INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 24, 2022

KANIAMUDHU AMUTHAMOZHI

A POEM BY
KANIAMUDHU AMUTHAMOZHI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE DAWN OF ANOTHER NIGHT!


With night crawling beside
the sleep of aloneness moves on.
Through a tiny hole sans wake or sleep
turning the dark unseeing
I look intently.
The brazen hours of light
exerts pressure on the neck
that curves toward the lips
emitting radiance.
The immense net of love
bends the sky.
Hearing the sound of the barking dogs
shaking the hand and severing the net
the great expanse of void returns.
Viewing the poem unwritten
wading through the very life
there dawns yet another night.
Amuthamozhi Mozhi
விடிகிறது இன்னொரு இரவு!
-------------------------------------------------
இரவு உடன் ஊர்ந்துவர
நகர்கிறது தனிமையின் உறக்கம்.
விழிப்பும் உறக்கமுமற்றதான ஒரு சிறு துளை வழி
இருட்டை குருடாக்கி உற்றுப்பார்க்கிறேன் .
ஒளி சிந்தும் உதடுகள் நோக்கி
வளையும் கழுத்தை இறுக்குகின்றது
வெளிச்சத்தின் வெட்கமற்ற பொழுது.
காற்றில் பரவும் இசைக் கடல் ஈர்க்கிறது எங்கோ
கைப்பற்றி.
அளப்பரிய அன்பின் வலை வானத்தை
வளைக்கிறது.
குரைக்கும் நாய்களின் ஒலி கேட்டு
கை உதறி வலை அறுத்து மீள்கிறது சூன்யத்தின்
பெருவெளி.
உதடுகளில் எழுதப்படாத ஒரு கவிதை
உயரின் வழி பயணிப்பதைப் பார்த்தபடி
விடிகிறது இன்னொரு இரவு.

MAANASEEGAN

 A POEM BY

MAANASEEGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
THE GLOBALIZED TAINT



I know not the one who planted the bomb
Nor he who had killed the child
or the one who turned the tower to ashes.
I give you my word, believe me
The blood stain in his hand
he might have removed with some water
In your eyes that search for its traces in my beard
the blisters of History lurks
You asking me to own all his wrongs
all because we look in the same direction
and offer prayers
the soil where we played together
observes in anguish.
If your anger is at my name
Pardon me;
My father is no more.
Just as you
I too get blood-oozing nightmares
But
both of us are endowed with a life
wherein at dawn
wading through wife’s laments
We have to rush for our respective workplace.
Feeling acutely agitated at seeing
even a child holding a toy-gun
and go running towards it
is what I have grasped as God.
Even if not that much
God can’t be some football player
revelling in kicking the heads
of Kafirs and Yahudis
Denser than the tears and queries
of fellowmen
are those of the Day of Judgment.
Everyday you turn me into a Seetha
and push me into flames.
After each such immersion in fire
the coronation happens for someone
For me my very place turns into
a wasteland
Due to the wrongs of some
and the distrusts of many
I remain anguished as the Bakrid goat.
When the Jesus resurrected and return
pushing aside all his devout loyalists
hold me in a tight embrace
My globalized taint
might be erased.
Maanaseegan

குண்டு வைத்தவனையோ,
குழந்தையைக் கொன்றவனையோ,
கோபுரத்தைத் தகர்த்தவனையோ ,
சத்தியமாய்
எனக்குத் தெரியாது .
தன் கரங்களில்
படிந்த இரத்தத்தை
அவன்
எந்த நீர் கொண்டோ
அழித்திருக்கலாம்.
என்தாடியில்
அதன் தடயங்களை
விசாரிக்கும்
உன் கண்களில்
ஒளிந்திருக்கிறது
வரலாற்றின் கொப்புளம் .
ஒரே திசை நோக்கி வணங்குவதால்
அவன் தவறுகளுக்கு
நான் பொறுப்பேற்க வேண்டுவதை
வேதனையோடு கவனிக்கிறது
நாம் சேர்ந்து விளையாடிய மண்.
உன் கோபம்
என் பெயர் மீது எனில் ,
மன்னிக்கவும் ;
என் தந்தை இறந்து விட்டார் .
குருதி கொப்பளிக்கும் கனவுகள்
உன்னைப் போலவே
எனக்கும் வருகின்றன;
ஆனால்,
விடிந்தவுடன்
மனைவியின் புலம்பல்களுக்கு நடுவே
பணிக்குச் செல்லும் வாழ்க்கைதான்
இருவருக்கும் வாய்த்திருக்கிறது.
பொம்மைத் துப்பாக்கியை
கையில் ஏந்தி விளையாடும் குழந்தைக்காகக் கூட
மனம் பதைத்து
ஓடி வரும் உணர்வைத்தான்
நான்
கடவுள் என்று புரிந்து வைத்திருக்கிறேன்.
அந்தளவிற்கு இல்லையென்றாலும்
காஃபிர்கள் மற்றும் யஹூதிகளின்
தலைகளை உதைத்து விளையாடும்
கால்பந்து வீரனாக
கடவுள் இருக்க முடியாது.
நியாயத் தீர்ப்பு நாளின்
கேள்விகளை விட
அடர்த்தியானவை
சக மனிதனின்
கண்ணீரும், இரத்தமும் .
என்னை தினந்தோறும்
சீதையாக்கி தீயில் தள்ளுகிறாய் ;
ஒவ்வொரு
அக்னி பிரவேசத்திற்குப் பிறகும்
யாரோ ஒருவருக்கு
பட்டாபிஷேகம் நடக்கிறது ;
எனக்கோ
சொந்த ஊரே காடாகிறது.
சிலரின் தவறுகளாலும்,
பலரின் சந்தேகங்களாலும்,
பக்ரீத் ஆடாகப்
பரிதவிக்கிறேன் நான்.
மீண்டும் வரப் போகும் இயேசு
தன் எல்லா விசுவாசிகளையும்
புறந்தள்ளி விட்டு
என்னை கட்டித் தழுவும்
தருணத்தில்
ஒருவேளை அழிக்கப்படலாம்
என்
உலக மயமாக்கப்பட்ட களங்கம்.
* மானசீகன்*

