A POEM BY
SUGANYA GNANASOORY
as the soft sand slipping underneath
in the wave lashing against furiously
and return;
as the all too soft feet of
a baby rabbit
is now hurrying towards the school
pursuing the lambs
and chasing the butterflies
that lick and suck honey from the
roadside tiny slices……
Carrying the burden of school bag
bloated with books
and the afternoon lunch bag
I am flying backward
into my boyhood.
. என் பால்யத்திற்குள்
***********************
ஆக்ரோஷமாக
மோதித் திரும்பும் பேரலையில்
நழுவும் மென்மணலாய்
முயல்குட்டி ஒன்றின் மென்பாதங்களாய்
தரைபாவாமல்
தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை
ஆட்டுக்குட்டிகளைத் துரத்திக்கொண்டும்
சாலைப் பத்தையில் தேனருந்தும்
வண்ணத்துப் பூச்சிகளை விரட்டிக்கொண்டும்
பள்ளிக்கு விரைந்து கொண்டிருக்கிறாள்...
பெரும்சுமையான புத்தகப்பையையும்
மதிய உணவுப் பையையும்
சுமந்தபடி
பின்னால் பறந்துகொண்டிருக்கிறேன்
என் பால்யத்திற்குள்.
No comments:
Post a Comment