INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

CHANDRA MANOHARAN

 A POEM BY

CHANDRA MANOHARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


TORMENT
Beneath the shade-giving tree
The hour of dusk lies sprawling
Our memories all in tact
We have buried under it –Haven’t we?
Come, let’s dig all of it out
They are not yet ‘ceased to be’
In the flooding warmth of intense heat
How so hungry they are,
Alas…
In the early hours of morning rolling into one
We lay coiled as a ball of cow-dung.
So as to see the Koel crying with throats
turning hoarse
We shook the branches
Can the exclusivity of the black-figurine bird
be grasped by the eyes ever!
Oh my - a threat lurking at a distance
The reality of setting dumb trees aflame
In the grazing fire its feathers getting scorched
Before they wither it leaps and escapes from view.
Long stretches the passage – far and wide
At last
In the fire that approaches fast
before our goodbye
Our shadows too extinguish by and by
The sandal-aroma of memories eternal
fills the nostrils one after another
going well past the stinging tongues of fire.
Henceforth…. Everything is but an illusion
Inside the burial –pit of our memories
we remain
as bodies that breathe not ever again.

நொசிதல்
நிழல் தரும் மரத்தின்கீழ்
அந்திநேரம் கொட்டிக் கிடக்கிறது
சேதாரம் இல்லாத நம் நினைவுகளை
அதனடியில் புதைத்து வைத்தோமே
வா .... தோண்டியெடுக்கலாம் !
அவை மரிக்கவில்லை இன்னும்
தகதகத்துப் பெருகிய வெப்பத்தில் அவை
பாவம் ....காய்பசியில் !
இளங்காலையில் நாம் உருண்டு புரண்டு
சாணம்போல் அப்பிக்கிடந்தோம்
வரள வரளக் கூவும் குயிலைப் பார்க்க
கிளைகளைப் பிடித்து உலுக்கினோம்
கருஞ்சிற்பப் பறவையின் பிரத்தியேகம்
கண்களுக்கு ஒருபோதும் சிக்குவதில்லையே !
அய்யகோ ! தொலையில் ஓர் அச்சுறுத்தல்
ஊமை மரங்களுக்குத் தீ மூட்டும் பிரத்தியட்சம்
உரசும் நெருப்பில் அதன் இறகுகள் கருகி
உதிரும் முன் தாவி மறைகின்றது
பாதை நெடியது ...விரிந்தது
நாம் விடை பெறும் முன்
நெருங்கும் நெருப்பில் நம் நிழலும் அவிகிறது !
அமரத்துவமான நினைவுகளின் சந்தன மணம்
அடுக்கடுக்காய் நாசியில் நுழைகிறது
கொத்தும் தீ நாக்குகளையும் கடந்து .....
இனி .... யாவும் பிரமைதான்
உருவழிந்து கிடக்கும் நம் நினைவுக் குழிக்குள்
உயிரிழந்த சடலங்களாய் ....

---- சந்திரா மனோகரன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024