VASANTHAN

 TWO POEMS

BY VASANTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. NEW YEAR
Yesternight at 11.19
kissing my sleeping kids
the New Year meant for me
has come to be
Overcome by the fatigue of
the long journey covering 160 kilometres
going beyond the place of alighting
and getting down
dazed by the early morn sleep
while struggling to find the way
in the eyes of the dear and near ones
those not celebrating the New Year
the unhappy countenances of children.
I have a Home
In this life where exchange of greetings
remains an impossible feat
This shall also pass…
True, of course.
I am keeping vigil
standing at all the borders
of this globe
in front of people’s
hate-filled eyes.

புது வருடம்
நேற்றிரவு 11.19 ற்கு
உறங்கிக் கொண்டிருக்கும்
குழந்தைகளை முத்தமிட்டதில்
தொடங்கியிருக்கிறது
எனக்கான புதுவருடம்
160 கிலோமீட்டர் பயணத்தின் களைப்பில்
நிறுத்தம் கடந்திறங்கி
அதிகாலை உறக்கத்தில் வழியை தேடுகையில்
புத்தாண்டு கொண்டாடாத
உறவுகளின் விழிகளில்
குழந்தைகளின் வாடிய முகம்
எனக்கொரு வீடு இருக்கிறது
வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள
இயலாத வாழ்க்கையில்
இதுவும் கடந்துபோகும் என்பது
உண்மை தான்
நான் காவல் காக்கின்றேன்
இவ்வுலகின் அனைத்து விளிம்புகளிலும்
நின்றபடி
மக்களின் வெறுப்பேறிய
கண்களின் முன்பு.

வசந்தன்


2. MORTUARY

While conducting the post-mortem
on a 21-day decomposed corpse
After identifying the body
unable to bear the stench
the son ran away and hid himself
Arranging for the free Hearse van
for the one poverty-ridden
his friend pleaded with the driver
and took him along.
The corpse rotting and decaying
caused the entire hospital to
reel under its impact.
For he who covering his nose
with a small handkerchief
and discharging his duty
half-a-day leave.
After conducting the autopsy of the bodies
the pathologist washed his hands.
The police-station was stationed
at the doors of Courts
holding case-files that can never be
washed away.
There Vaagai tree blooms
in blood-red.

பிணவறை
ஒரு பிணவறை கிடங்கில்
21 நாட்கள் அழுகிய சடலத்தை
பிரேத பரிசோதனை செய்கையில்
சடலத்தை அடையாளம் காட்டிய பின்
நாற்றம் தாங்க முடியாமல்
ஓடி ஒளிந்து கொண்டான் மகன்
வறுமையில் வாடித் தவிக்கும்
அவனுக்கு இலவச அமரர் ஊர்தி
ஏற்பாடு செய்துவிட்டு
ஓட்டுனரை கெஞ்சி
அழைத்துச் சென்றான் நண்பன்
அழுகி உருகும் சடலம்
மருத்துவமனையையே ஓட விரட்டியது
துண்டு கைக்குட்டையால்
நாசியை மறைத்தப்படி
கடமையை செய்த நண்பனுக்கு
அரைநாள் ஓய்வு
பிணங்களின் கூராய்வு பிறகு மருத்துவர்
கைகளைக் கழுவிக்கொண்டார்
ஒருபோதும் கைகழுவ முடியாத
கேஸ் கட்டுகளோடு காவல்நிலையம்
நீதிமன்றங்களின் வாசலில்...
அங்கே வாகைமரம்
இரத்தச் சிவப்பில் பூத்திருக்கிறது.
வசந்தன்

