INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

BALA KARUPPASAMI

    A POEM BY

BALA KARUPPASAMI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

[* With corrections suggested by the Poet duly incorporated]
I am far away from Poetry
As that existing between desert and arctic region
When I see the polished lines of a poem
A longing weighs heavy in me.
I rub the words and see
It is an all too ancient Aladdin’s lamp
As smoke the dust rises
In that her moth-eaten portrait is seen.
I long to make a replica of it
substituting the moth-eaten portions
with a gentle poetic heart
using my tears as ink.
Alas, how sad it is _
not having even a photograph of hers.
The blurring smokiness subsides
I put the lamp back inside where it was.
Yet again on a day
far away
when too much dust would’ve gathered
I would take it out and softly blow the air on it.

கவிதையிலிருந்து நான் வெகுதொலைவில் இருக்கிறேன்
பாலைவனத்துக்கும் பனிசூழ் நிலத்துக்குமான தொலைவு
பாலிஷ் செய்யப்பட்ட கவிதை வரிகளைக் காணும்போது
என்னுள் ஏக்கம் எழுகிறது
சொற்களைத் தேய்த்துப் பார்க்கிறேன்
அதுவொரு அரதப் பழைய அலாவுதீன் விளக்கு
புகையாய்த் தூசு கிளம்புகிறது
அதில் செல்லரித்த அவள் படம் தெரிகிறது
வேகவேகமாய் அதை அப்படியே அச்செடுக்க
அரித்துப் போன இடங்களை நளினமான
கவித்துவமான உள்ளத்தால்
கண்ணீரால் எழுதத் துடிக்கிறேன்
அவளது ஒரு புகைப்படம் கூட இல்லாதது எத்தனை துயரமானது
புகைமூட்டம் அடங்கி அமர்கிறது
விளக்கை அப்படியே தூக்கி உள்ளே வைத்துவிடுகிறேன்
மீண்டுமொருநாள்
வெகுகாலம் கழித்து
நிறையத் தூசு படிந்திருக்கும் ஒருநாள்
அதை எடுத்து ஊதிவிடுவேன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024