INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 26, 2022

RAMESH PREDAN

 TWO POEMS BY

RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


1. TWO DISSIMILAR WORLDS

For this planet
I am a female alien
Whoever touches me here
I would inherit their gender
And have me attired with
the semblance of their body
If you be a male and feel me
I would also turn into a man like thee
Between two bodies
Between two planets
In the interim space
In a split second
Touching you and turning a man
Again a woman and so remaining
When I stand aside and see
The distance between you and me
How many light years it could be?
All the mysteries of the world
are brimming inside thee contained
in one body Comrade
Getting inside thee in a flash and
wearing you and coming out
I realized
Eventually….
In our world I am a female sans anything
Wonder how at all
all through your life
you carry the burden of this genitalia
that differentiates thee from me
The load of the hypothesis called Male
is non-existent in my planet
I exit thee
just as from an object
the light moves out its shadow.
Ramesh Predan
இருவேறு உலகங்கள்
இந்தக் கோளகைக்கு நான்
வெளியிலிருந்து வந்தவள்
இங்கே என்னைத்
தொடுபவரின் பாலை உள்வாங்கி
அவருடம்பை நகலாக்கித் தரித்துக்கொள்வேன்
ஆணாகி நின்று என்னைத் தொட்டதும்
உன்னைப்போலவே நானும் ஆணாகிவிடுவேன்
இரண்டு உடம்புகளுக்கு நடுவே
இரண்டு கோள்களுக்கு நடுவே
இடைவெளியில்
இமைக்கும் பொழுதில்
உன்னைத் தொட்டு ஆணாகி
மீண்டும் பெண்ணாகி நிலைக்கும் பொழுதில்
விலகி நின்று பார்க்கும்போது
உனக்கும் எனக்கும் இடைவெளி தூரம்
எத்தனை ஒளியாண்டுகள்?
பூமியின் எல்லா மர்மங்களும்
ஒற்றை உடம்பில் நிலைப்பெற்ற உனக்குள்ளும் நிறைந்துள்ளன தோழா
கணப்பொழுதில் உன்னுள் நுழைந்து உடுத்தி
வெளிவந்ததில் அறிந்தேன்
இறுதியாக...
உனது உலகில் நான் ஒன்றுமற்றவள்
என்னிடமிருந்து உன்னை வேறுபட்டு நிறுத்தும்
இந்தப் பாலுறுப்பின் கனத்தை
வாழும் காலமெல்லாம்
எப்படிச் சுமந்துத் திரிகிறாய்?
ஆண் என்னும் கருதுகோளின் பாரம்
எனது கோளில் இல்லை
நான் உன்னிடமிருந்து வெளியேறுகிறேன்
பொருளிலிருந்து அதன் நிழலை
ஒளி வெளியேற்றுவதைப் போல.

ரமேஷ் பிரேதன்

2. THE STORY OF THE LOST ONE
On the morn after the close of the festival
The decorations of the chariot are untied
The vendors tie their sacks of things left
after sales
Their dirt-filled children hither and thither.
All over the place polythene bags keep flying
in sea-breeze.
Straight from Veeraampattinam Chariot Festival
just concluded
They are going to the festival of Velankanni
along this same seashore at quite a distance away
and spread their shops, they say
Nomadic Life all the way
It was in this same festival
when I was a boy I went missing.
The same chariot
The same Goddess Senkazhuneer Amman
Year after year
I alone varying
Those who wantonly left me there
and headed towards North
never returned.
Upon this Earth in any and every nation
North is but domineering.
Till the time this same festival commences
next year
I will as usual get into the sea
and stay there.
Gobbling raw fish
and gulping salty water
I would climb ashore
searching for them in the festival throng.

தொலைந்துபோனவன் கதை
திருவிழா முடிந்த காலை
தேரின் அலங்காரம் பிரிக்கப்படுகிறது
வியாபாரிகள் விற்று மீந்த பொருட்களை
மூட்டை கட்டுகிறார்கள்
அவர்தம் அழுக்குக் குழந்தைகள்
அங்குமிங்கும் ஓடுகின்றன
ஊரெங்கிலும் பாலித்தீன் பைகள்
கடல்காற்றில் பறக்கின்றன
வீராம்பட்டிணம் தேர்த் திருவிழாவை
முடித்த கையோடு
இதே கடற்கரையில் தூரத்தில் இருக்கும்
வேளாங்கண்ணி விழாவிற்கு
கடைவிரிக்கப் போகிறார்களாம்
நாடோடி வாழ்க்கை
இதே திருவிழாவில்தான்
சிறுவனாக இருந்தபோது நான்
தொலைந்து போனேன்
அதே தேர்
அதே செங்கழுநீர் அம்மன்
ஆண்டுகள் தோறும்
நான் மட்டும் வேறுவேறாக
என்னைத் தெரிந்தே தொலைத்துவிட்டு
வடக்கே சென்றவர்கள்
மீண்டும் தேடிவரவேயில்லை
இந்தப் பூமியில் எந்த நாட்டிலும்
வடக்கு என்பது மேலாதிக்கம் செலுத்துவதுதான்
அடுத்த ஆண்டு இதே திருவிழா தொடங்கும் வரை
வழக்கம் போல் கடலுக்குள் சென்று
தங்கிவிடுவேன்
பச்சை மீனைத் தின்று
உப்பு நீரைக் குடித்து கரையேறுவேன்
திருவிழாக் கூட்டத்தில் அவர்களைத் தேடி.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024