INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

ABDUL JAMEEL

TWO POEMS BY

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1) UMMA - THE LIGHT THAT READS HER CHILDREN’S GLOOM

Though Umma’s cooking is not all that tasty
It is only when the food is mashed with her loving hand
and she feeds her children
adding her affection
the kids get rid of their hunger.
Though Umma’s face is beauty-personified
it is only when she with her smile serene
gifts her children with kisses
the tear-filled faces of her children
bloom at once.
Though Umma’s words don’t sound sweet
it is only when she sings lullaby
children fall asleep upon her shoulders blissfully.
Though Umma’s life remains sans light
It is with the help of her eyes’ glow
children forever read their gloom ,
you know.
Abdul Jameel •

குழந்தைகளின் இருளை
வாசிக்கும் ஔிதான் உம்மா
_____________________
உம்மாவின் சமையல்
சுவையாக இல்லையென்றாலும்
அவளின் கையால் சோறு பிசைந்து
அன்பையும் கலந்து
ஊட்டும் போதுதான்
குழந்தைகளின் பசி ஆறுகிறது
உம்மாவின் முகம் அழகில்லையென்றாலும்
இதழ் பதிந்த முத்தங்களை
புன்னகை சொரிந்தபடி
அவள் பரிசளிக்கும் போதுதான்
குழந்தைகளின் அழுத முகம்கங்கள்
உடன் மலர்ந்துவிடுகின்றன
உம்மாவின் பேச்சு
இனிமையாக இல்லையென்றாலும்
அவள் தாலாட்டுப் பாடும் போதுதான்
தோழ்மேல் குழந்தைகள் அயர்ந்துறங்கிவிடுகிறது
உம்மாவின் வாழ்வு ஔியற்றிருந்தாலும்
அவளின் கண்களின் ஔியால்தான்
தங்களது இருளை
ஒயாது வாசிக்கின்றன குழந்தைகள்

ஜமீல்

2. CAN HOUSES DWELL WITHOUT DOORS



The door there
with face to the floor
Lying abandoned
Would have been safeguarding a house
Once upon a time.
Today with all its identity lost
And its shape and ornamental decorations decayed
It remains
Still it would be retaining still
In tact
the history of the house
it dwelt in
its deadly secrets
and memories galore
and many more
Sometimes the doors would be knowing
things happened without the knowledge of the house-owner.
For,
From the time it is locked
Till it opened
Mostly the doors of the house alone
Keep reading the abode
Without doors
The houses never become that, for sure.
Abdul Jameel
கதவுகளின்றி வீடுகள் வசிக்குமா
_____________________________________
கை விடப்பட்ட நிலையில்
ஒதுக்குப் புறமாக
முகம் புதைந்து கிடக்கும் கதவானது
முன்னொரு காலத்தில்
ஒரு வீட்டின் அரணாக வாழ்ந்திருக்கும்
இன்று அடையாளமற்றவாறு
பொழியப்பட்ட அலங்கரங்களும்
வடிவமும் சிதைந்து கிடக்கிறது
இருந்தும் தான் வாழ்ந்த வீட்டின்
ஆதி வறலாறுகளையும்
பரம ரகசியங்களையும்
மேலும் சில நினைவுகளையும்
இப்போதும் மனசில்
சிதையாமல் வைத்திருக்க கூடும்
சில சமயம் வீட்டானுக்கு
தெரியாமல் நிகழ்ந்த
சம்பங்களை கூட
கதவுகள் அறிய வாய்ப்பிருக்கிறது
ஏனெனில் வீட்டை பூட்டி விட்டு
திரும்பி வரும் வரை
அநேகமாக அறைக் கதவுகள்தான்
வீட்டை வாசிக்கின்றன
கதவுகளின்றி வீடுகள்
ஒரு போதும் வீடாவதில்லை
ஜமீல்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE