INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, October 5, 2025

MAHESH.PON

 A POEM BY

MAHESH.PON

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


THE TALE OF A CASTE

If there is one work set aside
generation after generation
to one particular caste
That is scavenging job
Reservation policy can never be
implemented here
Turning us permanent employees
and offering us salary hike
would improve our families’ financial condition.
would uplift the next generation’s
means of livelihood.
Only as long as this poverty prevails
our children would continue to come
with broomstick and Phenyl
You are free to frown
Cover your nose
Feeling all too repulsive
You might move away
for us to get inside the septic tank
all too readily
to remove its filth
paying us paltry wage
and keeping us poor
is good for thee
For, in the next generation
If all become officers
who of which caste can be
assigned the job?
Therefore
paying us paltry wage
and keeping us filthy
would indeed be the wise thing to do
Changing our name from Thuppuravu Paniyaalar
to Thooimai Paniyaalar
_ you claim it to be a great transformation.
Do you have any real modern option
for getting inside the septic tank? Ho, come on....
How so easily you threw us away
If we don’t come for even a few days
You won’t remove your own garbage
Till the time worms writhe in it – Right?
Did we make any undue demands?
Why broke the supporting hands
With fists raised
Asking for our rights?
That which you broke
are but the bones of countless hands
of our succeeding generations
that strive to reach
real great heights
Indeed, we are somewhat afraid
Hence
Let us teach our children
How to clean the toilets
spotless; shining
Let you as usual
turn your raw social justice
all the more glowing
and showcase them all over the place

ஒரு சாதியின் கதை
--------------------------------------
தலைமுறை தலைமுறையாய்
ஒரே சாதிக்கு மட்டும்
ஒதுக்கப்பட்ட பணியென்று ஒன்று
உண்டென்றால்
அது தூய்மைப் பணிதான்
இட ஓதுக்கீட்டு கொள்கையை
இங்கு மட்டும்
ஒருபோதும் அமல்படுத்தவே முடியாது
பணி நிரந்தரமும்
ஊதிய உயர்வும்
எங்கள் குடும்பங்களின் பொருளாதாரத்தை நிறைவு செய்யும்
எங்கள் பிள்ளைகளின்
உயர்கல்வியை உறுதி செய்யும்
அடுத்த தலைமுறையின்
வாழ்வாதாரத்தை உயர்த்தும்
இந்த வறுமை இருக்கும் வரைதான்
எங்கள் பிள்ளைகள்
பெருக்குமாறோடும்
பினாயிலோடும்
வந்து கொண்டே இருப்பார்கள்
நீங்கள் முகம் சுளிக்கலாம்
மூக்கை பொத்தலாம்
அருவருப்பு தாங்காமல்
அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போகலாம்
நாங்கள் தயங்காமல்
பாதாள சாக்கடையில் இறங்கி
அடைப்பு எடுப்பதற்கு
எங்களுக்கு சொற்ப கூலி கொடுத்து
வறுமையாகவே வைத்திருப்பதுதான்
நல்லது
அடுத்த தலைமுறையில்
எல்லோரும் அதிகாரி ஆகிவிட்டால்
குப்பை அள்ள
எந்த சாதிக்காரனை நியமிக்க முடியும்
ஆதாலால்
எங்களுக்கு சொற்ப கூலி கொடுத்து
அழுக்காகவே வைத்திருப்பதுதான்
ரொம்ப நல்லது
'துப்புரவுப் பணியாளர்' என்பதை
'தூய்மைப் பணியாளர்' என்று
பெயர் மாற்றியதைதான்
பெரிய மாற்றம் என்கீறிர்கள்
மலக்குழிக்குள் இறங்க
உங்களிடம் ஏதேனும் நவீன மாற்றம்
உண்டா?
எங்களை எவ்வளவு எளிதாக
அப்புறப்படுத்தீனீர்கள்
நாலைந்து நாட்கள்
நாங்கள் வராமல் போனால்
புழு நெளியும் வரை
உங்கள் வீட்டு குப்பைகளைக்கூட
அப்புறப்படுத்த மாட்டீர்கள்தானே
அப்படி என்ன கேட்டுவிட்டோம் என்று
எங்களுக்காக உயர்த்தப்பட்ட கைகளின்
எலும்புகளை உடைத்தீர்கள்?
நீங்கள் உடைத்தது
உயரத்தை எட்டிப்பிடிப்பதற்காக உந்தும்
எங்கள் அடுத்த தலைமுறைகளின்
எண்ணற்ற
கைகளின் எலும்புகளைதான் என்று
எங்களுக்கு நன்றாகத் தெரியும்
கொஞ்சம் பயமாக இருக்கிறது
ஆதலால்
எங்கள் பிள்ளைகளுக்கு
கழிப்பறையைப் பளபளப்பாக்கும்
உத்தியை என்னவென்று
கற்றுக் கொடுத்துவிடுகிறோம்
நீங்கள் எப்போதும் போல்
உங்கள் முரட்டு சமூக நீதியை
இன்னும் பளபளப்பாக்கி
ஊருக்குள் காட்சிப்படுத்துங்கள்

_ மகேஷ் பொன்

G.PUNITHAN (PUNITH PUNI)

A POEM BY G.PUNITHAN
(PUNITH PUNI)
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


SEWING BIRD

Leaves scattering in Circle Square
Triangle
Fool’s patterns
Bird’s beaks
Butterflies wings
Elephant’s slow –moving form
Parrots’ rays and arrays of
hues
Penguin’s snowy smile....
In the clothes cut and thrown
pouring a new life
with the flame of fingers _
Tailor the Terrific Artist!

Punith Puni
---
தையல் பறவை
வட்டம், சதுரம்,
முக்கோணத்தில் சிதறி விழும் இலைகள்.
முட்டாளின் கோலங்கள்,
பறவையின் அலகுகள்,
பட்டாம்பூச்சியின் இறகுகள்,
யானையின் மெதுவான உருவம்,
கிளிகளின் நிறக்கோலம்,
பென்குவினின் பனிப் புன்னகை—
வெட்டி எறிந்த துணிகளில்
விரல்களின் சுடரால்
புதிய உயிர் ஊற்றும் தையல் கலைஞன்.

கே.புனிதன் (புனித் புனி)

ANTON BENI

 TWO POEMS BY

ANTON BENI


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

“Buy some blossoms and go – won’t you, my boy?”
The lady selling flowers
calling out
reminds me of
rejection at the hands of

A God
A Beloved
A Wife

‘ஒரு மொழம் பூ வாங்கிப் போயேன்’
பூக்காரம்மா நினைவு படுத்துகிறாள் என்னை நிராகரித்த
ஒரு கடவுளை
ஒரு காதலியை
ஒரு மனைவியை.

...ஆண்டன் பெனி

(2)
I REMAIN ; FOR AN INFORMATION
The mobile sounds not, lying there
The door and the windows are not at all knocked at
The voices that usually call me might be far away
the fingers of light piercing into the room
have nothing of my identity.
I know not to to speak words of solace to myself
Why the sound of this calling bell alone
prove uproar unbearable
இருக்கிறேன்; ஒரு தகவலுக்காக.
***
கைபேசி ஒலிக்காமல் கிடக்கிறது
வாசல் கதவும் சன்னல்களும் தட்டப்படவே இல்லை
என்னை வழக்கமாக அழைக்கும் குரல்கள்
வெகு தொலைவில் இருக்கக்கூடும்
அறைக்குள் ஊடுறுவும் வெளிச்ச விரல்களில்
என் அடையாளம் இல்லவே இல்லை.
எனக்கு நானே ஆறுதலாகப் பேசவும் தெரியாது
இந்த அழைப்பு மணியின் நிசப்தம் மட்டும்
பேரிரைச்சலாக இருக்கிறது.
...ஆண்டன் பெனி

NIVITHA.C (DIVYA EESAN)

 TWO POEMS BY 

NIVITHA.C (DIVYA EESAN)

Rendered in Engish by Latha Ramakrishnan(*First Draft)



1. BREAKUP POEM

True, I am not able to love as before
Keeping you a little away
I loved my Self
My Family
My Education
Poetry
Name
Fame
My Success
Now that ‘little away’
has become many kilometers’ long way
Still
Telling that I too have a love
is my hope, you know?
When that hope
attempts to hold another person’s hands
I and my success
feel choked with sobs
How many more days
Your affection
Your concern
Your embrace
Your good traits
Your sincerity
This long camaraderie of ours
are going to make me keep
weeping
I know not
Yet
I am in no way
anywhere near
to give anyone
the boon of life
I have come far away
Even this BreakUp Poem
It is from Mars I write
and submit
Suffice that I was loved by thee

ப்ரேக்கப் கவிதை
........முன்பு போல் எனக்கு
காதலிக்கத் தெரியவில்லைதான்
உன்னை
கொஞ்சம் தூரம் வைத்துவிட்டு
என் சுயத்தை காதலித்தேன்
என் குடும்பத்தை காதலித்தேன்
கல்வியைக் காதலித்தேன்
கவிதையைக் காதலித்தேன்
பேரை காதலித்தேன்
புகழைக் காதலித்தேன்
எனது வெற்றியை காதலித்தேன்
இப்போது
அந்த கொஞ்சம் தூரம்
கிலோமீட்டர் கணக்கில் தூரமாகிவிட்டது
ஆனாலும்
எனக்கும் ஒரு காதல் இருக்கிறது
என சொல்லிக்கொள்வது
என் நம்பிக்கை தெரியுமா?
அந்த நம்பிக்கை
இன்னொரு ஆளின்
கைகளைப் பற்ற எத்தனிக்கையில்
எனக்கும் என் வெற்றிக்கும்
தொண்டையைக் கவ்விக்கொண்டு
அழுகை வருகிறது
உனது அன்பின் முன்
உனது அக்கறையின் முன்
உனது அரவணைப்பின் முன்
உனது நற்குணங்களின் முன்
உனது நேர்மையின் முன்
இந்த நீண்ட நட்பின் முன்
நான் எத்தனை நாட்கள்
தேம்பி தேம்பி அழுவேன் என
எனக்குத் தெரியவில்லை
ஆயினும்
உடனடியாக யாருக்கும்
வாழ்க்கை கொடுக்கும் தூரத்தில்
நான் இல்லவே இல்லை
ரொம்ப தூரம் வந்துவிட்டேன்.
இந்த ப்ரேக்கப் கவிதையைக் கூட
செவ்வாய் கிரகத்திலிருந்துதான்
எழுதி சமர்ப்பிக்கிறேன்
உன்னால் காதலிக்கப்பட்டேன் என்பதே எனக்குப் போதும்

_ திவ்யா ஈசன்

(2)
A YOUNG GIRL’S DREAM

I have a dream inside me
That is sitting in a cushion chair
In an air-conditioned room
On the top floor of
of the sixteen storeyed building
and reading Newspaper.
It is to shake hands with it
I have set out and come
My playfulness and childish pranks
I have left behind at the ground floor itself
In the first floor
I have left my dignity
In the second floor
My arrogance
In the third floor
I have left my kith and kin
In the fourth
My friends
In the fifth floor
Leaving my love too
Without a backward glance I climbed up
Step by step
And I had ascended till the tenth floor.
It is only to climb
We have to exert with legs paining
For descent
Getting inside the lift
We can get down in a whiff
Hence
Once I climbed down to the Third floor
And with my family took part
In the temple festival
And fought for mutton
Another time
Climbing down to the fourth floor
Drinking liquour neck-deep
with my friends
I lay on my vomit
Thinking that none would come to know
I climbed down to the Fifth Floor
for quite a few times
and remained chatting with my friend’s man
till dawn.
Once I kissed him.
Now I am
Not in the Tenth floor
But standing in the Sixth floor only
Know why?
If I climb four steps
This second rate life
pulls me two steps down
When I climb the steps
that would lead me to the Twelfth Floor
My economic condition
might pull me back.
And
Tradition and Culture
Caste and Religion
Power and authority
My femininity
might pull me backward
Two steps each
Yet
I keep climbing up the stairs
Not holding the handrails
But holding good books always
When I shake hands with that dream
I would jump off straight upright
from the Sixteenth Floor
Let none have any fear
I would then be flying in the air.
ஒர் இளம் பெண்ணின் கனவு
திவ்யா ஈசன்
.......
எனக்குள் ஒரு கனவு இருக்கிறது
அது பதினாறு மாடி கட்டிடத்தில்
கடைசி மாடியின் குளிரூட்டப்பட்ட அறையில்
குஷன் சேரில் அமர்ந்து
செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்கிறது
அதனோடு கைகுலுக்க வேண்டும்
என்றுதான் புறப்பட்டு வந்தேன்
என் விளையாட்டு தனத்தையும்
என் சல்லிச் சேட்டைகளையும்
தரைத் தளத்திலேயே விட்டுவிட்டேன்.
முதல் மாடியில்
என் பகுமானத்தை விட்டேன்.
இரண்டாவது மாடியில்
என் திமிரை விட்டேன்.
மூன்றாவது மாடியில்
என் உறவுகளை விட்டேன்.
நான்காவது மாடியில்
என் நண்பர்களை விட்டேன்.
ஐந்தாவது மாடியில்
என் காதலையும் விட்டுவிட்டு
திரும்பிப் பார்காமல் ஏறினேன்.
படிப்படியாக ஏறினேன்
பத்தாவது மாடிவரை ஏறிவிட்டேன்
ஏறுவதற்குதான்
கால்கடுக்க படியேற வேண்டும்
இறங்குவதற்கு
மின்தூக்கியில் ஏறி
சர்ரென இறங்கிவிடலாம்
ஆதலால்
நான் ஒருமுறை
மூன்றாவது மாடிக்கு இறங்கி
குடும்பத்துடன்
கோவில் கொடையில் கலந்துக்கொண்டு
கிடா கறிக்காக சண்டைப் போட்டேன்
இன்னொரு முறை
நான்காவது மாடிக்கு இறங்கி
நண்பர்களுடன்
மொங்க மது அருந்திவிட்டு
எடுத்த வாந்தியிலேயே படுத்துக்கிடந்தேன்.
யாருக்கும் தெரியாது என்றெண்ணி
நாலைந்து முறை
ஐந்தாவது மாடிக்கு இறங்கி
என் தோழியின் ஆளுடன்
விடியும் வரை பேசிக்கொண்டிருந்தேன்
ஒரு முறை முத்தமிட்டேன்
இப்போது நான்
பத்தாவது மாடியில் இல்லை
ஆறாவது மாடியில்தான் நிற்கிறேன்
ஏன் தெரியுமா
நான்குபடி ஏறினால்
இரண்டுபடி இறக்கிவிடுகிறது
இந்த இரண்டாம்தர வாழ்க்கை
நான்
பன்னிரெண்டாவது மாடிக்கு
படி ஏறும் போது
என் பொருளாதார நிலை
பின்னுக்கு இழுக்கலாம்
இன்னும்
மரபும் பாரம்பரியமும்
பண்பாடும் கலாச்சாரமும்
சாதியும் மதமும்
அதிகாரமும் ஆதிக்கமும்
என் பெண்மையும்
ஆளுக்கு இரண்டு படிகள்
பின்னுக்கு இழுக்கலாம்
ஆனாலும்
படி ஏறிக்கொண்டிருக்கிறேன்
கைப்பிடிகளைப் பற்றிக்கொண்டல்ல
என் கைப்பிடியில்
நல்ல புத்தகங்களைப் பற்றிக்கொண்டு
நான் அந்த கனவுடன்
கை குலுக்கியவுடன்
பதினாறாவது மாடியிலிருந்து
குத்தரக் குதிப்பேன்
யாரும் பயப்பட வேண்டாம்
அப்போது நான் அந்தரத்தில் பறப்பேன்
_ திவ்யா ஈசன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS