INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, October 5, 2025

K.MOHANARANGAN

 A POEM BY 

K.MOHANARANGAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

LIFE IS STRANGER THAN STORY

Fully knowing that
in this long journey
In some stop
Midway
One of the two
would alight and leave
we have got familiar with each other
not knowing that this is the moment
and this is that halt
we interacted with each other
pretending all along
that they are somewhere far away
in the future
At least for the sin of having travelled together
all this long
before alighting
you could have uttered ‘Fare thee well’
and moved on!
In the short while when I turned away
To see the roadside shops
You disappeared all too quietly
Whatever the story be
Before closing if
Should complete it too.
Against the expectation of the readers
As the wish of the writer
It could happen at an unexpected moment
Though initially it would be disappointing to face it
Once we accept it
The heart would slowly clear,
But that which you have given me and left
is not one of that.
It is an enduring angst
of reading by mistake
a story book sans the last page
- A feeling of all-time wreckage.

வாழ்க்கை விந்தையானது,
கதையைக் காட்டிலும்.
_________________________________________
நெடுவழிப் பயணமதில்
ஏதோவொரு நிறுத்தத்தில்
இடைவழியில்
இருவரில் ஒருவர்
இறங்கிப்போய்விடுவோம்
எனத் தெரிந்தேதான்
அறிமுகமாகிக்கொண்டோம்.
இப்போதுதான் அத்தருணம்
இதுதான் அந்நிறுத்தம்
என்பதறியாது,
இன்னும் தொலைவில்
எதிர் வரும் காலத்தில்
எங்கோ இருப்பதான
பாவனையோடு பழகினோம்.
இவ்வளவு தூரம்
சேர்ந்து பயணித்த பாவத்திற்காவது
இறங்கிப் போகுமுன்
இங்கிதம் கருதி
வருகிறேன் என்றொரு
வார்த்தையைச் சொல்லிப்
பிரிந்திருக்கலாம்!
நடைமேடைக் கடைகளை
வேடிக்கை பார்க்கவென
திரும்பிய சிறு பொழுதில்
அரவமின்றி மறைந்துவிட்டாய்.
எந்தக் கதையானாலும்
மூடி வைக்கும் முன்
முடித்தும் வைக்கவேண்டும்.
வாசிப்பவர்களின்
எதிர்பார்ப்புக்கு மாறாக,
எழுதியவரின் விருப்பமாக
எதிர்பாராத ஒரு தருணத்தில்
எதேச்சையாகவும் அது நேரலாம்.
எதிர்கொள்வதற்கு முதலில்
ஏமாற்றமாக இருந்தாலும்
ஏற்றுக்கொண்ட பிறகு
மெல்ல மனம் தெளியும்.
ஆனால் நீயெனக்கு
அளித்துச் சென்றதோ
அவ்வாறான ஒன்றல்ல
ஆயுளுக்கும் அலைகழிப்பது;
கவனக் குறைவாக
கடைசிப் பக்கமில்லாத
கதைப் புத்தகமொன்றை
படிக்க நேர்ந்ததைப் பொலொரு தீராத திகைப்பு.

க.மோகனரங்கன்

PAADHASAARI VISWANATHAN

 TWO POEMS BY 

PAADHASAARI VISWANATHAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

At the street corner
A tall gigantic Peepal Tree
Leaves in heart’s shape
As faraway temple bell
Quivering and swaying leaves
in thousands
wither and drop every day
Today
scattering in the wind
seeds in millions
the Peepal trees plays joyously.
For the Peepal Tree
it is but natural.
For Nature
It is sheer greed.
But
Why doesn’t this Nature has the hope
that suffice to have a handful of seeds
for plants and trees to grow...
Naturally Uncertainty!
Isn’t it essentially the nature
of being uncertain
Just like men....

தெருமுக்கில் ஓங்கி உயர்ந்ததொரு
அரசமரம்
இதயவடிவில் இலைகள்
தூரத்து ஆலயமணிஓசையாக
சிலிர்த்தசையும் இலைகள்
ஆயிரமாயிரமாக
நாளும் நாளும் உதிர்கின்றன..
இன்றைய நாளில்
கோடானுகோடி
விதைகளைக் காற்றில் இறைத்து
விளையாடுகிறது
அரசமரம்..
அரசமரத்துக்கு
அது இயல்பு
இயற்கைக்கோ
அது பேராசை
எனில்
கொஞ்சம் விதைகளிலேயே
செடிகொடி மரங்கள்
முளைத்து விடும்
எனும் நம்பிக்கை
இந்த இயற்கைக்கு
ஏனில்லை..
Naturally Uncertainty!
அடிப்படையில் அது
மகாஐயுறவுக் குணம் தானே
மனிதனுக்குப் போல..

பாதசாரி விஸ்வநாதன்

(2)
When lying in his aged bed one day my father
Drinking that moment his entire cup of milk
Gave the cup and said:

“Fully satisfied”.

The next moment he plunged into eternal quiet.
That which he silently spoke while leaving:

“Deep down Life is all sorrow
Do acts of kindness and good deeds alone...

Better still
Be satisfied with the outcomes of your deeds
Whatever they be
My dear son..
Nothing but satisfaction brings Peace
Life’s sense and substance is Peace

முதுமைப் படுக்கையில் ஒருநாள் மாலையில்
எம் தந்தை,
அத் தருணம் பாலை முழுக்க அருந்தியதும் டம்ளரைக் கொடுத்து விட்டுச் சொன்னார்:
"ரொம்பத் திருப்தி "
அடுத்த கணம் நிரந்தர அமைதியில் ஆழ்ந்து விட் டார்.
அவர் மௌனமாகச் சொல்லிச் சென்றது :
"வாழ்வின் உள்ளார்ந்த இருப்பு துக்கம்..
புரிக கருணை நற்செயல்கள் மட்டுமே...
அதனினும் மேலாக
புரியும் காரிய விளைவு யாவினும்
திருப்தி கொள்வாய்

மகனே..
திருப்தியே யாவர்க்கும் அமைதி..
வாழ்வின் அர்த்தம் அமைதி"

RIYAS QURANA

A POEM BY 

RIYAS QURANA

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

HOW TO HUNT A MEMORY?

Requirements
An hour past midnight
An old letter turned grey
A faded photograph
The scent of road after rains
A handful of silence

Recipe
First and foremost
Bolt the door of your room
From inside
Tightly shut the windows
Not allowing light to enter
Don’t unfold the old letter and read it
Just inhale the scent in it
The burden that those words carried once upon a time
would fill your lungs.
Don’t look at those in that faded photograph.
Just imagine what would have happened
a moment before or after taking that photo.
In that space
a void would surface
Now close your eyes
and inhale the smell of the road
Where it had torrentially rained
and stopped at last feeling drained.
That would drag thee
to a particular spot
Particular time slot
Don’t retrain it.
When the scent of that spot
Gets into your nerves
Sprinkle the silence in you hand
Over that vacant space.
Ilike an animal it would
Slowly come out
Try to run away in fear
That is but your memory
Look straight into its eyes.
In that instant when the suspicioun
Whether it is yours
Or you.....
Murder it
mercilessly.
If not
It would have you as its prey
and hunt you then and there.
If you wish _
Instead of this
You can try near death now
but escaping somehow
Well _
Do you have other methods
Please tell.

ஒரு ஞாபகத்தை வேட்டையாடுவது எப்படி?
00000000000000

தேவையானவை:
நள்ளிரவு கடந்த ஒரு மணித்துளி.
பழுப்பேறிய பழைய கடிதம் ஒன்று.
நிறம் போன புகைப்படம்.
மழை பெய்து ஓய்ந்த சாலையின் வாசனை.
ஒரு கைப்பிடி மௌனம்.
செய்முறை:
முதலில் உங்கள் அறைக்கதவை
உள்பக்கமாகத் தாழிடுங்கள்.
வெளிச்சம் உள்ளே வராதபடி
சாளரங்களை இறுக மூடுங்கள்.
பழைய கடிதத்தைப் பிரித்துப் படிக்காதீர்கள்.
அதிலிருக்கும் மையின்
வாசனையை மட்டும் சுவாசியுங்கள்.
அந்த வார்த்தைகள்
ஒரு காலத்தில் சுமந்திருந்த பாரம்
உங்கள் நுரையீரலில் நிறையும்.
நிறம் போன புகைப்படத்தில்
இருப்பவர்களைப் பார்க்காதீர்கள்.
அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட நொடிக்கு
முன்னும் பின்னும் என்ன நடந்திருக்கும்
எனக் கற்பனை செய்யுங்கள்.
அந்த இடைவெளியில்
ஒரு வெற்றிடம் உருவாகும்.
இப்போது உங்கள் கண்களை மூடி
மழை பெய்து ஓய்ந்த
சாலையின் வாசனையை நுகருங்கள்.
அது உங்களை
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
இழுத்துச் செல்லும்.
தடுக்காதீர்கள்.
அந்த இடத்தின் வாசனை
உங்கள் நரம்புகளில் ஏறியதும்
கையில் வைத்திருக்கும் மௌனத்தை
அந்த வெற்றிடத்தின் மீது தூவுங்கள்.
அது ஒரு விலங்கு போல
மெல்ல வெளியே வரும்
பயந்து ஓட முயற்சிக்கும்
அதுதான் உங்கள் ஞாபகம்
அதன் கண்களை நேராகப் பாருங்கள்.
அது உங்களுடையதோ
அல்லது நீங்களோ என
சந்தேகம் வரும் ஒரு நொடியில்...
அதை இரக்கமில்லாமல்
கொன்றுவிடுங்கள்.
இல்லையென்றால்
அது உங்களை வேட்டையாடிவிடும்.
நீங்கள் விரும்பினால்
இதற்கு மாறாக
செத்துப் பிழைத்துப் பார்க்கலாம்.

சரி,உங்களிடம் வேறேதும்
வழிமுறைகள் உண்டா?
000000000000000

Thursday, July 31, 2025

JEYADEVAN

 A POEM BY

JEYADEVAN
(*The original Tamil poem was uploaded by the Poet on 7th June)
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)





We allow not even the dead
to rest in peace
in tomb......
We tap, wake them up and make them stand
as statue
or portrait....
We never ever ask
what the dead one likes
We prepare the sugary Paniyaaram
which is our favourite
as offering on the Thirtieth Day
even for father who died of Diabetes.
That they keep surveillance over
each and every move of us
- we fear as ever
That’s why we allow them not
inside our bedroom.
Beside god I placed
the photo of mother
who passed away last year
This would incur god’s displeasure
- said grandma Shenbagam
And my wife promptly made it hang
in the centre of hall.
While being alone
We need their memories
to keep us company.
If someone comes along to converse
we move them away from reminiscence.
No matter what,
one day we too would hang
watching all these without any pang....
Just as a nest with the sparrow gone
is viewed by a dead tree thereon .

இறந்தவர்களை கூட நாம்
நிம்மதியாக
உறங்க விடுவதில்லை சமாதியில்...
தட்டி எழுப்பி வந்து நிற்க வைத்து விடுகிறோம் சிலையாக
அன்றி படமாக......
இறந்தவர்கள் விருப்பத்தை நாம்
கேட்பதே இல்லை
நமக்குப் பிடித்த சக்கரை இனிப்பு பணியாரத்தை செய்து
வைத்து விடுகிறோம்
முப்பதாம் நாள் படையலில்...
சர்க்கரையில் இறந்து போன அப்பாவுக்கு கூட..
நம் ஒவ்வொரு அசைவையும் அவர்கள்
கண்காணிக்கிறார்கள் என்று
அச்சப் படுகிறோம்...
ஆகவேதான் படுக்கை அறைக்கு
அவர்களை நுழைய விடுவதில்லை....
கடவுளுக்குப் பக்கம் வைத்தேன்
கடந்த ஆண்டு இறந்து போன அம்மா படத்தை.....
இது சாமிக் குத்தம் என செண்பகம் பாட்டி
சொன்னார்..
நடு ஹாலில் மாட்டி விட்டாள் மனைவி.
தனியாய் இருக்கும் போது நமக்கு
அவர்கள் நினைவு தேவைப் படுகிறது
பேச்சுத் துணைக்காய்....
பேச்சுக்கு ஆட்கள் வந்தவுடன் அவர்களை கழற்றி விட்டு விடுகிறோம் நினைவிலிருந்து...
எப்படியோ ஒரு நாள் நாமும் தொங்குவோம்
எந்த சஞ்சலமும் இன்றி இவ்வளவையும்
பார்ப்போம்...
குருவி பறந்து போன கூட்டை
ஒரு காய்ந்த மரம் பார்ப்பது போல

ஜெயதேவன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS