INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 15, 2024

JEYADEVAN

 TWO POEMS BY

JEYADEVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)

It is just a lone day
that changes one century into another.
It is but a child which
delivered that old man as such.
The pebble is not inside the river
It is the river which is above.
The lotus bud bloomed somewhere faraway
turned Tuesday into Wednesday.
If your beloved is said to be there
in the yellow spot between evening and night
You would just climb that ladder
and touch the yellow spot – won’t thee
Will you be saying then that the sky
is far too high?
It is in the hybrid mango
the relishing tongue of your grandma
dead long ago
hang on -
Turning words upside down
and reflect on
you would turn
enlightened.
ஜெயதேவன்
ஒரு நூற்றாண்டை
இன்னொரு நூற்றாண்டு ஆக்குவது
ஒரே ஒரு நாள்தான்.
.
ஒரு குழந்தைதான்
அந்தக் கிழவனை பிரசவித்தது.
கூழாங்கல் ஆற்றின் உள்ளே
இல்லை.
ஆறுதான் கூழாங்கல்லுக்கு மேலே
இருக்கிறது.
செவ்வாயை புதனாக்கியது
எங்கோ மலர்ந்த ஏதோ ஒரு தாமரை மொக்கு.
மாலைக்கும் இரவுக்கும் இடைப்பட்ட
மஞ்சள் புள்ளியில்தான்
உங்கள் காதலி இருக்கிறாள் என்றால்
எந்த ஏணியில் ஏறியாவது மஞ்சள் புள்ளியைத் தொடுவீர்கள்தானே
அப்போது வானம் உயரம் என்றா சொல்வீர்கள்?
மரபு திரிந்த மாங்கனியில் இருக்கிறது
என்றோ மாண்டு போன உங்கள்
பாட்டியின் சப்புக் கொட்டிய நாக்கு.
சொற்களை தலைகீழாகப் போட்டு
யோசித்தால்
உங்களுக்கு கிட்டும் ஞான தரிசனம்.



2. SHE CARRYING THE BURDEN OF DISTANCES
Here From inside the Peepal leaves
scattered
In this isolated railway platform
One can hear
The ‘Koo Kuckoo…’ sound of the trains going past
On the railroads
the smell of cities aplenty
Upon the granite seat
the teardrops of those gone
stay on.
Where all each compartment is stationed
there lie abandoned
the love of someone
Amidst each one’s buzzing bees
the calm prevailing till then
flees
The station sans porters
is taken along by every train….
The next train coming
lets it alight on its previous spot again.
How sad that the railway station
that sends one and all
to their respective destinations
has no place to go and call
its own.

தூரங்களை தூக்கிச் சுமப்பவள்
----------------------
தனித்திருக்கும்
இந்த ரயில்வே நடைமேடையில்
உதிர்ந்திருக்கும் அரச இலைகளின்
உள்ளிருந்து கேட்கிறது
கடந்து போன ரயில்களின் கூ எனும்
ஓசை.
தண்டவாளங்களில் வீசுகிறது
பல நகரங்களின் வாசம்.
கிரைனட் அமரிடத்தில் தேங்கி உள்ளன
பிரிந்து சென்றவர் கண்ணீர்த் துளிகள்
ஒவ்வொரு ரயில் பெட்டி நிறுத்துமிடத்திலும் கேட்பாரற்று
உதிர்ந்திருக்கிறது யாரோ ஒருவரின் காதல்.
அவரவர்க்கான பரபரப்புகளுக்கு இடையே விடை பெற்றுப் போகிறது
அதுவரை நிலவிய மெளனம்
போர்டர்கள் அற்ற அந்த நிலையத்தை
தூக்கிக் கொண்டு போகிறது
ஒவ்வொரு ரயிலும்...
அடுத்த ரயில் வந்து இருந்த இடத்தில்
இறக்கிவிடுகிறது அதை.
வருவோரையெல்லாம் பேர் சொல்லி
ஊருக்கு அனுப்பும்
அந்த ரயில் நிலையம் போவதற்கு
சொந்த ஊர் இல்லாதது எத்தனை சோகம்.

ஜெயதேவன்
All reactions:

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024