INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 24, 2021

VATHILAIPRABHA

 A POEM BY 

VATHILAIPRABHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

He who mints money needs
but a mouthful of well-cooked rice.
In the same land where camels graze
He is also grazing for food.
Buying a round Moon
in each Chappathi
In each cup he drinks a
Milky Way.
He with hunger unappeased
crossing alluvial soil
relieved of the flavour of
marine-fishes
With the taste of
Vaigai river’s ‘Ayirai’ fish
brimming within
landed airborne.
But the food with cooked rice
and Ayirai fish
_forever his favorite dish
turned out to be a faraway dream.
In the dream of He who went in a bus
crossing Vaigai so dry
a mouthful of cooked rice would keep floating.
With adulterated rice boiling and stretching
synthetics would swallow his dreams.
Burnt in deadly hunger
and starving
He returns
with rice not cooked
and Life overcooked.


பெரும் பொருள் ஈட்டும் அவனுக்கு
வேண்டும் ஒரு கவளம் அரிசி சோறு.
ஒட்டகங்கள் மேய்ந்த அதே நிலத்தில் தான்
சோற்றுக்காக மேய்ந்துகொண்டிருக்கிறான்.
ஒவ்வொரு சப்பாத்தியுள்ளும்
ஒரு வட்ட நிலா வாங்கி.
ஒவ்வொரு குவளையிலும்
ஒரு பால்வெளி அருந்துகிறான்.
பசி அடங்கா அவன்
குறுணை மணல் கடந்து
நீலக் கடல் மீன்கள் சுவை விடுத்து
வைகை ஆற்று அயிரை மீன் சுவையூற
வானூர்தியில் வந்திறங்கினான்.
காலங்காலமாய் அவன் விரும்பி உண்ணும்
அரிசிச் சோறும், அயிரை மீனும்
கனவாய்ப் போனது அவனுக்கு.
மகிழுந்தில் வறண்ட வைகை கடந்து
சென்றவன் கனவில் ஒரு வாய்
அரிசிச் சோறு மிதக்கும்.

கலப்பட அரிசி வெந்து நெகிழ அவன்
கனவுகளைத் தின்னும் நெகிழி.
பாழும் பசியில் வெந்து பசி அடங்காது
பாதியிலேயே திரும்புகிறான்
வேகாத அரிசியும் வெந்த வாழ்க்கையுமாக!.

(’மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்’ என்ற தலைப்பிட்ட கவிஞரின் சமீபத்திய தொகுப்பிலிருந்து) 

KARUNAKARAN SIVARASA

 A POEM BY

KARUNAKARAN SIVARASA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



The whole of today
hunting Bats goes on in the forest.
How else can one while away
this life turned upside down?
The anguish of not steering back
to usual course
the wings fluttering haplessly with
direction lost
stretching on for eons
and this is for silencing the war-cry
Oh, don’t ask
‘Hunt is one-sided war
Hence, Battle – Cry - What for?
In this life gone astray
except butchering the concealed betrayals
and the sorrow that bursts out scattering everywhere
what else can one do?
Fire being emitted out of the sun
in the space sans tree-shade or a patio
to recline
is what else
but one-sided war.
Scattered all over the field
the raw meat of Life.

Karunakaran Sivarasa

இன்று முழுவதும்
வௌவால் காட்டில் வேட்டை.
தலை கீழான வாழ்க்கையை
வேறெப்படிப் கழிப்பது?
வழி மாறி அலையும் சிறகுகளை
ஒழுங்கு விசையில் கொண்டு வர முடியாமல்
நீளும் தத்தளிப்பு
பன்னெடுங்காலமாகி நீள்வதைக் கொன்று போடுவதற்கான போர்ப்பிரகடனமிது
வேட்டை என்பது ஒரு வழிப்போர்
இதிலென்ன போர்ப்பிரகடனம்?
என்று கேட்க வேண்டாம்
கட்டறுந்த வாழ்க்கையில்
மறைந்திருக்கும் துரோகத்தையும்
வெளிப்பட்டுத் தெறிக்கும் துயரத்தையும்
கொன்று போடுவதை விட வேறென்ன செய்ய?
ஆற அமர்வதற்கொரு திண்ணையோ
மர நிழலோ இன்றிய வெளியில்
வெயிலில்
அனல் வெளிப்படுவதும்
ஒரு வழிப்போரன்றி வேறேது?
களமெங்கும் சிதறிக்கிடக்கிறது
வாழ்க்கையின் இறைச்சி.

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY 

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




TIME’S MEASURE

He was not my relative
He was made into one
along the way

That I am one half of him- I would
Imagine.

I bought two pairs of slippers
for both of us

He said that the slippers were gnawing at
the toe-gaps.
I applied balm on it.

His words speaking to others about
many more better and newer ones
reached my ears.

Squeezing my feet into the slippers
I hurry towards him
He abandoning his footwear
at the gate
was measuring the size of his feet
for the shoes drawn by someone alien.



காலம் வரையும் அளவு.

அவன் எனக்கு உறவுக்காரனில்லை

இடையில் உறவென செதுக்கப்பட்டவன்

நான் அவனில் சரிபாதியென கற்பனைகளை வரைந்துக்கொள்வேன்.

நான் எனக்கும் அவனுக்குமாக இரண்டு சோடி செருப்புகள் வாங்கி வந்திருந்தேன்.

அது அவன் பாதங்களின் விரல் இடுக்கினை கடிப்பதாக சொன்னான்.

நான் அதற்கு மருந்து தடவி விட்டேன்.

அதனை விட பல புதிய நவீனமானவைகளை பற்றி மற்றவர்களிடம் பேசுவது என் காதுகளுக்குள் பதிவானது.

நான் எனது செருப்பினுள் பாதங்களை திணித்துக்கொண்டு அவனிடம் விரைகிறேன்.

அவன் அச்செருப்பினை வாசலில் தனித்து விட்டப்படி
யாரோ வரைந்த சப்பாத்திற்காக தன் பாத அளவுகளை சரிபார்த்துக்கொண்டிருந்தான்
.
~~~~~~
மாரிமுத்து சிவகுமார் 

RAJAJI RAJAGOPALAN(MANARKAADAR)

 TWO POEMS BY 

RAJAJI RAJAGOPALAN (MANARKAADAR)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)


MY FATHER'S BICYCLE
[*Translated into English by Latha Ramakrishnan with several corrections suggested by the poet duly incorporated)

Father had a new Raleigh cycle.
Just the way he loved me he loved that too.
Soon after waking up at dawn
He would wipe and clean it
Would inflate the tyres often
Would rotate its wheels
and relish the sounds they give out
Remaining by his side
I would also be enjoying it
But after I came of age
He had never allowed me to ride on it
If given I would be offering it to my pals and
damage it, he held
Finishing my studies when I got a job
I bought a new bicycle to my dad.
Even that he had never allowed me to steer.
Then also he gave the same old reason.
During the time when he couldn’t walk
I found out from mother
that he had given it
free of cost to a daily-wager
who used to visit us often
to do some errands.
After a long time
when I visited my home on vacation
I came across that person.
Father’s cycle was then too
damn new.

அப்பாவிடம் ஒரு புதிய றலி சைக்கிள் இருந்தது.
அவர் என்னை நேசித்தது போலவே
அதையும் நேசித்தார்
காலையில் எழும்பியதும் அதைத்
துடைத்துத் துப்புரவாக்குவார்.
அடிக்கடி காற்றடிப்பார்
ஒழுங்காக ஆயில் விடுவார்
சில்லுகளைச் சுழற்றிவிட்டு
அதன் ஓசையில் மகிழ்ந்திருப்பார்
நானும் அதை வேடிக்கை பார்த்தபடி
பக்கத்திலிருப்பேன்
ஆனால் வயது வந்த பிறகும்
என்னை ஒருநாளும் அதை ஓட்டவிட்டதில்லை
கூட்டாளிமாருக்குக் கொடுத்து பழுதாக்கிவிடுவேனாம்
படிப்பு முடிந்து நான்
உத்தியோகத்துக்குப் போனபோது
அப்பாவுக்குப் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்தேன்
அதையும் ஒருநாளும் என்னை
ஓடவிட்டதில்லை.
பழைய காரணத்தைத் தான்
அப்போதும் சொன்னார்
அவர் நடக்க இயலாத காலத்தில்
ஒரு நாள் அம்மா மூலம் அறிந்தேன்
எங்கள் வீட்டுக்கு
அடிக்கடி கூலி வேலைக்கு வரும் மனிதருக்கு
சைக்கிளை சும்மா கொடுத்துவிட்டாரென்று
பல காலத்துக்குப் பிறகு
ஊருக்கு லீவில் போனபோது
அந்த மனிதரைக் கண்டேன்
அப்பாவின் சைக்கிள் அப்போதும் புத்தம்
புதிதாகவே இருந்தது.

மணற்காடர்

(2)

More than sixteen years
Ken Shaw has been my neighbour
Seven feet tall.
The lovely way he would call me
has always held me captive.
On all evenings
he would come stroling along the sidewalk
hand in hand with his wife Demi.
Demi is an Italian; Ken, an Englishman.
Their love began in their college, I heard.
And lovers they remain till date.
As they have no children
they adopted one in the clan of Afro-Americans
and one from China _
both girls.
For the Syrian family of refugees arrived recently
Ken Shaw has thrown open a portion of his residence.
Why he is so very tall
I can now grasp it all


பதினாறு வருடங்களுக்கு மேலாக
கென் ஷா எனது பக்கத்து வீட்டுக்காரன்
ஏழடி உயரமாய் இருப்பான்
அவன் என்னைப் பெயர் சொல்லி
அழைக்கும் அழகில் அதிசயித்திருக்கிறேன்
மாலையானதும் தவறாமல்
மனைவி டெமியின் கையைப் பிடித்தபடி
தெருவோரம் நடந்து வருவான்
டெமி இத்தாலியன் கென் ஆங்கிலேயன்
கல்லூரியில் துவங்கிய காதல் என்று அறிந்தேன்
இப்போதும் காதலர்கள் போல்தான் இருக்கிறார்கள்
இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால்
கறுப்பு இனத்தில் ஒன்றும்
சீனாவிலிருந்து ஒன்றுமாகப்
பெண்பிள்ளைகளாகத் தத்தெடுத்துக்கொண்டார்கள்
அண்மையில் வந்த சிரியா அகதிக் குடும்பத்துக்கு
தன் வீட்டின் ஒரு பகுதியைத்
திறந்துவிட்டிருக்கிறான் கென் ஷா
இவன் ஏன் இத்தனை உயரமாய்
இருக்கிறான் என்பது
இப்போதுதான் விளங்குகிறது.


மணற்காடர் (’ஒரு சிறு புள்ளின் இறகு’ தொகுப்பிலிருந்து)

PA.DHANANJEYAN

 A POEM BY 

PA.DHANANJEYAN


‘Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


CROW’S COMMUNIQUE
For the crows that come flying on New Moon Day
have placed a handful of food.
Have christened those crows that visited that day
with the names of our ancestors _
as Grandpa Crow
Grandma Crow.
For driving away the crows that come on a daily basis
have tied a piece of black cloth on a stick
For telling something more
to the humans who seek their kith and kin
just one day
at some specific hours
to satisfy their own needs
the crows keep hovering above
circling our abode
day after day.



காக்கை சொல்லும் செய்தி

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
அமாவாசையன்று
பறந்து வரும்
காக்கைகளுக்கு
கைப்பிடி உணவை வைத்தாயிற்று
அன்று வந்த காகங்களை
தாத்தா காக்கை
ஆயா காக்கை
என முன்னோர்களின்
பெயரிட்டும் அழைத்தாயிற்று
தினந்தோறும் வரும்
காக்கைகளை விரட்ட
கருப்பு துணியை ஒரு குச்சியிலும் கட்டியாயிற்று
சொந்தங்களை ஒரு நாள்
ஒரு வேளைக்கு மட்டும்
தேவைகளுக்காக
தேடும் மனிதர்களுக்கு
இன்னும் ஏதோ சொல்ல
நம் வீட்டைச் சுற்றி
வட்டமிட்டுக்கொண்டேயிருக்கிறது
தினந்தோறும் காக்கைகள்.

ப.தனஞ்ஜெயன்

IYYAPPA MADHAVAN

 A POEM BY

IYYAPPA MADHAVAN

Translated into English by Latha Rmakrishnan(*First Draft)


First and foremost believe that the bird would fly.
Believe too that it has a nest
a family
and a branch.
Believe that it has a conjugal life
It has night
It has lust.
Just like us it has also come into this world
to live
Do believe.
In its familial life too
there would be
harmony and disharmony.
All alike
but we don’t fly.
We would catch those flying
and hold them captives inside cages.
Then we would forget that the bird can fly.
The innocent bird would convert the cage
into a nest.

Iyyappa Madhavan


முதலில் பறவை பறக்கும் என்பதை நம்புங்கள்
அதற்கொரு கூடு
அதற்கொரு குடும்பம்
அதற்கு ஒரு கிளை இருப்பதையும் நம்புங்கள்
இல்லறம் உண்டு
இரவு உண்டு
காமம் உண்டு என்பதை நம்புங்கள்
அதுவும் இவ்வுலகிற்கு நம்மைப் போலவே
வாழவே வந்துள்ளது
என்பதை நம்புங்கள்
அதன் இல்வாழ்வில்
ஊடலும் கூடலும் இருக்கும்
நம்மைப் போலவே தான்
ஆனால் நாம் பறப்பதில்லை
ஆனால் பறப்பதைப் பிடித்து
கூண்டில் அடைப்போம்
பிறகு பறவை பறக்கக் கூடியது
என்பதை மறந்து விடுவோம்
வெகுளிப் பறவையோ கூண்டை
கூடாக்கிக்கொள்ளும்.

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024