INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 24, 2022

VEL KANNAN

 A POEM BY 

VEL KANNAN

 Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

 THE GROWING BUDDHA

 In the drawing room

In a hand_sized frame

With eyelids closed and smile bubbling

Endowed with halo The Buddha’.

 

That till five years of age

Speech eluding me

With head yet to have hair

I would be sitting there

Gazing at Buddha

-         My elder sisters would say.

That after they called my name aloud

Four or five times

I slowly turned and looked at them

_ My elder brothers would say.

 

Uttered the very first time

I did turn around

BUDDHAM SHARANAM GACHCH AAMI

 

At the time of leaving for some auspicious occasion

Once in a blue moon

And when going often to ask for the interest

Mother would stand in front of Buddha

For a few moments

and murmur

BUDDHAM SHARANAM GACHCH AAMI

 

While going to ‘Kulasaami Kodai’ – the festival of family deity

father would ask one and all of us

to go pay obeisance and pray

BUDDHAM SHARANAM GACHCH AAMI

 

The usual question of all those

Who came to see my elder sister

In search of a match for their boy

“Why are you having it here?”

“It was given free of cost”.

“Then, remove it”.

 

On the eve of her marriage

My third elder sister ran away

And hung on the third day.

When my eldest sister  shifted

her residence

The Buddha was lost.

 

Even today it is resonating inside me:

BUDDHAM SHARANAM GACHCH AAMI.

 

வளரும் புத்தர்

வரவேற்பறையில்
கையளவு  சட்டகத்தில்
இமைகள் மூடி புன்னகைக் குமிழ
ஒளி வட்டம் பொருந்திய புத்தர்.

ஐந்து வயது வரை பேச்சு வராமல்
முடி முளைக்காத தலையுடன்
புத்தனைப் பார்த்தபடியே
அமர்ந்திருப்பேன் என்று அக்காமார்கள் சொல்லுவார்கள்.
சத்தமாக நான்கைந்துமுறை அழைத்த பின்னர்
மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன் என்று 
அண்ணன்மார்கள் சொல்லுவார்கள்.
முதல்முறை சொன்னதுடன்
திரும்பிப் பார்த்திருக்கிறேன்
புத்தம்.. சரணம்.. கச்சாமி

என்றோ செல்லும் சுபகாரியங்களுக்கும்
அடிக்கடி வட்டிக்குப் பணம் கேட்கச் செல்லும் போது
சில நொடிகள் புத்தரைப் பார்த்தபடியே முணுமுணுப்பார் அம்மா
புத்தம்.. சரணம்.. கச்சாமி

குலச்சாமிக் கொடைக்குச் செல்லும் போது
தவறாமல்  அனைவரையும் கும்பிட்டு வரச் சொல்லுவார் அப்பா
புத்தம்.. சரணம்.. கச்சாமி

அக்காவைப் பொண்ணு பார்க்க வந்தவர்களின்
பொதுவான கேள்வி :”எதுக்கு மாட்டி வச்சு இருக்கீங்க?”
இலவசமாகத் தந்தார்கள்கழட்டிடுங்க

தனது திருமணத்திற்கு முதல்நாள் அன்று
மூன்றாம் அக்கா ஓடிப்போன
சில நாட்களில் தூக்கிட்டு இறந்தார்
மூத்த அக்கா.
வீடு மாற்றுகையில்
காணாமல் போனார் புத்தர்

இன்றும் என்னுள் ஒலிக்கிறது 
புத்தம்.. சரணம்.. கச்சாமி

 

வேல்கண்ணன்

 

 

 

 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024