A POEM BY
ATHMAJIV
That three year old child kept on watching the sunlight
Mother was sleeping
She was a little indisposed.
Father had gone to work
so soon at dawn
The child turning a little
kissed her mother’s cheek.
Waking up in the feel of the baby’s soft lips
She hugged the child
with a kiss in return.
The little girl once again looked at the
luminous sky
seen through the window
fixing her mother’s eyes on her own.
Taking her feeding bottle with a little milk left
she inserted into her mother’s mouth
the simulated nipple.
Now Motherhood had
changed places.
•
அப்பொழுது விடிந்திருந்தது.
தெருவிளக்கின் எல்லா விளக்குகளையும்
மங்கச் செய்து விட்ட கதிரொளியை
கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்
அந்த மூன்று வயது குழந்தை.
அம்மா உறங்கிக் கொண்டிருந்தாள்
உடல்நிலை சற்று சரியில்லை அவளுக்கு.
அப்பா வேலைக்குச் சென்று விட்டிருந்தார்
விடியற்காலையிலேயே,
குழந்தை சற்றுத் திரும்பி
அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டது.
மழலை உதடுகளின் ஸ்பரிசத்தில் விழித்தவள்
சட்டென்று அணைத்துக் கொண்டாள்
பதிலுக்குத் தந்த முத்தத்துடன்.
குழந்தை மீண்டும் சன்னல் வழியாக தெரிந்த
ஒளிமிகுந்த வானத்தைப் பார்த்தாள்
அம்மாவின் கண்களைப் பொருத்திக் கொண்டு.
மிச்சமிருந்த தன் புட்டிப் பாலையெடுத்து
அம்மாவின் வாயில் திணித்தாள்
அதன் செயற்கைக் காம்பை.
இடம் மாறியிருந்தது இப்பொழுது
தாய்மை.
ஆத்மாஜீவ்
No comments:
Post a Comment