A POEM BY
MUGIL NILA TAMIL
Alighting from the bus
‘Leave my hand, my girl
I ‘ll come”, said father.
‘Let it be – what if I fall
That’s why I hold’
-responds the daughter.
The shivers and quivers of the body of
He who walks slowly
reflect in her bodily movements too.
‘Shall we have a cup of Tea?’
Asks She.
‘Don’t want. I am strong’
Says the Father.
‘But my tongue is dry
I need it, that’s why -
Please sit, won’t you?’
Saying so
She comes holding two mugs of Tea.
Giving one to him
She drinks from the other.
‘Come on, you won’t listen to me’
Holding it in his trembling hands
the father drinks it all.
Pushing his dhoti to one side
taking out a paper bag
He extends a shrunken five rupee note
‘Go give it and come’
Receiving it
She safeguards it inside her handbag
and gives a five hundred rupee note to the shopkeeper
and buys some eatables
And despite his refusal to accept
She forces them in his hands.
The balance two hundred rupee note
She extends it to her father
Hearing him say ‘Don’t want’
‘Didn’t I accept when you gave
In the same way you should behave’ -
Thus insisting she makes him accept.
Taking it
His sunken eyes
shone momentarily…
Must be his son -
The one arriving in a two wheeler
Hurrying him to ascend the pillion
Not caring a damn
about his safety
He left the place in lightning speed….
She stood there staring at the passage
through which her father disappeared
with tears swelling in her eyes…
Seemed like the son and daughter
were not close
they didn’t utter a word to each other.
Climbing again into the bus in which
she had come
She has taken out the five rupee note given by her father
and is stroking it fondly.
Whatever be the age
the bonding between father and daughter
is magnificent to the core…..
For
isn’t father any daughter’s foremost hero?
•
பேருந்தை விட்டு இறங்கியதும்
கைய விடும்மா
நானே வருவேன்
என்கிறார் தந்தை...
பரவாயில்ல இருக்கட்டும்
நான் விழுந்துட்டா
அதான் பிடிச்சுக்கிறேன்
என்கிறாள் மகள்...
மெல்ல நடந்தவரின்
உடல் நடுக்கம்
அவள் அசைவுகளிலும்
தெரிகிறது...
ஒரு டீ குடிப்போமா
என்கிறாள் மகள்
இல்ல எனக்கு வேணாம்
தெம்பு இருக்கு
என்கிறார் தந்தை...
இருப்பா நாக்கு வரடுது
எனக்கு வேணும்
இங்க உக்காருங்க
என்றவள்
இரண்டு தேநீர் குவளையோடு வருகிறாள்...
ஒன்றை அவருக்கு
கொடுத்தவள்
இன்னொன்றை
இவள் அருந்துகிறாள்...
வேண்டாம்னா கேக்கமாட்டே
நடுங்கும் கையில்
பற்றியபடி அருந்துகிறார் தந்தை...
தனது வெள்ளை வேட்டியை
விலக்கி விட்டு
காகிதப் பை
ஒன்றை எடுத்தவர்..
கசங்கிய ஐந்துரூபாய்
தாளை நீட்டுகிறார்...
கொடுத்துட்டு வா என்றபடி...
வாங்கிக் கொண்டவள்
கைப்பையில் பத்திரப்படுத்தி விட்டு
ஐநூறு ரூபாய் தாளை
கடைக்காரரிடம் நீட்டி
தின்பண்டங்கள் வாங்கி
அவர் மறுத்தும்
கையில் தினிக்கிறாள்..
மீதி
இரண்டு நூறு ரூபாய்
தாளை
அப்பாவிடம் நீட்டுகிறாள்...
வேண்டாம் என்றவரை
நீங்க கொடுத்தப்போ
நான் வாங்கினேன் இல்ல
இப்போ நீங்க வாங்கிக்கோங்க என்று
வற்புறுத்தி தினிக்கிறாள்...
வாங்கியவரின் முகத்தில்
இடுங்கிய கண்கள்
ஒரு நொடி ஒளிர்ந்தது...
இருசக்கர வாகனத்தில்
வந்தவர் மகனாக
இருக்க கூடும்...
சீக்கிரம் ஏறுங்க என்று
ஏற்றிக் கொண்டு
பிடித்துக் கொண்டாரா ?
என்றுகூட கவனிக்காமல்
அதிவேகமாய் கிளம்பிப் போனார்...
அப்பா போன திசையையே
வெறித்தபடி நின்றவள்
விழி குளமானது...
மகளுக்கும் மகனுக்கும் ஆகாது போல
இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை ...
அவள் வந்த பேருந்தில்
மீண்டும் ஏறிக் கொண்டவள் ...
அவர் தந்த ஐந்துரூபாயை
எடுத்து தடவிக் கொண்டிருந்தாள் ..
எவ்வயதிலும்
அப்பாக்களுக்கும் மகள்களுக்குமான
பந்தம் மகத்தானது...
மகள்களின் முதல் கதாநாயகன் தந்தையன்றோ
முகில் நிலா தமிழ்
No comments:
Post a Comment