INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

RAMESH PREDAN

THREE POEMS BY
RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
1. SALT WATER
Four year old little girl asked;
Sea water
tastes salty
just as my urine
Who has urinated daddy?
The father said:
This is like you.
A God, my girl.
At once she snapped
asking her father who was
walking along the seashore
with waves stroking his feet
‘If so
Is God bigger than me
like the sea
‘Yes, my dear daughter.
The sea is a droplet of your urine
Likewise
You are a droplet of God

உப்பு நீர்
நான்கு வயதுக் குழந்தை கேட்டாள்
கடல்
நீர் உப்புக் கரிக்கிறதே
எனது மூச்சா போல்
இது யார் பெய்தது அப்பா
அப்பா சொன்னான்;
இது உன்னைப் போல
ஒரு கடவுள் அம்மா
கரையில்
அலையுரச நடந்து கொண்டிருக்கும் தகப்பனிடம் வெடுக்கென்று கேட்டாள்
அப்படியென்றால்
அக் கடவுள்
என்னை விடக்
கடல் போலப் பெரியதா அப்பா
ஆம் மகளே
கடல் உனது சிறுநீரின் ஒரு துளி
அது போல
கடவுளின் ஒரு துளி நீ

ரமேஷ் பிரேதன்

(2)
SHE IS EVERYTHING
Out of her skin - She whose job is to roll cigars _
the odour of tobacco would sweetly emanate.
Hugging her all too close and sleeping _
Oh it is bliss consummate.
She herself is a Cuban cigar
In whose lips it is being smoked
That is the crux of the matter
Che Guevara or Castro or Me
She snores
Moving off her and rising
In the glow of the table lamp
I am recording this.

எல்லாம் அவள்
சுருட்டு சுற்றும்
வேலை செய்யும்
அவள் உடம்பில் புகையிலையின் மணம் கமழும்
அவளைக் கட்டி அணைத்தபடி
உறங்குவதில் உள்ள சுகம்
வேறெதிலும் இல்லை
அவளே ஒரு கியூபா சுருட்டு
அது யாருடைய உதடுகளில் புகைகிறது
என்பதில் தான் பிரச்சனை
சே குவேராவா காஸ்ட்ரோவா நானா
குறட்டைவிடுகிறாள்
அவளை விலகி எழுந்து
சிறிய மேசை விளக்கொளியில்
இதைப் பதிவு செய்கிறேன்

ரமேஷ் பிரேதன்

(3) LIFEFORCE
The child rolls down the stairs
within its reach
the ball rolls
The mother who came hurrying
slips and rolls
At her hand’s reach
the child
In its reach
a big ball
and a house
roll.
In the street
making way on both sides
We stand in a corner.

உயிரியக்கம்
படிக்கட்டுகளில் குழந்தை
உருள்கிறது
அதன் கை தொடும் தூரத்தில்
பந்து உருள்கிறது
பதறி ஓடி வந்த தாய்
தானும் சறுக்கி உருள்கிறாள்
அவள் தொடும் தூரத்தில்
குழந்தையும்
அது தொடும் தூரத்தில்
பெரிய பந்தும்
வீடும் உருள்கிறது
தெருவில்
இரு புறங்களிலும்
வழிவிட்டு
ஒதுங்கி நிற்கின்றோம்

ரமேஷ் பிரேதன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024