A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
MOUNTS AND RIVERS
In the tree
Flowers buds and fruits started swelling
Those who have power
in providing fertilizer-grants for the tree roots
set to motion a spree of corruption oppression
and audacity unleashed
Holding placards highlighting its side
Crossing over mounts and rivers
the tree wandered in search of the
threshold of the High Command.
Despite searching everywhere
No doors could be found to enter inside.
Despaired utmost
The tree once again sat on the roots.
Caressing its creations
_ The buds
Flowers
And fruits
It turned them into a sharp weapon
There…
the weapon crossed over
mounts and rivers.
மலைகளையும் நதிகளையும் தாண்டும் ஆயுதம்.
நீண்டகாலமாய் நிழல் தருவதில் நூறு வீத வெற்றியோடு மரமொன்று நிமிர்ந்திருக்கிறது.
மரத்தில் மலர்களும்
அரும்புகளும் கனிகளும் நிறையத்தொடங்கியது.
மரத்தின் வேர்களுக்கான உர மாணியங்கள் அதற்கான போசனைகள் வழங்குவதில் அதிகாரம் மிகுந்தவர்கள்
ஊழல்களையும் அடாவடிகளையும் அடக்குமுறைகளையும் அவிழ்த்துவிட தொடங்கினர்.
தமக்கான நியாயங்களை பதாதைகளில் ஏந்திய வண்ணம் மலைகளையும் நதிகளையும் தாண்டி
தலைமையின் வாசல் தேடியலைந்தது மரம்.
எங்கு தேடியும்
நுழைவதற்கான வாசல்கள் ஏதும் திறந்திருக்கவில்லை.
பெரும் விரக்தியோடு மீண்டும் வேர்களின் மேல் வந்தமர்ந்தது மரம்.
தன்னால் உருவான
அரும்புகளையும்
மலர்களையும்
கனிகளையும்
தடவியபடி
கூரிய ஆயுதமாக்கியது.
அங்கே
மலைகளையும் நதிகளையும் ஆயுதம் கடந்து சென்றது.
No comments:
Post a Comment