INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

THENMOZHI DAS

  A POEM BY

THENMOZHI DAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

WHAT A GIGANTIC SQUARE THIS WORLD IS


Aloneness shakes the door
that cannot be broken by tears.
More than ‘nothing’
the snakes wandering at that instant
sketch the shapes and figures of Fear
As surplus superfluous
compound wall are there in this world
In the soft turkish towel given by the lover
the fingers remain still
The taste of being alive fed into the lips
stays unchanged.
Upon the lips quivering for kisses
applying a few drops of tears and deceiving it
becomes a must.
Fingers that fail to end the pain
wail as ten lives put together.
The benign voice never to be heard
roll as mercurial beads
upon the middle of Day’s crest.
The never to be seen face brimming with affection
Eyes filled with love
growing in the womb
Demanding cradle to be tied in the heart
keep resurrecting itself
into millions of pillars.
The three steps at the entrance
break open into the valley of
skies trillion
“Near’ being years infinite
‘Near’ being from time immemorial
A mere dark shadow sans lips
The illusory contentions of this birth
and the one previous
is folded by Night with both its hands
once and for all.
What a precise ultimate door
Death is
That the hands to open it are not with us
_ Oh the myth of it
Beyond all directions
There is one radial
Nothing more
Beyond the life-breath dancing
at the peak of love
There is nothing more
What a minuscule 'Appam' this Life is
bestowed on human with such natural ease .
Thenmozhi Das

எவ்வளவு பெரிய சதுரம் இந்த உலகம்
கண்ணீரின் உடைக்கமுடியாத கதவை உலுக்குகிறது தனிமை
ஒன்றுமில்லை என்பதை விட
அத்தருணத்தில் மேயும் பாம்புகள்
அச்சத்தின் ரூபங்களை வரைகின்றன
மேலதிகமாக இவ்வுலகில் மதிலுகள் இருக்கின்றன
காதலன் கைதொட்டுத் தந்த பூத்துவாலையில்
இன்னும் விரல்கள் இருக்கின்றன
உதட்டில் ஊட்டிவிட்டுப் போன
உயிர்ப்பின் சுவை மாறாமல் இருக்கிறது
முத்தங்களுக்கு நடுங்கும் உதடுகளிடம்
சில சொட்டு கண்ணீர்த் துளிகளைத் தடவி ஏமாற்ற வேண்டி இருக்கிறது
வலிகளைத் தீர்க்க முடியாத விரல்கள்
பத்து உயிர்களாய் கூடி புலம்புகின்றன
கேட்க முடியாத அன்பின் கனிந்த குரல்
பகலின் உச்சியில் பாதரச மணிகளாகி உருளுகின்றன
பார்க்க முடியாத பாசம் ததும்பும் முகம்
கருவறையில் வளர்வதும்
நெஞ்சில் தொட்டில் கட்டச் சொல்வதுமாய்
பிரியம் நிறைந்த கண்கள்
பலகோடித் தூண்களாகத் தன்னைப் புதுப்பிப்பதுமாய் இருக்கின்றன
மூன்று வாசல்படி முப்பத்து முக்கோடி வானின் பள்ளத்தாக்காகப் பிளக்கிறது
"அருகே" என்பது ஆண்டாண்டு காலமாக உதடுகளற்ற கரு நிழலாக இருக்கிறது
~
இம்மை மறுமை பற்றிய கற்பிதங்களை
இரவு இருகரங்களில் ஒரேயடியாக மடிக்கிறது
எத்தனை துல்லியமான கடைசிக் கதவு மரணம்
அதனைத் திறக்கும் கைகள் நம்மிடமில்லை என்பது எத்தகைய மாயை
அத்தனை திசைகளுக்கும் அப்பால்
ஒரு ஆரக்கால் இருக்கிறது
ஒன்றுமேயில்லை
அன்பின் உச்சியில் ஆடும் உயிருக்கு மேல்
ஒன்றுமேயில்லை
எவ்வளவு சிறிய அப்பம் மனிதனுக்கு தன்னியல்பாகக் கிடைத்த வாழ்வு
- தேன்மொழி தாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024