INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, September 15, 2024

JEEVAN BENNIE

 POEMS BY

JEEVAN BENNIE


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




1
On a day sans pain
She is listening to the sweet music
Dropping out of her dream.
It brings her close to the moment of buds flowering
During nights of profuse tears the moon is loved the most
Just like her its aloneness is sheer radiance
The lone conch landed at the shoreside is drying its solace
in that.
2
In an abusive word she picked up half of it and kept
In the city where she has to stand behid mask
It makes her feel safe.
In the road where everyone is going past
For her who was singing songs filled with failures
She throws her very heart feeling no pain.
Not being contained in the plate of her
Who was flling the entire city
It was stretching out protruding out of the world
The viewers of the city scream for the first time
Seeing the tiny love’s terrifying expanse of bloodshed.
3.
she who had packed the Time and kept it in her hand
Unfolds it in between a flower and a bird.
It has bloomed
It is flying
It has turned into empty hand.
4.
While narrating about having gone out of life once
She
In absolute secrecy saw to it that
she was right inside that life
seamlessly embedded.
In love aplenty of the viewers
She forever secureS herself thus
5
Herself that she had secured at the very end
She learnt to spend so easily.
Then
She keeps telling everyone
Shedding tears profusely
That the world has become so shrunken
And can be shaped as desired by one
6
Ere she could drink the bitterness of the remaining drop
Her time comes to an end
Again in another era
When another woman drinks
There too a drop is left over
The world keeps the last drop’s bitterness
forever remaining in a sense.
7
She who in that photograph
laughing for ever
beside Buddha
keeps forgetting something or other
With his very act of staring at the world
unmoved
that Buddha keeps reminding her
of all that she forgets.
8
Picking up one of those joys duplicated
She wears it on
Unable to remove the grandeur of it
which comes out defying herself
she starts severing it along with her person
the eyes of that joy
embedded in the leftovers
keeps staring at one and all
they know not to stay quiet at all.
9
The words thrown by her there
for providing solace to one abandoned
remain there as it were
Just as a flower bloomed
lets you forget certain wounds
10
At the onset of a love
she thought of a blossom
as its spiritual form.
Then when it withered and dropped
She keeps beseeching everyone
What its actual form is
With each one telling something different
She picks up those lifeless petals
In the directions shown by them
Flowers myriad lay withered and shrunken
She arrives at the conclusion
that wilting is Love’s form pristine.
POEMS BY JEEVAN BENNIE
Jeevan Bennie
1.
தன் கனவிலிருந்து உதிர்ந்திடும் இனிப்பான சங்கீதத்தைக்
கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
வலி தீர்ந்த தினமொன்றில்,
மொக்குகள் அவிழ்ந்திடும் தருணத்திற்கு அருகில்
கொண்டு போய்ச் சேர்க்கிற தது.
கண்ணீர் தீர்ந்திருந்த யிரவில் நிலவு மிகவும் விரும்பப்படுகிறது.
அவளைப் போலவே அதன் தனிமை மிகப்பிரகாசமானது.
கரையில் ஒதுங்கியிருந்த ஒற்றைச் சங்கு அதன் நிம்மதியை
அதில் காயவைக்கிறது.
2
ஒரு வசைச் சொல்லில் பாதியை எடுத்து வைத்துக் கொண்டாள்.
முகமூடிகளுக்குப் பின்னால் நிற்க வேண்டியிருக்கும் நகரத்தில்
அவளைப் பாதுகாப்பாக உணரவைக்கிற தது.
எல்லோரும் கடந்திடும் சாலையில்
தோல்விகளால் நிரம்பிய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தவளுக்காக
தன்னிதயத்தையே வீசியெறிகிறாள் வலியற்று,
நகரத்தை நிரப்பிக்கொண்டிருந்தவளின்
அத்தட்டுக்குள் அடங்காமல்
உலகிற்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கிற தது.
நகரத்தின் பார்வையாளர்கள் முதன் முதலாகக் கூச்சலிடுகின்றனர்
ஒரு சிறிய அன்பின் அளவற்ற இரத்தத்தைப் பார்த்து
3.
காலத்தை ஒரு பொட்டலமாகக் கட்டிக் கையில்
வைத்திருந்தவள்,
ஒரு மலருக்கும்
ஒரு பறவைக்கும் இடையில்
அதைப் பிரித்துப் பார்க்கிறாள்.
அது மலர்ந்திருக்கிறது,
அது பறந்து கொண்டிருக்கிறது,
அது வெறுங்கையாகி யிருக்கிறது.
4
ஒரு முறை வாழ்விற்கு வெளியே சென்று வந்ததை
சொல்லிக்கொண்டிருந்த போது,
அவள்
மிக ரகசியமாகத் தன்னை நகர்த்தி அவ்வாழ்விற்குள்
மிகச் சரியாக இருக்கும் படி பார்த்துக் கொள்கிறாள்.
பார்வையாளர்களின் கணிசமான அன்பில்
எப்போதும் இப்படித்தான் பொருந்திக் கொள்கிறாளவள்.
5.
மிகக் கடைசியாகக் கிடைத்திருந்தத் தன்னை
மிக எளிதாகச் செலவழிக்கக் கற்றுக்கொண்டாள்.
பிறகு
இந்த உலகம் மிகவும் சிறியதாகவும்
விருப்பப்படும் வடிவத்தில் மாற்றிக்கொள்ளக் கூடியதாகவும்
ஆகிவிட்டதை அழுது கொண்டே எல்லோரிடமும்
சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
6.
மீதமிருக்கும் ஒரு துளியின் கசப்பை
குடிப்பதற்குள் அவளின் நேரம் முடிவுக்கு வருகிறது.
திரும்பவும் வேறொரு காலத்தில்
மற்றொருவள் குடித்து முடிக்கும் போதும்
ஒரு துளி மீந்துவிடுகிறது.
உலகம் கடைசித் துளியின் கசப்பை
எப்போதும் மீதமாகவே வைத்திருக்கிறது.
7.
புத்தனுக்கருகிலிருந்த புகைப்படத்தில்
எப்போதும் சிரித்தபடியிருக்குமவள்
எதையேனும் மறந்த படியேயிருக்கிறாள்.
சலனமின்றி உலகை வெறித்துக் கொண்டிருப்பதிலிருந்தே
அம்மறதிகளை அவளுக்கு ஞாபகமூட்டுகிறார்
அப்புத்தர்.
8.
பிரதியெடுக்கப்பட்ட மகிழ்ச்சிகளில் ஒன்றை
அணிந்து பார்க்கிறாள்,
தன்னை மீறித் தெரிந்திடும் அதன் பிரம்மாண்டத்தைக்
கழற்ற முடியாமல் தன்னுடலுடன் கத்தரிக்கத் துவங்குகிறாள்.
மிஞ்சியவைகளில் படிந்திருந்த அம்மகிழ்ச்சியின் கண்கள்
எல்லோரையும் வெறித்த படியே யிருக்கின்றன.
அவற்றிற்கு மௌனமாகயிருப்பது எப்படியெனத் தெரியவில்லை.
9.
கைவிடப்பட்டிருந்த ஒன்றின் ஆறுதலுக்காக அங்கே
அவள் வீசிய வார்த்தைகள்
வெறுமனே யிருக்கின்றன,
ஒரு மலர்ந்த பூ அதனின் வாசனையால்
சில காயங்களை மறந்திருக்கச் செய்வது போல.
10.
அன்பு ஒன்றின் தொடக்கத்தில்,
ஒரு பூவை
அதன் ஆன்மரீதியான வடிவமென்று நினைத்திருந்தாள்.
பிறகது வாடி விழுந்திடும் போது
அவ்வன்பின் அசலான வடிவத்தை எல்லோரிடமும்
மன்றாடிக் கேட்டபடியே யிருக்கிறாள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல,
உயிரற்ற அவ்விதழ்களைக் கைகளிலெடுத்துப் பார்க்கிறாள்
அவை காண்பித்திடும் திசைகளில்
கணக்கற்றப் பூக்கள் உதிர்ந்து காய்ந்து கிடக்கின்றன.
காயந்து போவதே
அன்பின் பரிசுத்தமான வடிவமென முடிவுக்கு வருகிறாள்.
jeevan bennie

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024