A POEM BY
ABDUL JAMEEL
showers the Rain
Scanning the trees
blows the wind softly
In the same spell of time
as voluptuous youth and
well advanced in age
transform the sun’s heat and light
and alight
With no time for respite
the rain-clouds keep running
non-stop
With no shame whatsoever
stark naked swims the Moon
As diamond stones the stars wink
turning us spell-bound
Waking up day after day
yawning
and wandering with a grin
then going to sleep
the Sun carries out its duties
Conversing with the pebbles
the river flows on rustling.
Though all these happen
As per Nature’s routine
As things stand today
Nothing of this takes place
in my land
Nor in my sky
is the terrible sorrow
that no matter how long we cry
tears can mitigate in no way.
Abdul Jameel
பருவ காலம் மாறி மாறி
பெய்கிறது மழை
மரங்களை வாசித்தபடி
இதமாக வீசுகிறது தென்றல்
ஓரே பொழுதிற்குள் இளந்தாரியாகவும் கிழடு தட்டியும்
உருமாறி விழுகிறது வெயில்
இளைப்பாற சிறு அவகாசமின்றி
ஓயாது ஓடுகிறது கார் மேகம்
கொஞ்சமும் வெட்கமின்றி அம்மணமாய் நீந்துகிறது பால் நிலவு
வைரக் கற்களென கண் சிமிட்டி கண்களை பறிக்கிறது விண் மீன்கள்
நிதம் நெட்டி முறித்து எழுவதும்
பல்ளிழித்து அலைவதும்
பின் உறங்குவதுமென
கடமையாற்றுகிறது சூரியன்
யார் கட்டுக்கும் அடங்கா புரவியென
ஆர்ப்பரிக்கிறது மா கடல்
கூழாங் கற்களோடு பேசியவாறு
சலசலத்தோடுகிறது நதி
இத்தனையும் இயற்கையின் பிரகாரம் அரங்கேறிடினும்
இதில் ஒன்றேனும் தற்போது
எனது நிலத்திலோ
எனது வானத்திலோ
நிகழவில்லையென்பதுதான்
சொல்லி அழுதும்
ஆற்றவியலா மாபெரும் துயர்
அப்துல் ஜமீல்
No comments:
Post a Comment