TWO POEMS BY
MEGHA MIRSHA
who for two thousand long years
Each time
when the Cross was made
Instead of him
Another would access it.
And also, in the eyes of one and all
he sees but his own self
Said he.
This is how
for his sins committed
in two thousand years
He leaves suspended on the Cross
someone else.
I didn’t feel like asking who he was
In his eyes
I saw myself.
இரண்டாயிரம் வருடங்களாக
தனக்குத்தானே சிலுவை செய்யும்
ஒருவரை அபூர்வமாக
சந்தித்தேன்.
ஒவ்வொரு முறையும்
சிலுவை தயாராகும் போதும்
அது தனக்குப் பதிலாக
இன்னொருவருக்கு கிடைத்துவிடுகிறது.
இன்னும், அத்தனை பேரினது
கண்களிலும்
தன்னைத்தான் தான் காண்பதாகவும் சொன்னார்.
இப்படித்தான்
இரண்டாயிரம் வருடங்களாக
அவர் செய்த பாவங்களுக்காக
இன்னொருவரை சிலுவை ஏற்றிவிடுகிறார்.
அவர் யாரென்று எனக்கு கேட்கத் தோணவில்லை
அவர் கண்களில்
நான் என்னைக் கண்டேன்.
(2)
She carrying the sea of
surging sorrow of separation
struggles to erase the pursuing footprints
with waves
Forgetting forever
that it is the sea brimming
in the eyes of fish
drifted ashore.
பிரிவொன்றின் துயர் மிகு கடலை
கண்ணில் சுமந்திருப்பவள்,
தொடரும் பாதச்சுவடுகளை அலைகளால்
அழிப்பதற்குப் போராடுகிறாள்.
அது கரையொதுங்கிய மீனின்
கண்ணில் ததும்பும் கடல் என்பதை
ஒவ்வொரு முறையும் மறந்தவளாக.
No comments:
Post a Comment