INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

NAAVUK ARASAN (ARASAN)

 TWO POEMS BY 

NAAVUK ARASAN (Arasan)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)
The appearance synced well
with the details given by the memory-data.
Grey-hair just begun
Age in early-fifties,
Traces of young age
still remaining,
With recognition dawned
eyes filled with quietude supreme.
The long slender neck of peahen
being the crowning feature.
A smile common to one and all!
Unable to retrieve the name
instantaneously
from the dried up layers of memory.
Of course with these sufficient inputs
without much difficulty
in a matter of ten seconds
the old face could be replenished
and the bygone association renewed
at once!
But, wonder why
most of these fervours
don’t reach that stage ever.
That day also
I kept my distance and moved away
as usual!

நினைவுத்தரவு
சொல்லிய விவரங்களுடன்
அந்தத் தோற்றம் ஒத்துப்போனது !
இள நரை
ஐம்பதுகளின் ஆரம்பக்கட்டம் ,
ஆனாலும்
இளமையின் தடயங்கள் ,
அடையாளம் தெரிய
கண்களில் அசாதாரண அமைதி,
அம்சமாகத் தேர்வுசெய்யும்
பெண்மயிலின் நீள்கழுத்து ,
எல்லாத்துக்கும் பொதுவான
புன்னகை !
வறண்டுபோன
ஞாபக மடிப்புகளுக்குள்ளிருந்து
பெயரை உடனடியாக மீட்கமுடியவில்லை !
போதுமான இவைகளுடன்
தயக்கமில்லாமல்
பத்துநொடியில்
பழைய முகத்தைப் புதிப்பித்து
அறிமுகம் செய்திருக்கலாம் !
ஏனோ தெரியவில்லை
பெரும்பாலான முனைப்புகள்
அந்தக் கட்டம்வரை போவதில்லை !
அன்று அப்படியே
தூரநின்று விலகிவிட்டேன் !

அரசன்

(2)
At times when you feel fed up
this is how the drizzle and the sprinkling drops
keep the door wide opened.
Just as hues dissolving and oozing out of a painting
With the lightning quivering within
an ordinary rainy day
would be rushing to the next scene!
As twins born entwined
unusually two rains simultaneously!
In the thunder-lightning moment of the first rain
those who walk around me
unfolding their umbrellas and seeking shelter
the rain pours excluding them.
The second rain
as usual
pondering over something
immersed in some dream
cleansing the corridor
thoroughly!
I am going past, drenched utmost.
In an unexpected corner
The third rain too commences.
which pours
exclusively inside me!

பொழுது போகாத நேரத்தில்
இப்படித்தான்
வாசல்களைத் திறந்துவைக்கின்றன
திவலைத் தூறல்கள் !
ஒரு ஓவியத்திலிருந்து
நிறங்கள் கரைந்து வழிவதைப்போல
தனக்குள்ளே சிலிர்த்துக்கொண்ட மின்னலுடன்
அடுத்த காட்சிக்கு விரைகிறது
சாதாரணமானவொரு மழைநாள் !
ஒட்டிப்பிறந்தது போல
அசாதரணமாக இரண்டு மழை ஒரேநேரத்தில் !
முதல் மழையின்
இடிமுழக்க நொடியில்
என்னைச் சுற்றி நடந்தவர்கள்
குடை விரித்து ஒதுங்கிக்கொள்ள
மழை அவர்களை விலத்திவைத்தே பொழிகிறது !
ரெண்டாவது மழை
எப்போதும்போல்
ஏதோவொரு யோசனையுடன்
ஏதோவொரு கனவு கண்டுகொண்டு
நடைவழியை சுத்தமாகக் கழுவிக்கொண்டிருக்கிறது !
நான்
நனைந்து கடந்துகொண்டிருக்கிறேன் !
எதிர்பாராத திருப்பத்தில்
மூன்றாவது மழையும் சேர்ந்துகொள்கிறது
அது பிரத்தியேகமாக
எனக்குளே பெய்கிறது !

FAIZA ALI

  A POEM BY 

FAIZA ALI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

CROSSING THE RIVER........
Unable to process the incident
in order
Memories torn here and there and hanging
Miserably
With their tips feeling sticky
Tears or blood – what is it
Comprehension proving difficult
This is how
These days in moments unbearable
Often with limbs turning numb I turn frozen.
Leaving me alone stationed in one corner
The infinity called Time running off
going faraway
and disappear.
That day being in the womb of my mother dear
Who a teacher
Wading through the waters in wooden canoe with ashen-moss widespread
Then itself
reaching the bank across
Day-in and day-out
I had inhaled the salubriousness of this chill river
Blissfully quivering!
Later on
In my childhood
This same river
Sang lullaby to me
Who half-asleep
Going in Vaapaa’s cycle
Which lt flew like the Magic Carpet!
When I a second standard student
Hastened in my small cycle
to the college quarters
accompanied by my dear friend Hafeeza
to learn A, B,C from the Sovereign queen of Smile
Mrs.Hostha teacher
And as a Higher Grade student
Going on foot treading distances long
To the same college
For the science subject not available
In local school
The same river dear
sprayed tiny specs of ice
fanning me thus
so turning into vapour
the sweat-droplets filling my uniform all over
For one and all
Who went across
For whatever need
Again and again
Sprinkling salubrious cool upon them
And taking them to the other bank.
The very same river
Would turn into a slaughter house
Butchering six, seven precious lives one day
Not just me nobody had any inkling.
With bags carrying books and notebooks
All drenched
Uniforms sleeping on the fence
And the tender bodies of children
Aligned in a row…..
Ho,
The day falling and rising
Unable to forget ever
The cruelty of that giant wave and the chaotic experiences
It heaped on us
Is it to remind us of all these
Yet again
This has come to be
Tsunami was Nature’s nonsense
Ordained by Almighty
So we tried to console ourselves.
But this
Now?
*
Constructed long ago
with all and sundry
donning the role of its guests of grandeur
in this bridge to be opened soon
in a gala ceremony
henceforth
whenever I happen to go across
that which would bang against my face
like balls of fire
is the air
of the final tender breath
exiting the lungs and arteries
of those hapless children
on the throes of death
absolutely abandoned
struggling again and again
to survive in vain
fatigued to the core…..
_ Just that and nothing more.
Aaliya Aaliya
இதே ஆற்றங்கரையில்..!
சம்பவங்களைக் கோர்வையாக்க முடியவில்லை.
இடையிடையே நினைவுகள் அறுந்து தொங்கும் முனைகளெங்கும்
கண்ணீரா.. குருதியா எனப் பிரித்தறியமுடியா ஈரப்பிசுபிசுப்பு.
இப்படித்தான்..
இப்போதெல்லாம் தாளமுடியாப் பொழுதுகளில்..
அடிக்கடி உணர்வுகள் மரத்து உறைந்து போய் விடுகிறேன்.
என்னை மட்டும் ஓரமாய் நிறுத்தி விட்டு
எங்கெங்கோ தொலைதூரமாய் ஓடித் தொலைந்துபோய் விடுகிறது..
காலமெனும் முடிவிலி.
அன்று..
சாம்பல் பாசிபடர்ந்த
மரத்தோணியில் ஊடறுத்து
நாளும்பொழுதும்
ஆசிரியப் பணிக்காய்
அக்கரைக்குப் பயணித்த
அன்னையின்
வயிற்றறைக்குள் சுருண்டுகிடந்த போதே..
சுவாசித்துச் சிலிர்த்த
இக்குளிராறு..!
பிறகும்,
பிள்ளைப்பருவத்தில்
மந்திரக்கம்பளமாய் பறந்த
வாப்பாவின் சைக்கிளில் அரைத்தூக்கத்தில்
எனைத்தாலாட்டிய அதே ஆறு..!
ரெண்டாம் வகுப்பில்
மத்தியகல்லூரி குவார்ட்டஸில்
புன்னகையரசி
Mrs.Hostha டீச்சரிடம்
A,B,C..
படிக்கவென
அன்புத் தோழி hafeela வுடன்
குட்டிச்சைக்கிளில் விரைந்த வேளையிலும்..
உயர்தரத்தில்..
ஊர்ப்பள்ளியில் இல்லாத விஞ்ஞானத்துறைக்காய்
மறுபடியும்
அதேகல்லூரிக்கு
நடையாய் நடக்கையிலும்...
சீருடையில் துளிர்த்த உப்புத்துளிகளை ஆவியாக்க
பனிச்சீவல்கள் விசிறி
உடல்குளிர்த்திய
அதே ஆறு...!
எவரும்..
எந்தவொரு தேவைக்கும்
எல்லைதாண்டுகையில்
மறுபடியும்... மறுபடியுமாய்..
குளிர்தெளித்து
அக்கரைப்படுத்தும் அதே ஆறு..
துடிதுடிக்க
ஆறேழு உயிர் பறிக்கும் கொலைக் களமாகுமென
ஒரு போதுமே
நானென்ன
எவருமே எண்ணியிருக்கவில்லைதான்.
ஈரமூறிய புத்தகப்பைகளும்..
வேலியில் தூங்கிய சீருடைகளும்..
வரிசையாய்
கிடத்திய பிஞ்சுடலங்களும்..
அன்றைக்கு விழுந்தெழுந்ததும்
என்றைக்கும் மறக்கவியலாததுமான
அந்தப்பேரலையின் கொடூர அனுபவங்களை
மறுபடியுமாய்
நினைவூட்ட வந்ததோ..?
எவ்வளவோ இழந்தும்..
சுனாமி இயற்கை அனர்த்தம்..
இறை நியதி
என்பதில் சிறிது ஆறுதல் கொண்டோம்.
ஆனால்
இன்று,
இது.........?
0
எக்காலமோ கட்டிமுடிக்கப்பட்டு
யார் யாரோவெல்லாம்
பேரதிதிகளாகி..
வெகு ஆடம்பரமாய் திறக்கப்படப்போகும்
இவ்வாற்றிடைப் பாலமதில்
மறுபடியும்
இனிப் பயணப்படும் போதெல்லாம்..
முகம் மோதித்
தீயாய் தீய்த்துப் பொசுக்கிடப்போகிறது..
இப்போது இவ்வதிதிகளால் கைவிடப்பட்டு..
இதே ஆற்றங்கரையில்
அநாதரவாய்..
மிக நிர்க்கதியாய்..
மிகப்பரிதாபமாய்..
உயிருக்குப் போராடிக் களைத்த
அப்பிஞ்சுக் குருத்துகளின் மென்மையான சுவாசச்சிற்றறைகளில் இருந்தும்
கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறிக் கொண்டிருந்த இறுதிச் சுவாசத்தின்
மூச்சுக்காற்று மட்டும்தான்.
எஸ். ஃபாயிஸா அலி.

