TWO POEMS BY
PAADHASAARI VISWANATHAN
where there is a wall-clock
The clock has a glass-cover
Inside that glass cover
There are those clock hands
that play run and catch game forever.
At times those clock hands would
stop running
and refrain from showing the time.
And an old man there
who would never fail to change the battery
even for that
Stock-still clock.
It’s ages since his one and only son
had settled in a foreign soil
with his family
The senior citizen
Who even after that
went on
replacing the old battery
with the new one
is today dead and gone.
Paadhasaari Vishwanathan
•
ஆளற்ற ஓர் தனி அறையுமுண்டு
அறையிலோர்
சுவர்க்கடிகையும் உள்ளது
உள்ளததில் கண்ணாடிக் கூடுமுளது
கூடு னுள்ளே
ஓடிப் பிடித்து விளையாடும் நேரக்குறி முட்களும்
நகரக் காண்பதுண்டு
நேரக்குறி முட்கள்
நகராது நின்று
காலம் காட்டாது
ஓடாதிருப்பதுமுண்டு
ஓடா அக்கடிகைக்கும்
ஓயாது பேட்டரி மாற்றிவிடும் முதியோன்
ஒருவர் உண்டு
அவ்வொருவரின்
ஒற்றை மகனும் தன்குடும்பமென
அயல் தேசம் ஏகி
ஆண்டுகள் பலவானதுண்டு
ஆகிய பின்னும்
அக்காலி அறை
ஓடாச்
சுவர்க்கடிகைக்கும்
ஓயாது பேட்டரி மாற்றிய
அம்முதியோன்
இன்று காலமானார்.
பாதசாரி விஸ்வநாதன்
(2)
Forgetting the scars
It once again offers flowers
so fine
Daily they take them in the flower-basket
to Badrakaaliamman shrine
Plants are children
Trees, the Aged Ones.
செம்பருத்திச் செடியின் கைகால்களை முறித்து விட்டனர்
ஆயினும்
வடு மறந்து
மீண்டும் மலர்கள்
தருகிறது
அன்றாடம்
பத்ரகாளியம்மன் கோவிலுக்கு
பூக்கூடையில்
எடுத்துச்செல்கிறார்கள்..
செடிகள் குழந்தைகள்
மரங்கள் முதியவர்கள்.
பாதசாரி விஸ்வநாதன்
No comments:
Post a Comment