MULUMATHY MURTHALA

 A POEM BY

MULUMATHY MURTHALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



AALIYA’S TRAIN
Aaliya who longed for travelling in train
losing hope in ‘Vaapaa’s words
set out steering the plastic train she has
It was only after that
she has created the rail tracks
with two lines.
She has abandoned the old train in the
textbook.
It was electric train
that her imagination entertained.
In her train having Green Blue Red Yellow
and in all compartments four
She also let in
classmates of her.
Her train keeps on running
unmindful of flags, signal lights and the like
Going past the scenes of the railway stations
where yellow flowers scattered all over
and the unsafe level-crossings
and words hopeless
she kept travelling far beyond
Please don’t impose stations in
children’s wishes.
Now two trains
are speeding in her mind
Her father deeply moved by this act of
his daughter dear
soon arranged for a train-travel
to her.
In what other way he can act
to keep his status of a father
in tact?
Mulumathy Murthala
ஆலியாவின் ரயில்
--------------------------------
தொடரூந்து பயணத்திற்கு ஆசைப்பட்ட ஆலியா
வாப்பாவின் சொற்களில் நம்பிக்கையிழந்து
தன்னிடமிருந்த பிளாஸ்ரிக் ரயிலை செலுத்த தொடங்குகிறாள்
அதன்பிறகுதான் அவள் தண்டவாளங்களை
இரு கோடுகளால் உருவாக்கியிருந்தாள்
பாடப்புத்தகத்தில் இருந்த
பழைய ரயிலை அவள் கைவிட்டிருந்தாள்
எலக்ரிக் ரயிலே அவளது கற்பனையில் இருந்தது
பச்சை நீலம் சிவப்பு மஞ்சள் வர்ணங்களுடைய
மொத்தம் நான்கு பெட்டிகள் கொண்ட அவளது ரயிலில்
தன்னைப் போன்ற
வகுப்புத் தோழிகளையும்
இணைத்துக் கொண்டாள்
கொடிகள், சமிக்ஞை விளக்குகள் எதையும் பொருட்படுத்தாமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது அவளது ரயில்.
மஞ்சள் மலர்கள் சொரிந்து கிடக்கும்
புகையிரத நிலையங்களின் காட்சிகளையும்
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளையும்
நம்பிக்கையற்ற சொற்களையும் தாண்டி அவள் வெகு தொலைவில்
போய்க் கொண்டிருந்தாள்
தயவு செய்து குழந்தைகளின் ஆசைகளில் நிறுத்தங்களை திணிக்காதீர்கள்
இப்போது இரண்டு ரயில்கள்
அவளது கற்பனையில்
ஓடிக் கொண்டிருக்கின்றன
மகளின் இச்செயல் குறித்து
நெகிழ்ந்த அவளது தந்தை
விரைவில் ஒரு ரயில்பயணத்திற்கு ஆலியாவை அழைத்துச் செல்ல
ஏற்பாடு செய்தார்
தந்தை ஸ்தானத்தை தக்க வைக்க அவரால்
வேறு என்னதான் செய்ய முடியும் ?
@ முழுமதி எம்.முர்தளா

ANDRILAN

 A POEM BY

ANDRILAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

CAPE OF GOOD HOPE
The river that flows on
moving everything
goes past the shadow of tree
falling on it
not being able to impact it in any way.
The images of the Time-Mirror assigned
for someone unknown
reflect upon the day
and keep echoing.
Memory-fruits getting crushed
in the rotating wheels of machines.
Inside a frame there hangs as picture
the window-sky.
Life knowing not where to begin
and end in what
placing its hand on the ground
do somersault
The drop falling out of a sob
scattering upon the ground
slices off a mammoth sorrow.
The assessor of Time identifies
on the Map of Life
a Cape of Hope.
Though paper boat
each one’s voyage continues
towards that destination.

நன்னம்பிக்கை முனை

யாவற்றையும் நகர்த்தி கொண்டே

போகும் நதி

தன் மீது விழும் மரத்தின்

நிழலை

ஏதும் செய்ய இயலாது

கடந்தபடியிருக்கிறது.


யாருக்காகவோ ஒப்படைக்கப்பட்ட

காலக் கண்ணாடியின்

பிம்பங்கள்

நாளில் பட்டு

எதிரொலிக்கின்றன.

எந்திரச் சக்கரங்களின்

சுழற்ச்சியில்

நசுங்கியபடியிருக்கின்ற

நினைவுப்ப ழங்கள்.

ஒரு சட்டத்திற்குள்

நிழற்படமாக

மாட்டப்பட்டிருக்கிறது

ஜன்னல் வானம்.

எங்கிருந்து தொடங்கி

எதில் முடியுமெனத்

தெரியாத வாழ்வு

தன் பாதையில்

கையூன்றிக் கரணமிடுகிறது.

கண்ணீர் விசும்பலில்

பட்டுத் தெறித்த

துளி

பெரும் துயரொன்றை

வெட்டிச் சாய்க்கிறது.

கால அளவீட்டாளன்

அடையாளப்படுத்துகிறான்

வாழ்வின்

வரைபடத்தில்

நன்னம்பிக்கை

முனையொன்றை.

காகிதக் கப்பலாயினும்

தொடர்கிறது

அவரவர் பயணம்

அம்முனையை நோக்கியே.

 

 



INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS