INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

K.MOHANARANGAN

   A POEM BY

K.MOHANARANGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

FAITH INHERENT
...................................................................................................................................................................................................

(Translated into English by Latha Ramakrishnan - * First Draft)

River


Pool Pond Lake Sea
- so
plunging into waters
and probing
Oh, how so much of prey
can they have in every way
Yet why do these foolish fishes
ever are lured by the worm
writhing in the hook
and approach it to have a bite of it?
Just as any sane person
I too have pondered over it
and turned confusion-confounded,
to say the least
till the time I met those
minute dark eyes
having a calm and depth
that go beyond
questions that turn you ill at ease
and answers that provide peace.
.........................................................................................

* தமிழில் இந்தக் கவிதையின் தலைப்பு ‘தேரான் தெளிவு’. வள்ளுவரின் குறள் வரி . ஆனால் கவிதை ஏதோவொரு விதத்தில் வள்ளுவர் சொல்வதை மறுதலிப்பதாய் அதில் அமைந்திருக்கும் தொனியும் அதில் கிடைத்த வாசகப்பிரதியுமாக ஆங்கில மொழிபெயர்ப்புக்கு FAITH INHERENT என்று தலைப்பிட்டேன்.
...........................................................................................................................................................................
தேரான் தெளிவு
_______________________
ஆறு,
குளம்,குட்டை,
ஏரி,கடல்
என்று
நீரில் மூழ்கித்
தேடினால்,
எவ்வளவு இரை
எங்கெல்லாம் கிடைக்கும்!
இருந்தும்
இம் முட்டாள் மீன்கள்
ஏன்
எப்போதும்,
தூண்டில் முள்ளில்
துவளும் புழுவினையே
நாடி வந்து
கடிக்கின்றன?
புத்திசுவாதீனமுள்ள
ஒருவனைப் போலவே
நாளும் யோசித்து
நானும் குழம்பியிருக்கிறேன்;
அலைகழிக்கும் கேள்விகளுக்கும்
ஆறுதல் தரும் பதில்களுக்கும்
அப்பாற்பட்டதொரு
அமைதியும்
ஆழமும் கொண்ட
அச் சிறிய கரிய விழிகளை
நேரிட்டுப் பார்க்கும் மட்டும்.

க. மோகனரங்கன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE