it realized the bars as prison
It flies off again
There lies still that which
turning flight into word
then into stone
which I refrained
from throwing anon.

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

பறத்தலை இயல்பாக்காத பறவை
குறி தவறிய இலக்கிலிருந்து
விரிகின்றன கற்பனைகள்
பின்பு அந்த பறவை என்னவாயிருக்கும்?
கூடடையும் பரபரப்பில் நீந்தியிருக்கும்
இன்னோர் அலட்சியத்துடன்
பழத்தோட்டத்திற்கு நடந்திருக்கும்
பறத்தலை மறுப்பதற்கான காரணங்களை "பட்சியின் தருணங்களென "வரைகிறான் மகன்
கீலங்களாக்கப்பட்ட வரைதாளில்
கோடுகளின் பின்னே அமர்ந்திருக்கிறது பறவை
மகன் விளையாடப்போன மணித்துளியில் பறத்தலை நினைவூட்டினேன்
பறத்தலுக்கு அப்பாலான தருணங்களிலேயே அலைவுறுகிறது அது.
கீலங்களை சிறைகளென உணர்ந்த
தருணத்தில் மீண்டும் பறந்து விடுகிறது
மீந்து கிடக்கிறது
பறத்தலை சொல்லாக்கி
பிறகு கல்லாக்கி நான்
எறியாதிருந்த ஒரு கல்.

-லலித்தா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024