INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

RIYAS QURANA

 TWO POEMS BY

RIYAS QURANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1) I TOO SING ON SRI LANKA

I too sing on Sri Lanka
Amidst your racist cry delirious
This tiny little sparrow’s squeal
Is lost.
I too sing on Sri Lanka
It is to hear my wail and lament alone
Your eyes open
I too want to meet
How to go past your racist rage
Erected cordoning your heart
I too want to speak
But my words know not how to reach thee
Escaping your tongues
Your media
And the stones thrown
I too want to shake hands
But my chained hands reaching out
to your hands holding weapons
And hug you close
Alas, absolutely no chance.
While writing this
My body shudders
Your cruel face that refuses to regard this
as a deceased human body
exposes itself and fills me with fear
i too want to live
you are within me
I am immersed in your hatred
I remain in your prisons
I am at the forefront of your racist
Ideology
I am in your hit-list
The knives piercing my chest
For no rhyme or reason
are appointed by thee as
the errand-boys of power
That I would be an absolute fool to coin
such a poem
_ so you might think wrongly.
If I write what would you inflict on me
I know very well
Therefore, the Moon awaits in the sky
Writing about it I would entertain you
Writing about the ecstasies and
extreme pains of Love
I would enthrall you
And just like you
I too will sing on Sri Lanka
For, it is here in this land
escaping thee
my too small a Life
I am to live.

நானும் இலங்கையைப் பாடுகிறேன்

நானும் இலங்கையைப் பாடுகிறேன்
உங்கள் இனவெறிக் கூச்சலிடையே
இச் சிறு குருவியின் சத்தம்
தொலைந்து போகிறது
நானும் இலங்கையைப் பாடுகிறேன்
எனது ஒப்பாரியை ரசிப்பதற்கு மாத்திரமே
உங்கள் காதுகள் திறக்கின்றன
நானும் சந்திக்க விரும்புகிறேன்
உங்கள் இதயங்களைச் சூழ்ந்து
எழுப்பப்பட்டிருக்கும் இனவெறியை
எப்படித் தாண்டுவதென்று எனக்குத் தெரியவில்லை
நானும் பேச விரும்புகிறேன்
உங்கள் நாவுகளிலிருந்தும்,
உங்கள் ஊடகங்களிலிருந்தும்
வீசி எறியப்படும் கற்களிலிருந்து தப்பித்து
உங்களிடம் வந்து சேர எனது சொற்களுக்குத் தெரியவில்லை
நானும் கைகுலுக்க விரும்புகிறேன்
விலங்கிடப்பட்டிருக்கும் எனது கைகள்
ஆயுதங்களை வைத்திருக்கும் உங்கள் கைகளை
பிடித்துத் தழுவ எந்த வாய்ப்புகளும் இல்லை
நானும் கட்டி அரவணைக்க விரும்புகிறேன்
இதை எழுதும்போது,
எனது உடல் நடுங்குகிறது
செத்த பிறகும் அதை ஒரு உடலாக ஏற்க
மறுக்கும் உங்கள் கோர முகம் வெளிவந்து
என்னை அச்சமூட்டி அதிரச் செய்கிறது
நானும் வாழ விரும்புகிறேன்
எனக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்
நானோ உங்கள் வெறுப்பில் இருக்கிறேன்
உங்கள் சிறைகளில் இருக்கிறேன்
உங்கள் இனவாதத்தில் இருக்கிறேன்
உங்கள் எதிரிகளின் பட்டியலில் இருக்கிறேன்
காரணமற்று எனது மார்பில் பாயும் கத்திகளை
அதிகாரத்தின் ஏவலாளியாக நீங்கள் வைத்திருக்கிறீர்கள்
இப்படி ஒரு கவிதையை எழுதுமளவு
முட்டாளாக நானிருப்பேனென்று
நீங்கள் தவறாக நினைத்திருக்கக் கூடும்
எழுதினால் என்ன செய்வீர்களென்றும்
எனக்கு நன்றாகவே தெரியும்,
ஆகவே வானில் நிலா காத்திருக்கிறது
அதைப்பற்றி எழுதி உங்களை மகிழ்விப்பேன்
காதலின் பரவசங்களையும், துயரங்களையும்
எழுதி உங்களைத் திளைக்கச் செய்வேன்
உங்களைப்போல,
நானும் இலங்கையைப் பாடுவேன்
ஏனெனில், உங்களிடமிருந்து தப்பித்திருக்கும்
எனக்கான சிறிய வாழ்வை
இந்த நாட்டில் நான் வாழ வேண்டும்.

ரியாஸ் குரானா

(2)

Taking hold of one end of the river
I drag it along to a secret spot.
All too hastily I erect by-lanes
so as to prevent it from running
towards pits and hollows.
The fish that came swimming
upon seeing me turn and go away.
While I drag it along a crowded place
in the city
People there clapped vigorously.
The roar of the river was obliterated
by the applause.
There is only one reason
for dragging the river into our town.
She cannot walk all the way
to the river bank.
But, dragging along the rivers and wandering –
that alone has been
my favourite pastime.
நதியின் ஒரு முனையைப் பிடித்து
ரகசியமான இடமொன்றுக்கு இழுத்துவருகிறேன்.
பள்ளங்களை நோக்கி ஓடிவிடாமல்
துணைப் பாதைகளை
மிக வேகமாக உருவாக்குகிறேன்.
நீந்தி வந்த மீன்கள்
என்னைக் கண்டு திரும்பிச் செல்லுகின்றன.
நகரின் சனநெரிசலான பகுதியால்
இழுத்துவரும்போது
சனங்கள் திரண்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நதியின் இரைச்சல் கைதட்டல்களால்
அழிக்கப்பட்டிருந்தது.
இன்று நதியை ஊருக்குள்ளால்
இழுத்து வந்ததற்கு ஒரு காரணம்தான்
நதிக்கரைவரை அவளால் நடக்க முடியாது
ஆனால்,நதிகளை இழுத்துத் திரிவதுதான்
எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.




No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024