INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, October 5, 2025

THENMOZHI DAS

 TWO POEMS BY 

THENMOZHI DAS

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



Rendered in English by Latha Ramakrtishnan(*first Draft)
1. HUNGER
A pain so intense
might devour even the sea’s expanse
Sun’s golden sour taste
is not fit for gulping
Even if Humans toil with their nerves stretching out
dangling
and shower the firms with the yields
It proves not sufficient to its chimneys that burn money.
The wind doesn’t blow fiercely cool
for the workers
The moon too doesn’t grow as
healing the wounded heart.
Holding the creeper of the Vettrilai Valli Kizhangu
My tears tell:
You should flow as blood into the body of those
who know the value of your tuber
So as not to be stamped by anyone’s feet
the cows go dragging the dawn
with their thick ropes
The way even the dead live in our memories
people’s bitter existence
remains unknown to the State
Living
before and after voting -
shrunken socks – just that.
My Beloved Desert Rose
Your midday would come – You
should munch and swallow the Sun
and so quench your hunger then.
பசி
~
குறிப்பிடத்தக்க மகாவலி
கடலையும் உள்விழுங்கக் கூடும்
சூரியனின் பொன் கசப்பு
அருந்தத் தக்கதல்ல
மனிதர்கள் நரம்புகள்
வெளித்தொங்கும் அளவுக்கு உழைத்து
நிறுவனங்களுக்கு கொட்டினாலும்
பணம் எரிக்கும்
அதன் புகைக்கூண்டுகளுக்கு போதவில்லை
உழைப்பாளிகளுக்கென காற்று
உறக்க வீசுவதில்லை
சந்திரனும் ரணப்பட்ட இருதயத்திற்கு
இதமாக வளர்வதில்லை
முற்றத்து வெற்றிலை வள்ளிக் கிழங்கின்
கொடிபிடித்து என் கண்ணீர் சொல்கிறது
உன் கிழங்கின் அருமை தெரிந்தவர்
உடலுக்குள் நீ ரத்தமாய் பாயவேண்டும்
எவர் காலிலும் மிதிபடக்கூடாதென
அதிகாலைப் பொழுதினை மாடுகள்
தன் கழுத்தின் கனத்த கயிறுகளால்
இழுத்துப் போகின்றன
இறந்தவர்கள் நம் நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருக்கும் விதம்கூட
மக்களில் மனம்கசந்த இருப்பு
அரசுக்கு தெரிவதில்லை
வாழ்தல்
வாக்களிப்பதற்கு முன்னும் பின்னும்
கசங்கிய காலுறை அவ்வளவே
என் அன்புக்குரிய பாலைவன ரோஜாவே
உனக்கான நடுப்பகல் வரும் -நீ
பசிதீர சூரியனை மென்று தின்ன வேண்டும்
~

2. SOONU

In an iron door your tiny tender hand keeps swaying Soonu
None believes
You being and growing inside me
You opening the door
just as blowing the breath to create bubbles
out of soap-water
You calling out Mother and come running
Caressing the cheek with flowers
Calling the sands as capsules for me
Converting the night into a swing
Scattering my eyes as the Tenth part
Turning sleeps into smiles
Taking out the depth of land
and you applying ‘pottu’ on my forehead
You writing your father’s name in the
core of soul
That even inside my heart I give you life through the Placenta
None believes Soonu.
சூனு
~~~~~
இரும்புக் கதவொன்றில் உனது பிஞ்சுக் கை அசைந்து கொண்டேயிருக்கிறது சூனு
யாரும் நம்புவதில்லை
எனக்குள் நீ வளர்வதை வாழ்வதை
சோப்புக் கரைசலால் குமிழ் படைக்க
மூச்சுக் காற்றை ஊதுவது போல்
நீ கதவு திறப்பதை
அம்மா என அழைத்தபடி ஓடிவருவதை
பூக்களால் கன்னத்தில் ஒத்தடமிடுவதை
மணல்களை எனக்கான மாத்திரைகள் என்பதை
இரவை ஊஞ்சலாக்குவதை
எனது கண்களை தசமபாகமாக சிதறவிடுவதை
நித்திரைகளைப் புன்னகையாக்குவதை
நிலத்தின் ஆழத்தை எடுத்து
நீ எனக்குப் பொட்டு வைப்பதை
உனது அப்பாவின் பெயரை ஆன்மாவின் தண்டில் எழுதுவதை
மனதிற்குள்ளும் நஞ்சுக்கொடி வழியாகத்தான் உனக்கு உயிர் தருகிறேன் என்பதை
யாரும் நம்புவதில்லை சூனு
Composed By - தேன்மொழி தாஸ்
14.11.2016
11.04pm
Photo credit , Iyyappa Madhavan
Background painting: Thenmozhi Das
Painted at 2010
..................................................................................................................................
* கவிஞர் தேன்மொழி தாஸின் சூனு கவிதையை நான் ஏற்கெனவே மொழிபெயர்த்திருக்கிறேன் என்பது பிறகுதான் ஞாபகம் வந்தது. அந்த எனது மொழிபெயர்ப் பையும் இங்கே தந்துள்ளேன். இரண்டு மொழிபெயர்ப்பு களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கிறது.
..................................................................................................................

On an iron gate your soft tiny hand
keeps swaying
Soonu
Nobody believes
that you grow inside me
reside there
That you open the door
Just the way you blow
your breath
to create bubbles out of soap-water mix
That you come running
calling “Mummeee”
Kissing me with flowers on the cheek
Calling sands as capsules meant for me
Turning the night into a swing
Scattering my eyes into ten slices
Converting my sleeps into smiles
Digging out the depth of soil
adorning my forehead with a dot
That you write your father’s name
on soul’s vertebrae
That even in my heart I give you life
through the umbilical cord
None believes it all
None believes it at all, Oh Soonu



MADHURA

 A POEM BY 

MADHURA

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


DREAM’S NOTATION
The snow-streaks that clamp
when the eyes close
multiply the ordinal numbers.
They swim inside the body
As tiny fish.
The canine teeth that grow
in sleep’s moss
slowly munch and tear off
the skin of silence.
Each dream is a serpentine lying curled
near the door that can’t be opened.
Its very curl is Language
Its dripping venom, Music.
Upon the head of shadows
Birds sans hues screech
Their voice
as the resonance of temple bell
shakes the dream’s bones.
Dream
is dense blood-sand
spreading in sleep’s liver
The suns sprouting in it
show but directions incomplete
Mind there
metamorphosing into the black feather
of the dark eagle devouring its own self
sheds off its own throb.
Unable to identify the dreams floating in the
Space
the index-finger
remains shocked to the core.

கனவின் குறீயீடு
கண்கள் மூடும்போது
கவ்விக் கொள்ளும் பனிக்கீற்றுகள்
தோற்றப் பெருக்க
எண்களைக் கூட்டுகின்றன.
அவை
சிறு மீன்களென
உடலுக்குள் நீந்துகின்றன.
உறக்கத்தின் பாசியில்
முளைக்கும் கோரைப் பற்கள்,
மௌனத்தின் தோலை
மெல்ல மென்று கிழிக்கின்றன.
ஒவ்வொரு கனவும்
திறக்க முடியாத கதவின் பக்கத்தில்
வளைந்து கிடக்கும் அரவம்
அதன் சுருளே மொழி,
அதன் சொட்டும் நஞ்சே இசை.
நிழல்களின் தலையில்
வண்ணமில்லா பறவைகள் கூவுகின்றன;
அவற்றின் கூவல்
இடிந்த கோயிலின் மணியோசை போல
கனவின் எலும்புகளைக் குலுக்குகின்றன.
கனவு
உறக்கத்தின் வயிற்றில்
படரும் அடர்ந்த இரத்தமணல்;
அதில் முளைக்கும் சூரியர்கள்
முழுமையற்ற திசைகளை மட்டுமே காட்டுகின்றனர்.
மனம் அங்கே
தன்னைத்தான் உண்டுகொண்டிருக்கும் கருங்கழுகின்
கருப்பு இறகாய் மாறி,
தன் துடிப்பைத் தானே உதிர்த்து விடுகிறது.

அந்தரவெளியில்
மிதக்கும் கனவுகளை
அடையாளங் காட்ட
இயலாமல் திகைக்கிறது
ஆட்காட்டி விரல்.
மதுரா


SRINIVASAN ARUNACHALAM

  TWO POEMS BY 

SRINIVASAN ARUNACHALAM

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

FLOWERING WEED

That it is Paddy
Tte weed knows not
That it is weed
the Paddy knows not.
For the bearing soil
and pouring rain
No discrimination as weed and paddy
Cow’s mouth
and Elephant’s feet
discriminate not
Paddy and Weed
Even the weed
create converged images
flowery
in retinae seeking Artistry.

களையும் பூக்கின்றது..
அது நெல்லென்று
களைக்குத் தெரிவதில்லை
அது களையென்று
நெல் பழிப்பதில்லை.
தாங்கும் மண்ணுக்கும்
பொழியும் மழைக்கும்
புல்லென்றும் நெல்லென்றும்
பாரபட்சம் கிடையாது.
பசுவின் வாயும்
யானையின் காலும்
வித்தியாசம் பார்ப்பதில்லை
நெற்பயிரையும் களைச்செடியையும்..
களையும்
கலையாகத் தான்
விழுகிறது
கலை தேடும்
விழித்திரைகளில்..

அ.சீனிவாசன்

2. FATHER'S ABSENCE

Father’s void
going beyond Milkyway’s frontiers
and pervading as Stardusts
shrouds as night with moonlight lost.
Ere it is realized
curling in the abyss of Black Hole
devouring Time and Light
It turns into load of silence.
But
in that void
somewhere a star shines still _
Father’s memory
- and so it will.

2.அப்பாவின் வெற்றிடம்
பால்வழி மண்டலத்தின்
எல்லைகளைத் தாண்டி
நட்சத்திரப் புழுதிகளாய்
வியாபித்து,
நிலவொளி தொலைத்த இரவாய் சூழ்கிறது.
அதை உணர்வதற்குள்
உள்ளம்,
கருந்துளையின்
அதல பாதாளத்தில்
சுருண்டு,
நேரத்தையும் ஒளியையும்
விழுங்கி,
மௌனத்தின் கனமாக
மாறிவிடுகிறது.
ஆனால்,
அந்த வெற்றிடத்தில்
எங்கோ ஒரு நட்சத்திரம்
இன்னும் மின்னுகிறது—
அப்பாவின் நினைவுகள்
அ.சீனிவாசன்

K.MOHANARANGAN

 A POEM BY 

K.MOHANARANGAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

LIFE IS STRANGER THAN STORY

Fully knowing that
in this long journey
In some stop
Midway
One of the two
would alight and leave
we have got familiar with each other
not knowing that this is the moment
and this is that halt
we interacted with each other
pretending all along
that they are somewhere far away
in the future
At least for the sin of having travelled together
all this long
before alighting
you could have uttered ‘Fare thee well’
and moved on!
In the short while when I turned away
To see the roadside shops
You disappeared all too quietly
Whatever the story be
Before closing if
Should complete it too.
Against the expectation of the readers
As the wish of the writer
It could happen at an unexpected moment
Though initially it would be disappointing to face it
Once we accept it
The heart would slowly clear,
But that which you have given me and left
is not one of that.
It is an enduring angst
of reading by mistake
a story book sans the last page
- A feeling of all-time wreckage.

வாழ்க்கை விந்தையானது,
கதையைக் காட்டிலும்.
_________________________________________
நெடுவழிப் பயணமதில்
ஏதோவொரு நிறுத்தத்தில்
இடைவழியில்
இருவரில் ஒருவர்
இறங்கிப்போய்விடுவோம்
எனத் தெரிந்தேதான்
அறிமுகமாகிக்கொண்டோம்.
இப்போதுதான் அத்தருணம்
இதுதான் அந்நிறுத்தம்
என்பதறியாது,
இன்னும் தொலைவில்
எதிர் வரும் காலத்தில்
எங்கோ இருப்பதான
பாவனையோடு பழகினோம்.
இவ்வளவு தூரம்
சேர்ந்து பயணித்த பாவத்திற்காவது
இறங்கிப் போகுமுன்
இங்கிதம் கருதி
வருகிறேன் என்றொரு
வார்த்தையைச் சொல்லிப்
பிரிந்திருக்கலாம்!
நடைமேடைக் கடைகளை
வேடிக்கை பார்க்கவென
திரும்பிய சிறு பொழுதில்
அரவமின்றி மறைந்துவிட்டாய்.
எந்தக் கதையானாலும்
மூடி வைக்கும் முன்
முடித்தும் வைக்கவேண்டும்.
வாசிப்பவர்களின்
எதிர்பார்ப்புக்கு மாறாக,
எழுதியவரின் விருப்பமாக
எதிர்பாராத ஒரு தருணத்தில்
எதேச்சையாகவும் அது நேரலாம்.
எதிர்கொள்வதற்கு முதலில்
ஏமாற்றமாக இருந்தாலும்
ஏற்றுக்கொண்ட பிறகு
மெல்ல மனம் தெளியும்.
ஆனால் நீயெனக்கு
அளித்துச் சென்றதோ
அவ்வாறான ஒன்றல்ல
ஆயுளுக்கும் அலைகழிப்பது;
கவனக் குறைவாக
கடைசிப் பக்கமில்லாத
கதைப் புத்தகமொன்றை
படிக்க நேர்ந்ததைப் பொலொரு தீராத திகைப்பு.

க.மோகனரங்கன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS