INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 15, 2024

KADANGANERIYAN ARIHARASUTHAN

 A POEM BY

KADANGANERIYAN ARIHARASUTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The chariot going around
should get back to its station
Did it return to its place
because those came and went pulled it along
It is because those who have the right
and the sense of belonging touched it
that it moved on
Each one to one’s own design
Enigmas beyond Science forever remain.
Though God is One
that which is in the sanctum sanctorum
and that which goes around
Are they of the same disposition
Leave it
Everything has its own time
Though more or less
Follow the course of water
Swelling, tears of bliss
Shrunken just have a dip in the river
and return, nothing amiss
The water knows very well
the art of flowing on
dissolving all
grappled by none..

ஊர் சுற்றப் போன
தேர் நிலை வந்தாக வேண்டும்
வந்தவரும் சென்றவரும் இழுத்ததாலா நிலைதிரும்பியது
பாத்தியப்பட்டவர்களும்
உரிமையானவர்களும் கைவைத்ததால் தானே நகர்ந்தது.
அததது அப்படித்தான்
அறிவியலுக்கு அப்பாற்பட்ட புதிர்கள் உண்டு எப்போதும்
என்னதான் தெய்வம் ஒன்றென்றாலும்
கருவறையில் வீற்றிருப்பதும்
உற்சவராக உலாப்போவதும் ஒரே மனநிலையில் தானா
அததற்கு ஒரு காலம் உண்டு
கூடக்குறைய இருந்தாலும்
நீர் வழிப் படு
நிறைந்தால் ஆனந்தக் கண்ணீர்
குறைந்தால்
ஆற்றில் தலைமூழ்கி வா
தண்ணீருக்குத் தெரியும்
அத்தனையையும் கரைத்து யாருக்கும் அகப்படாமல் ஓடும் சூட்சுமம்...

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024