A POEM BY
FATHIMA NALEERA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
The wind was telling its heart, the trees.
If the wind were not to speak
the trees would have been dead by now.
Why…
Wind is the love of mountains
Wind is the veritable scent of wilderness
Wind is oceans’ breath
Though the wind embraces the trees
it knows very much the touch and love
all pervading inside the grass.
Though the sky safeguards the wind
with its weary eyes
The wind
which looks at the clouds dispersed
feeling victorious
knows not
how to cool my palm so hot.
இரவுகளில் ஆறுதலடையும் நிலா பற்றியும்
சூரியன் தனியாக
அலைந்து திரியும்
வானத்தைப் பற்றியும்
தன் இதயமான
மரங்களிடம் காற்று
சொல்லிக் கொண்டிருந்தது..
காற்று பேசாவிட்டால்
மரங்கள் இறந்தே போயிருக்கும்
ஏன்...
மலைகளின் காதலும் காற்றுதானே....
வனாந்தர வாசனையும் காற்றுதானே....
சமுத்திரங்களின் மூச்சும் காற்றுதானே...
காற்று மரங்களை தழுவினாலும்
புற்களுக்குள் வியாபித்திருந்த
ஸ்பரிஸத்தையும் பிரேமையையும்
காற்று அறியாமலில்லை
வானம் தனது ஆயாசக் கண்களால்
காற்றை பத்திரப்படுத்தினாலும்
கலைந்த மேகத்தை
வெற்றியுடன் பார்க்கும்
காற்றுக்கு
என் உள்ளங்கை வெப்பத்தை
போக்க தெரியவில்லை.
—பாத்திமா நளீரா—
No comments:
Post a Comment