INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 15, 2024

DHAMAYANTHI

 POEMS BY DHAMAYANTHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




(1)
Memory drips as the folded umbrella soaked in rain
Just the three words ‘You Love Me?”
In the midst of milk that in a flash boils and surges
Holding a kiss
as the oily piece of cloth dipped in warm water that stays glued to the hand
an embrace so close is needed long since
yet the minute when I wash it and dry it on the clothline
and push the bucket inside
there can be heard in the verandah
“That which proclaim love
Are not lips.
Where are the lips the back of the palm goes searching for
2.
The night moves on
The lone word spoken
As the robber’s weapon
Keeps scratching and slicing.
At the instant when getting inside a blanket
Is a great escape from the world
You called for some reason.
Hiding the length and breath of that single word
In the white-ant mound
I for some reason take it on
Concealing myself in the shade
of the lone word’s cross street
Love is just this.
(3)
That was a blue moon
It flew along the street corner
At the rim of paper-ships
A sea was swimming.
The crescent of the Blue Moon
Beside the sari torn
Was drying on.
at the backyard cloth-line
the bosom of the colourless stretching
with the hissing sound of serpentine
Creeping on the back of Moon
Love moves on.
(4)
The urine stenches oozing in the urine tents
And blurred components
There takes place a copulation.
Having poems as witness
A poet in the midst of candles
He himself melting and without his finger touching
Feels a woman
While drinking wine
Someone’s post-intercourse tears
Move on
crossing the line-drawing
of the window-shine
(5)
He who claims that he too likes my favourite song
I am not able to love .
He who had named
the feel of the inner wound
with nerves coiling and heart fluttering
Love
Must be a male, for sure
At least he can damn well spell it somehow
She, allowing it to get choked inside the throat
and begetting the child of another
wouldn’t have named it so _
Never ever.

தமயந்தி
1.
மடக்கப்பட்ட மழை நீர் குடை போல சொட்டுகிறது நினைவு.
என்னை பிடிக்குமா ஒனக்கு என்ற மூன்று சொற்களை ஒற்றை ஒற்றை வார்த்தையாய்
பிரித்து ஒரு வாழ்நாள் பூராவும் கேட்கிறாய்
ஷணத்தில் சொல்லிக் கொள்ளாமல் பொங்கும் பால் நடுவே ஒரு முத்தம் ஏந்தி வெந்நீரில்
நனைத்து வைக்கும் எண்ணெய் கசடு பிடித்துணி கையோடு ஒட்டுவது போலொரு அணைப்பும் நீண்ட காலமாய்த் தேவை
என்றாலும் துவைத்து காயப் போட்டு விட்டு
பக்கெட்டை உள்தள்ளும் நிமிடம்
ரேழியில் கேட்கிறது
“காதல் சொல்வது உதடுகள் அல்ல”
உதடெங்கே என தேடிச் செல்கிறது புறங்கை
(2)
இறுக்கமாக நகர்கிறது இரவு
ஒரு கள்வனின் ஆயுதம் போல
பேசிய ஒற்றை வார்த்தை இன்னும்
கீறினபடியே இருக்கிறது
ஒரு போர்வையினுள் புகுவதென்பது
உலகத்திலிருந்து தப்பித்தல் போலுணரும் தருணம்
ஏனோ நீ அழைக்கிறாய்
அந்த ஒற்றை வார்த்தையின் நீளலகத்தை
கரையான் புற்றுக்குள் மறைத்து
ஏனோ நான் எடுக்கிறேன்
அந்த ஒற்றை வார்த்தையின் குறுக்குசந்தின்
நிழலொன்றில் என்னை மறைத்து கொண்டு
அவ்வளவே காதல்
(3)
அது ஒரு நீலநிற நிலா
தெருமுனையில் பறந்து சென்றது
காகித கப்பல்களின் முனையிலொரு
கடல் நீச்சலடித்து கொண்டிருந்தது.
நீலநிற நிலாவின் பிறை
பின்முற்றத்து கொடியில்
கிழிந்த சேலையினருகே காய்ந்தது
நிறமிலியின் மார்பு நீண்டபடி
இருக்க
ஒரு சர்ப்பத்தின் இரைச்சலோடு
நிலாவின் முதுகில் நகர்கிறது
காதல்
4.
ஆட்சேபணைகளின் கூடாரத்தில்
ஒழுகும் மூத்திர வாடைகள்
மங்கிய பாகங்கள் நடுவே
ஒரு கலவி நிகழ்கிறது
கவிதைகளை சாட்சிவைத்து
ஒரு கவிஞன் மெழுகுவர்த்தியின் நடுவே
அவனும் வடிந்து விரல் படாமல்
ஒரு காரிகையை தொடுகிறான்
மதுவருந்தும் பொழுது
ஜன்னல் வழி கோட்டோவிய வெளிச்சத்தை
யாரோ ஒருத்தியின் கலவிக்கு
பின்னான கசிந்த கண்ணீர் கடந்து போகிறது
5.
எனக்கு பிடித்த பாடல் பிடிக்கும்
என சொல்லுமொருவனை காதலிக்க இயலவில்லை
நரம்பு சுருண்டு இதயம் படபடக்கும்
உள்காய உணர்வுக்கு காதல் என பேர் வைத்தவன் ஆணாய் தான் இருக்க கூடும்
அவனாவது சொல்லித் தொலைக்க முடியும்
தொண்டைக்குள் அடைத்து வைத்து
வேறொருவனுக்கு பிள்ளை பெறுபவள்
அதை அப்படி பெயரிட்டிருக்க மாட்டாள்
எப்போதும்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024