INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 15, 2024

GOODAL THARIQ

 RAIN(A)GAIN

POEMS BY GOODAL THARIQ

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

This rain is not like thee
On a twilight hour
you went away feeling sour
Then also remaining here
the Rain went on conversing, My Dear…
*
Keeps on pouring, the Rain
Getting drenched, I remain
What more is there to yearn…
*
While holding the umbrella straight
the rain pours leaning
When the umbrella is held slanting
the rain pours erect
How to appease this Rain
that is all set to soak thee
again and again
*
Enough of conversing
Just rest a while
I need to enjoy
Rain Divine.
*
Standing at the threshold
Enjoying Rain utmost
Says she thrilled to the core.
The rain about to end
starts pouring as before
*
Beginning and ending
in Rain at best
My dialogue with thee,
My dearest
*
I feel ill at ease
without the roaring noise
This rain could have
remained
For some more time.
*
One and all go along
Their own course
So does Rain
Of course.
*
In this minute
I am Happiness Absolute.
Nothing great has taken place
Outside my cabin
Rain’s resonance.
*
Along its course the Rain sprays
droplets of water
That’s why
One and all keep penning
Poems of Rain
Again and again.
*
உன்னைப்போலல்ல
இந்த மழை
ஒரு அந்திப்பொழுதில்
கோபித்துச்சென்றிருந்தாய் நீ
அப்போதும் உடனிருந்து
பேசிக்கொண்டே
இருந்தது மழை..
*
பொழிந்த படியே
இருக்கின்றது மழை
நனைந்து கொண்டே
இருக்கின்றேன் நான்
வேறென்ன வேண்டும்...
*
நேராக
குடைபிடிக்கும்போது
சாய்வாக பொழிகிறது
சாய்வாக குடைபிடிக்கும் போது
நேராக பொழிகிறது
நனைத்தே தீருவேன் என
அடம்பிடிக்கும் மழையை
எப்படித்தான் சமாதானப்படுத்துவது
*
பேசியது போதும்
சற்று ஓய்வெடு
மழையை இரசிக்கவேண்டும்
நான்..
*
வாசலில் நின்றபடி
மழை இரசிப்பதாக
பரவசத்துடன் பகிர்கின்றாள்
நிற்கவிருந்த மழை
பொழியத்துவங்குகிறது மீண்டும்..
-
*
மழையில் தொடங்கி
மழையிலேயே
முடிந்து விடுகின்றது
உன்னுடனான உரையாடல்..
*
இரைச்சல் சத்தம்
கேட்காமல்
என்னவோ போலிருக்கிறது
இன்னும் கொஞ்சம்
நீடித்திருக்கலாம்
இந்த மழை
*
அவரவர்களின்
போக்கிலேயே
சென்று கொண்டிருக்கின்றார்கள்
மனிதர்கள்
அதன் போக்கில்
பெய்து கொண்டிருக்கிறது
மழை
*
இந்த நிமிடத்தில்
மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
அப்படி ஒன்றும் பெரிதாக நிகழ்ந்துவிடவில்லை...
அறைக்கு வெளியே
கேட்டபடியே இருக்கிறது
மழை பொழியும் சத்தம்
*
சொற்களை
நீரெனத்தூவிச்செல்கின்றது
மழை
அதனால்தான் இடைவிடாமல்
மழைக்கவிதைகள்
எழுதுகின்றார்கள் எல்லோரும்..
***

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024