A POEM BY
MA.KALIDAS
In the manner of the attire cast aside asking
From the fingers that wish to hold it fast
thin vibrations of the electric cable
permeates inside the cabin.
The magnetic pull of lips
being the ultimate missile of copulation
remain standing in front of the officer
extending application for emergency leave
Why hesitate so much
to wipe out with an eraser
The V shape of the legs
in haste utmost ever.
The words slipped off
while being shifted from the Emergency Ward
to the ordinary ward
_a few ants pursue.
The need for procuring the fourth bottle
Is not there at present – so the young nurse
eyeing her wrist sets right
the knob of minuscule life.
After the visiting hour is over
a joyous song
stars resonating there.
கழற்றிப் போடப்பட்ட ஆடை
'என்னைத் துவைத்து எடுத்து உலர்த்தேன்' என்பது போல்
ஒரு உயிர் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
இறுகப் பற்ற விழையும் விரல்களிலிருந்து
மின்சாரக் கம்பியின் மெல்லிய அதிர்வுகள் அறைக்குள் விரவுகின்றன.
கலவியின் ஆகச் சிறந்த அஸ்திரமான
உதடுகளின் வசீகரம்
அதிகாரி முன்
அவசரகால விடுப்புக்கான விண்ணப்பத்துடன் நிற்கின்றன.
எப்போதும் பரபரப்பிலிருக்கும்
கால்களின் V வடிவத்தை
ஒரு ரப்பரால் அழிக்க ஏன்
இவ்வளவு தயக்கம்?
அவசர கால அறையிலிருந்து
சாதாரண அறைக்கு மாற்றும் போது
சிந்திய சொற்களைப் பின்தொடர்கின்றன சில எறும்புகள்.
நான்காவது பாட்டிலுக்கான கொள்முதல் இப்போதைக்கு அவசியமில்லையென
மிகப்பெரிய ஆறுதலாய்ச் சொட்டும்படி
மிகச்சிறிய வாழ்வின் திருகை
'மணி'க்கட்டைப் பார்த்தபடி சரிசெய்கிறாள் இளஞ்செவிலி.
பார்வையாளர் நேரம் முடிந்தபின்
ஒரு குதூகலமான பாடல்
அங்கே ஒலிக்கத் தொடங்குகிறது.
No comments:
Post a Comment