TWO POEMS BY
MADUSAN SIVAN
(1)
The legs of Jesus were not there
Nor his hands
The names of those who carried it
None knows.
With nails pierced and flesh mutilated
After the eagle had fed itself on the body
that was thrown into the sea
with nails pierced and flesh mutilated
deep down remains
the skull all alone.
As one two and so hundred thousands
skulls have come to be
At the feet of the Cross
Worship with flowers
In the piano that plays hymns
on sufferings on the Cross
the deluge of tears
The Sun that has set out in the East
dashes against the Cross and halts
In the suffocating crowd
with Jesus converging
in everyone’s eyes
the prayer came to a close.
***
The birds flying low
The stars keep twinkling
Far away the church gate is opened.
In the nostrils opening the door and stepping inside
the scent of century old wooden frames.
In the chain hanging from up above
chimney light aglow.
At the backside wall
Space in the shape of Cross.
and light through that
the bird flying getting in from outside
banging against the wall fluttering here and there
crossing the door
keeps floating floating floating more and more.
The blood-soaked legs that walked on
need liberation.
Though legs and hands pricked by thorns
There remains Life still
The bird is able to see
Till the time there remained life
It continued hovering
Standing on the floor with legs aching
It waited enduring.
Eyes thirsting for appeasing hunger
Pressing both the legs brought together
it spreads its wings
Realizing scarcity of Time doesn’t permit
Life to exit
Madusan Sivan
•
மிகப் பழைய சிலுவை அதில் இயேசு இல்லை
இயேசுவின் கால்கள் இல்லை
இயேசுவின் கைகள் இல்லை
சுமந்தவர் பெயர் தெரியாது
ஆணிகள் தைத்து சிதைக்கப்பட்ட சதைகளுடன்
உடலை கழுகு தின்று தீர்த்தபின்
தூக்கி வீசப்பட்ட கடலின் ஆழத்தில்
கபாலம் தனித்திருக்கிறது
ஓன்று இரண்டென்று நூறு ஆயிரம் என கபாலங்கள் சேர்ந்திருக்கிறது
சிலுவையின் கால்களில் பூக்களால் ஆராதனை
சிலுவைப்பாடுகளை இசைக்கும் பியானோவில் கண்ணீர் பிரவாகம்
கிழக்கில் புறப்பட்டிருந்த சூரியன்
சிலுவையின் தலையில் மோதுண்டு நிற்கிறது
கூட்ட நெரிசலில் ஒவ்வரு கண்களினுள்ளும் இயேசு குவிந்திருக்கவும்
பிரார்த்தனை முடிந்தது
***
பறவைகள் தாழ்ந்து பறக்கவும்
நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைகிறது
தூரத்தில் ஆலயக்கதவு திறக்கப்படுகிறது
கதவைத்திறந்து கால்வைக்கும் நாசியில்
நூற்றாண்டு மரச்சட்டங்களின் மணம்
உச்சியில் இருந்து தொங்கும் சங்கிலியில்
சிம்னி விளக்கில் வெளிச்சம்
பின்பக்க சுவரில் சிலுவை உருவில் வெளி
அதன் வழி வெளிச்சம்
பறப்பில் இருந்த பறவை வெளியில் இருந்து
உள்வந்து சுவரில் அங்கும் இங்குமென மோதி
வாசலை கடந்து மிதந்து மிதந்து மிதந்தபடி இருக்கிறது
-
குருதி படிய நடந்த கால்களுக்கு வேண்டுவது விடுதலை
கைகளிலும் கால்களிலும் ஆணிகள் தைத்தாலும்
உயிர் மீதமாய் இருக்கிறது
பறவைக்கு தெரிகிறது
உயிர் போகாதவரை வட்டமடித்திருந்திருந்தது
மணல் தரையில் கால்கள் நோகப் பார்த்திருந்தது
பசியின் ஏக்கம் கண்களில்
ஒரு சேர கால்களை ஊன்றி இறக்கைகளை
விரிக்கிறது
உயிர்பிரியக்காலப் போதமையை உணர்ந்து கொண்டது
-மதுஷன் சிவன்
(2)
in another era
has filled up and drowned my cabin.
I have become submerged in Light.
Closing the eyes I run away from Light
The body retreats from Being
The back and front doors of Non-Being are shut
Running Running Running where at all
should hide.
In the hideout
Need air there
And a window
Another night too
"Anyone there"
bearing the burden of Non-Being.
I have come from Being.
எங்கேயோ தூரத்தில் பிறித்தொரு காலத்தில் திறக்கப்பட்ட யன்னலின் வழி வெளிச்சம்
என் அறையினுள் நிரம்பி மூழ்கடித்திருக்கிறது
வெளிச்சத்தில் மூழ்கிவிட்டேன்
கண்களை மூடியபடி வெளிச்சத்தை விட்டோடுகிறேன்
இருத்தலில் இருந்து பின்வாங்குகிறது தேகம்
இல்லாமையின் பின்கதவும் முன்கதவும் அடைக்கப்பட்டிருக்கிறது
ஓடி ஓடி ஓடி எங்கே ஒளிவது
ஒளிந்து கொள்ளுமிடத்தில் காற்று வேண்டும்
யன்னல் வேண்டும்
பிறித்தொரு இரவும் வேண்டும்
“யாராவது இருக்கிறீர்களா”
இல்லாமையை சுமப்பவர்கள்
நான் இருத்தலில் இருந்து வந்திருக்கிறேன்
-மதுஷன் சிவன்
No comments:
Post a Comment