INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

PRIYA BASKARAN

 A POEM BY

PRIYA BASKARAN

Translated into English by Latha Rama krishnan(*First Draft)

THE WOUNDED SOUL


Morbid night
Midnight hour feeling so restive
As corpses buried deep in the coffin
in an all too dense darkness
you remain
immersed in memories.
The idea to associate with a cup of wine
in order to quieten the heart that rages deliriously like the autumnal leaves
can’t be but a sham of an alliance.
Loosen a little the blood-stained robe of yours
and allow the wound to heal.
Upon the labyrinthical entanglements of
your innermost heart’s sediments
in scripts indescribable
melting in passion many a love meant for thee
stroke as soft flowers
Think of Today as totally new
Everything is possible
As the Sky bursting open
in the scorching May Sun
let joy overflow
ever again.
Priya Baskaran

காயம் பட்ட ஆன்மா
*************************************
கொடும் இரவு
அமைதியில்லா நடுச்சாமம்
முகமறியா இருளில் சவப் பெட்டியில்
புதைந்து கிடக்கும் உடல்களென
நினைவுகளில்
அமிழ்ந்து கிடக்கின்றாய்
இலையுதிர் காலத்துக் காற்றாய்ப்
பேயாட்டம் போடும் மனதைச்
சமாதானப்படுத்த
கோப்பை மதுவுடன்
உறவாட நினைப்பதென்பது
போலிக்கூட்டணி
குருதி படிந்த அங்கியைச்
சற்றே தளர்த்தி இரணத்தை ஆறவிடு
உந்தன் ஆழ்மனப் படிவுகளின்
சிடுக்குமுடுக்குகளின் மேல்
சொல்லெனா லிபிகளில்
உருகிக் கிறங்கும் உனக்கான நேசங்கள்
மெல்லியப் பூக்களாய்
உரசட்டும்
இன்று
எல்லாமே புதிதென நினை
எல்லாமே சாத்தியம்
கத்தரி வெயிலில்
உடைப்பெடுக்கும் வானமாய்
மகிழ்ச்சி வெள்ளம்
பொங்கட்டும்
மீள மீள.
பிரியா பாஸ்கரன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024