INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

RAM SANTHOSH

A POEM BY

RAM SANTHOSH

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


GREETING THE YEAR BEING BORN IN THE MIDST OF CATASTROPHE


Come,my new year – Welcome

Come what may, I am prepared
All those who would be always on the move
As migratory birds
Are damned by thee to stay caged in isolated nests.
Yet as an artiste I am always
Right from my primordial days
Remain in my own nutshell
To that extent
I can mock at thee
Without being sarcastic.
Ho, my pet New Year
I keep doing what I have been doing
That is my nature.
And the weariness of it at times.
Maybe that’s why
I choose books
And it is they that I choose
Determine my age.
The different lifes it expands
I too turn into a species and experience
The chill, heat
And torrential downpour
And many more.
In just a lone four-walled space
I live with I - I - I - I
- So many Oh, My!
To put it more precisely
I suffer i regret i get hurt and am pained
When I cry something makes me
Laugh too:
That takes after you, so to say.
Wading sthrough street after street
Going beyond borders
Whenever wherever I come across
The representative of some unknown culture
She, He or of unisex –
They have the same two eyes as mine,
Hands and legs alike
Either a better being than me
Or more unfortunate than I am
Or that I am being their replica
I witness
and become wonderstruck.
Oh, come , My New World
I beseech thee
Just as me they are also
Somewhere, near or for
In some remote corner
Staying alive
I strongly believe.
Let’s be so ataying huddled in our nests itself
It is alright.
But I beseech thee
Keep us all alive
Let us survive
So that I can read them
And they can read me –
Please have mercy
Oh, My Destiny
My great hope
whom I kiss wholeheartedly.!

பேரூழிற்கு இடையில் பிறக்கும் வருடத்தை வரவேற்றல்…
வருக என் புது வருடமே
நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்
எப்போதும் வலசைப் பறவைகளென பருவங்கள் தோறும்
திரிந்தலையும் யாவரையும் நீ
ஒற்றைக் கூட்டில் வாழும்படி நிந்தித்துவிட்டாய்
எனினும் ஒரு கலைஞனாக நான் எப்போதும்,
என் காலஆதிதொட்டே கூடடைந்துதான் இருக்கிறேன்;
அந்த அளவில் உன்னை நான்
ஒரு சிறு பழிப்பு காட்டமுடியும்.
என் செல்ல வருடமே,
நான் செய்வதையேதான்
செய்துகொண்டிருப்பவன்
அப்படித்தான் நான்
அதுவே எனதியல்பு;
அதன் சில நேரத்தைய சலிப்பு.
அதனால்தானோ என்னவோ
நான் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறேன்
நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களே
எனது பருவங்களைத் தீர்மானிக்கின்றன.
அது விஸ்தரிக்கும் விதவிதமான வாழ்க்கைகளில்
நானுமோர் ஜீவியாகி, அஜ்ஜீவன்கள் அனுபவிக்கும்
குளிரை, வெம்மையைக்
கொட்டும் மழையை அனுபவிக்கிறேன்;
ஒற்றை நான்கு சுவருக்குள்
நான் நான் நான் நான்
என்ற பலரோடு நான் வாழ்கிறேன்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால்,
வருந்துகிறேன், வாதை கொள்கிறேன்.
நான் அழும்போது எதுவோ ஒன்று
என்னைச் சிரிக்கவைத்துவிடவும் செய்கிறது;
அதற்கு உன் குணம்.
தெருத்தெருவாக, எல்லைகளைத் தாண்டி,
நான் அறியாத ஒரு புதுக்கலாச்சாரத்தின்
எந்த ஒரு பிரதிநிதியையும் சந்திக்கும் போதும்
அவனோ, அவளோ, பால்புதுமையினரோ,
என்னைப் போலவே இரு கண்கள்,
கை, கால்களோடு,
என்னைவிடவும் மேலானவராகவோ, ,
அல்லது என்னை விடத் துர்பாக்கியமானவராகவோ,
அல்லது
அவர்களைப் போலவும் நான் இருப்பதைக்
கண்டு வியக்கிறேன்.
வா என் புது வருடமே,
உன்னை நான் வேண்டிக்கொள்கிறேன்
என்னைப் போலவே அவர்களும்
எங்கோ ஒரு மூலையிலோ, எனதருகிலோ
உயிரோடுதான் இருக்கிறார்கள் என்ற
நம்பிக்கை எனக்குண்டு
நாங்கள் கூடடைந்தாவது எஞ்சி விடுகிறோம்;
பரவாயில்லை.
ஆனால், அவர்களை நானும்,
என்னை அவர்களும் வாசிக்கவாவது
எல்லோரையும் பிழைத்திருக்கும் படி செய்
என் ஊழே
நான் உச்சி முகரும் பெரு நம்பிக்கையே!

றாம் சந்தோஷ்

(01.01.2021)

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024