A POEM BY
ABDUL JAMEEL
as rain-born mere mushroom
it too has a little shade to offer
and it never fails to spread it
The ants do believe in them
as silvery umbrellas opened
exclusively for them
Thus, after opening into an umbrella
for at least one ant
the mushrooms cease to be
Mushroom too is but
an entity of Life
மழைக்கு முளைத்த
காளன்களென்று ஒதுக்கினாலும்
அதனிடமும் துண்டு நிழல் இருக்கத்தான் செய்கிறது
அது தனது நிழலினை
ஒரு போதும் விரித்து வைக்கத் தவறுவதில்லை
தமக்கென விரித்திருக்கும்
வெண்ணிறக் குடைகளென
அதனை நம்புகின்றன எறும்புகள்
ஆகக் குறைந்த பட்சம்
ஒரு எறும்புக்காவது
குடை விரித்த பின்னர்
செத்து மடிகிறது காளான்கள்
காளான்களென்பது வேறொன்றுமில்லை
அதுவும் வாழ்வின் சுயம்தான்
●
Abdul Jameel
No comments:
Post a Comment