INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MADE-UP LEADERS
After a long time
A peel of laughter quite uncontrollable
surged inside
i curtailed it apprehending chemical changes
if I were t let it out.
But as if vowed to make me laugh at least once
All out to stage all the crafts they excel
The leaders chosen by me acted in
Different dimensions.
I remained unmoved by all the gimmicks
Employed by them as theatrics.
Creating several blockades
along the streets of the place
deserted and expansive
Promising water for our town
That has never had water of its own
Drafting plans to raise the dilapidated walls
of our villagers’ houses.
And, with the photos
taken during such occasions
with picture-perfect make-ups
and costumes
those men so hollow
stood all ready
for the vote-hunting to follow.
Agony unbearable
Sorrow hitherto contained inside
Everything bursting open
wailed in front of the leaders.
They began fleeing the way
they had arrived.
Now, witnessing truth real
widespread on them
I try to laugh a little.

வேடம் தாங்கும் தலைவர்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு
என்னுள் அடக்க முடியாத சிரிப்பு
பீறிட முயன்றது.
அதிலிருந்து பல்லேறு இரசாயன மாற்றங்கள் நிகழுமென
அடக்கிக்கொண்டேன்.
என்னை ஒரு முறையேனும் சிரிக்க வைக்க
பல வித்தைகளை கண்முன் அரங்கேற்றுவதற்காக
நான் தெரிவுசெய்த தலைவர்கள் பலகோணங்களில் செயற்பட்டனர்.
அவர்களுடைய மேடையேற்றலுக்கு
நான் அசையவே இல்லை.
உடைந்து விரிந்து கிடந்த ஊரின் தெருக்களில்
சிறு சிறு துளை அடைப்புக்களை செய்தமை.,
தண்ணீர் இல்லாத எம்மூருக்கு
தண்ணீர் வழங்கலுக்காக உறுதியளித்தமை,
இடிந்து கிடந்த கிராமத்தவர்களின் வீட்டுச்சுவர்களை சரிசெய்வதற்கான
திட்டங்களை லரைந்தமை.
இதுபோன்ற நிகழ்வின் போது பதிவுசெய்த புகைப்படங்களை தூக்கியப்படி
அடுத்துவரும் வாக்குவேட்டைக்காக வேடம் தரித்து நின்றனர்.
என்னிலிருந்து
தாங்கமுடியாத வேதனை,
அடங்கி கிடந்த துயரம்
அத்தனையும்
தலைவர்கள் முன் ஓலமிட்டன.
வந்தவழி தேடி அவர்களின்
ஓட்டம் ஆரம்பித்தது..
இப்போது
அவர்கள் மீது பரவிக்கிடந்த உண்மைகண்டு சிரிக்க முயல்கிறேன்.
~~~

மாரிமுத்து சிவகுமார். 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE