INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

MALINI MALA

   A POEM BY

MALINI MALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


FLAW


For the parrot speaking in Tamil pristine
feathers had not grown beyond the walls

In the food-plate of it
that has lost its sense of smell
There were morsels of food in abundance.
At times
it reproached its caretaker
in choicest abuses.
The white parrot of recent motherhood
was greeting its chicks
which writhed as skinny mesh
“Good Morning”.
In what language their father would have expressed Love
or humans about sex sans love
I was musing sadly.
Softly swinging the cradle
when it began singing lullaby in English
shocked as if kicked hard
I fell headlong in the jungle.
There the song of a forest
was hanging with its musical strains torn.
For the day
when the grand mean clan of the world
would cease to be
I began waiting
as an out of tune song of the wild

பிசகு
..........
சுந்தரத்தமிழில் பேசிக்கொண்டிருந்த பச்சைக்கிளிக்கு,
சுவர்களுக்கு வெளியே இறக்கை வளர்ந்திருக்கவில்லை.
நுகர் உணர்வுகள்
மழுங்கிப் போன அதன் உணவுத்தட்டில்
சோற்றுப் பருக்கைகள் மிகுந்திருந்தன.
சமையங்களில் அது
கெட்ட வார்த்தைகளில் தன்
வளர்ப்பாளினியைத் திட்டிற்று.
புதியாய் தாயாகியிருந்த
வெள்ளைக்கிளி
தோற்பிண்டமாய் நெளிந்த குஞ்சுகளிற்கு,
Good morning சொல்லிக்கொண்டிருந்தது
அவற்றின் தந்தை என்ன மொழியில்
காதல் சொல்லியிருக்கக் கூடுமென்றும்
காதலற்ற கலவி பற்றி
மானிடர் கற்றுக் கொடுத்திருக்கக்கூடும்
எனவும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
குஞ்சுகளின் தொட்டிலை ஆட்டி
ஆங்கிலத்தாலாட்டை அது பாடத்தொடங்கியதும்,
உதைபட்ட அதிர்வில் கானகத்தில் விழுந்தேன்.
அங்கே ஒரு வனத்தின் கானம்
இசையறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.
உலகத்தின் மகத்தான சல்லியினம்
அழிந்து போகும் நாளுக்காய்
காத்திருக்கத் தொடங்கினேன்
சுதி பிசகிய ஓர் கானகப் பாடலைப்போல்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024