A POEM BY
NESAMIGU RAJAKUMARAN
Just as birds with their names unknown
In the calm morning there came floating
a sorrow-flowing flute strain
The musical instrument’s voice
lacked any pitch resonant.
Or, can there be any resonant pitch
for sorrow....
I came to the entrance
It was a Pipe organ
Neither Clarinet nor Nagaswaram
Sporting a shape between the two
Across the shoulders of he who came playing it
as crisscrossing garland
some faded clothes.
I understood
He the Boom Boom Bull- man.
Where is the cow asked I
Dead and gone, master – said he
I gave him a ten rupee note.
Receiving he continued playing his instrument
and moved to the next door.
In my mind’s eye
the swings and sways of the ears of Boom – Boom bull
busy shaking its head
blended seamlessly as lines of the musical strain
Music pristine
of Sorrow
flowed out of that musical instrument
and descended into my ears.
‘Sorrow-Surging Unsigned Musical Instrument’
I now christened that instrument thus!
பெயர் தெரியாத பறவைகள் போலவே உள்ளன
பெயர் அறியா
இசைக் கருவிகளும்.
அரவமற்ற காலையில் மிதந்து வந்தது சொல்லவொண்ணா
துயர் கசியும் குழலிசை ஒன்று.
சுதியற்றிருந்தது கருவியின் குரல்.
அல்லது துயருக்கு ஏது பிசிறற்ற சுதி?
வாசலுக்கு வந்தேன்.
அது கிளாரினெட்டும் இல்லாத நாதஸ்வரமும் இல்லாத ஒரு கருவி.
இரண்டுக்கும் இடைப்பட்ட உருவம்.
வாசித்து வந்தவனின் தோளில்
குறுக்கு மாலையாக
வண்ணம் மங்கிய சில துணிகள்.
புரிந்து கொண்டேன்.
பூம் பூம் மாடுடையோன்.
மாடு எங்கே என்றேன்.
செத்துட்டு சாமி என்றான்.
பத்து ரூபாய் கொடுத்தேன்.
மீண்டும் வாசிப்பைத் தொடர்ந்தபடி
அடுத்த வீட்டுக்கு நகர்ந்தான்.
என் கற்பனையில் இசையின் மேல்
வரிகளாக இணைந்தன தலையாட்டும்
பூம் பூம் மாட்டின் காதசைவுகள்.
பிசிறற்ற சுத்தமான துயரின் இசை
அந்த ஊது குழலிலிருந்து என் செவிகளுக்குள் இறங்கியது.
துயர் வழியும் பெயரற்ற இசைக் கருவி என்று
இப்போது பெயர் சூட்டிக் கொண்டேன்
அந்தக் கருவிக்கு!
நேசமிகு ராஜகுமாரன்
No comments:
Post a Comment