SHANMUGAM SUBRAMANIAM

 TWO POEMS BY

SHANMUGAM SUBRAMANIAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)


The dust settled
on the plants
along the corners of the by-lanes
branching out of the highway
disband when wagons speed past
as I am in the rear seat of the two-wheeler
the road running backward refused to halt
Inside the car with all four doors glass-shutters
closed
amidst the AC’s mistiness
frozen faces with nil reaction
filled with the expression of speeding in order to
get back that which is given by mistake
making me abandon that which I wished to obtain
at the curve entering inside the highway
a tiny emerald leaf not dust-filled
Shanmugam Subramaniam
நெடுஞ்சாலையிலிருந்து கிளைத்து செல்லும் உட்சாலை ஓரங்களில்
செடிகளில் மண்டியுள்ள தூசு
வாகனங்கள் வேகமாய்க் கடந்து போகையில் கலைகிறது
இருசக்கர வாகனத்தின் பின்இருக்கையில் அமர்ந்திருப்பதால்
சாலையின் ஓரம் பின்னோடுவது நிற்க இணங்கவில்லை
நான்கு கதவுகளின் கண்ணாடிகளையும் மூடிவிட்ட
கார்களின் கண்ணாடியின் உட்புறம்
குளிர்சாதனத்தின் மூட்டத்தினூடே எதிர்வினையற்ற உறைமுகங்கள்
தவறுதலாய் தந்துவிட்டதை
கேட்டு திரும்பபெற விரைவது போன்ற பாவம் கவிய
பெற நினைத்ததை கைவிட வைக்கிறது
கிளை சாலையிலிருந்து
நெடுஞ்சாலைக்குள் இணையும் திருப்பத்தில்
தூசு அடராத மரகத சிற்றிலையொன்று.
- எஸ். சண்முகம் -


(2)
From the same camera
Ere the same image gets recorded from three angles
Slanting it a little though the tree leaned
The blue above inadvertently gained more depth and density.
The land curving inside me
Turning into roots and entwining
spread horizontally
In the moisture of the sand-cleft
There sprouts the tender leaf of Life.
In order to prevent Time
that eagerly awaits to touch it
In the first ray of light
From slipping away
I could do nothing beyond
reinstating me into a line
in reverse angle.

அதே புகைப்பட கருவியிலிருந்து
மூன்று கோணங்களில் ஒரே காட்சி பதியும்முன்
ஒருபக்கமாக சாய்த்ததும் மரம் சாய்வானாலும்
மேலுள்ள நீலம் தற்செயலாக ஆழ்மையடைந்தது
நிலம் எனக்குள் குவிந்து
வேர்களாகி பின்னி கிடைக்கோட்டில் பரவின
மணல் இடுக்கின் நீர்மையில்
துளிர்த்தெழுகிறது உயிர்க்கொழுந்து
முதல் ஒளிக்கீற்றில் தீண்ட எதிர்நோக்கும் காலம்
நழுவுவதை தடுக்க
தலைகீழ் கோணத்தில்
என்னை கோடாக்கிவிடுவதைத் தவிர
வேறோன்றும் கைவரவில்லை.
- எஸ். சண்முகம் -


M.M.BYSEL

 A POEM BY 

BYSAL


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

I saw the man ascending the mountain
carrying from the base a small stone.
The stone also walks on
For fulfilling his sacred vow.
Around the tree Vows overflow
In hundred-thousands.
Upon those piled up one above
the other
He places his stone of sacred vow.
In many a rainy season
some stones
would roll down
and reach the basement
Someone would carry the same stone
and climb on the mountain
So it would be a stone
bearing at the same time two vows
and also
at times
having borne hundreds of vows.

அடிவாரத்திலிருந்து
மலைக்கு மேல் சிறுக் கல்லை சுமப்பவனை
பார்த்தேன்
கல்லும் நடக்கிறது
அவனுடைய
நேர்த்திக் கடனுக்காக
மரத்தைச் சுற்றி பல லட்சம் நேர்த்திக் கடன்கள்
ஒன்றின்மேல் ஒன்றாக அழுந்திக் கிடக்கும் அதன் மேல் வைக்கிறான்
நேர்ச்சைக் கல்லை
பல மழைக் காலங்களில்
சில கல்கள்
உருண்டு அடிவாரம் செல்லும்
யாரோ ஒருவர் அதேக் கல்லை மீண்டும் எடுத்து மேலே செல்வார்

இரண்டு நேர்த்திக்கடன்களை சுமந்து கொண்டும்
சில நேரங்களில்
பல நூறு நேர்ச்சைகளை சுமந்தக் கல்லாகவும் அது இருக்கும்.

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS