TWO POEMS BY
RIYAS QURANA
identifying it with the help of its sound
I open the book
It is the pencil line drawn
under the line unforgettable
flowing as river
Upon the word underlined
two were meeting
Standing outside the book
slowly I try to cross the bridge.
Oh, unable to cross over
that tiny river
keeps elongating for years
Riyas Qurana
ஆறு சலசலத்து
ஓடிக்கொண்டிருந்தது
சப்தத்தை வைத்து
அடையாளம் கண்ட நான்
அந்த புத்தகத்தை
திறக்கிறேன்
மறக்க முடியாத
வரிகளின் கீழ்
கீறப்பட்ட பென்சில் கோடுதான்
ஆறுபோன்று ஓடிக்கொண்டிருப்பது
கோடிட்ட வார்த்தையின் மீது
இருவர் சந்தித்துக் கொண்டிருந்தனர்
புத்தகத்திற்கு வெளியே நின்று
அந்தப் பாலத்தை
மெல்லக் கடக்க முயல்கிறேன்
கடக்கவே முடியாமல்
எத்தனை ஆண்டுகளாய் நீள்கிறது
அந்தச் சிறிய ஆறு.
All at once my life turns worthwhile.
Can have anybody as co-traveller
Any time
Can part with anybody
The street that turned and disappeared
from the reach of my vision
cautions me of the journey’s distance.
The small trees at the corners
reveals life’s fatigue
causing apprehension.
All at once life
becomes worthless
With the street sprouting, branch out
running in various directions.
I stand at that intersection.
A dog goes past me
without barking.
Riyas Qurana
தெருவில் தனியாக நிற்கிறேன்
திடீரென்று எனது வாழ்க்கை
அர்த்தமுள்ளதாக மாறுகிறது
யாரோடும் பயணிக்க முடியும்
எந்த நேரத்திலும்
யாரையும் பிரிந்து செல்லவும் முடியும்
கண்ணுக்கெட்டிய தொலைவில்
திரும்பி மறைந்த தெரு,
பயணத்தின் துாரத்தை எச்சரிக்கை செய்கிறது
ஓரங்களில் தென்படும் சிறுமரங்கள்
வாழ்வின் களைப்பை
பயங்காட்டுகின்றன
நான் இப்போது தனியாக இல்லை
திடீரென்று வாழ்க்கை
அர்த்தமிழக்கிறது
தெரு கிளைத்து பல திசைகளில்
ஓடிக்கொண்டிருக்கின்றன
அச் சந்தியில் நிற்கிறேன்
குரைக்காமல் என்னை
கடந்து செல்கிறது ஒரு நாய்.
No comments:
Post a Comment