INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 24, 2022

IYYAPPA MADHAVAN

 TWO POEMS BY

IYYAPPA MADHAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Buddha lay there in sun and Rain
He didn’t ask for taking him inside the room
His skin was slowly peeling off
Summer
Winter
Monsoon
He felt nothing
He who with shape mutilated
and on the verge of
breaking apart
was thrown into the trash
even then he remained silent
In the garbage smelling foul
the radiance of Enlightenment
prevails.

வெயிலிலும் மழையிலும் புத்தர் கிடந்தார்
அப்போதும்
அறைக்குள் எடுத்து போ
என்று சொல்லவில்லை
கொஞ்சம் கொஞ்சமாய்
அவரின் தோல் உரிந்து
கொண்டிருந்தது
வெயில்காலம்
பனிக்காலம்
மழைக்காலம்
எதையும் உணரவில்லை
உருவம் சிதைந்து
உடையும் நிலையில்
இருந்த அவரை
குப்பையில் வீசியாயிற்று
அப்போதும் அவர் ஒன்றும் சொல்லவில்லை
நாறும் குப்பையில்
ஞானத்தின் சுடர் ஒளிர்கிறது.

அய்யப்ப மாதவன்
(2)








Writing lies like a cat
if it get up
it climbs on the tree
indulge in adventure upon the compound wall
Gate-crashing into houses and brains
it turns upside down
something or other
With its thin frame
getting through small crevices
reaching the branch-top
it views the world
At the place where a morbid death takes place
hiding
it glares at the act of injustice
with its eyeballs rotating.
In medical examinations
in false medical reports
frightened to the core it remains
Beside the head of
the girl dead
in morbid gang-rape
it is frozen in shock.
While staying wide awake
day and night
feeling pain hellish
seated in a chair
like Buddha it hides under
meditation
With the lurking danger
of Satan’s fingers
spreading over its soft fur.

எழுத்து ஒரு பூனையைப் போல் படுத்திருக்கிறது
எழுந்துகொண்டால்
அது மரத்தில் மேல் ஏறுகிறது
மதில் மேல் சாகசம் புரிகிறது
வீடுகளுக்குள் மூளைகளுக்குள்
புகுந்து
எதையாவது கவிழ்த்துப்போடுகிறது
மெல்லிய உடலைக்கொண்டு
சின்ன இடைவெளிகளைக் கடந்து
கிளையின் உச்சியிலேறி
உலகைக் காண்கிறது
ஒரு அநியாயச் சாவு நிகழுமிடத்தில்
பதுங்கிக்கொண்டு
விழிகளால்
அநியாயத்தை
உருட்டி உருட்டிப் பார்க்கிறது
உடல் பரிசோதனையில்
போலி அறிக்கைகளில்
மிரண்டு போய் உட்கார்ந்திருக்கிறது
பாலியல் வன்முறையில்
கொடூரமாய் இறந்துகிடக்கும்
பெண்ணின் தலைமாட்டில்
அமர்ந்துகொண்டு
அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது
பகலிரவு பராமால் அது
சொட்டச் சொட்ட விழித்திருக்கையில்
நரகத்தின் வேதனையில்
ஒரு நாற்காலியில்
புத்தனைப் போல் தியானத்தின் கீழ் ஒளிந்துகொள்கிறது
இனி மென்ரோமங்களில்
சாத்தானின் விரல்கள்
படரும் அபாயத்தில்.
IYYAPPA MADHAVAN

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024