INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

RAJAJI RAJAGOPALAN

 A POEM BY

RAJAJI RAJAGOPALAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
WORLD REFUGEE DAY
(JUNE 20, 2022)

We all came in ship
leaving behind our kith and kin
and Possessions
For, being enslaved and languishing in one's own soil
Is more cruel than the life of a refugee
We didn’t mind separations
Of course we all did lie and came away
Forgetting all that taught by our parents and teachers
For, living in the woods in biting cold
hiding ourselves
would be more cruel than
living in an unknown land
Lies didn’t appear as terrible sin to us
We were all in various Movements
daring to kiss Death any moment.
As Freedom is greater than the alms
given by foes
we didn’t mind being labelled
Militants.
Rajaji Rajagopalan

அகதிகள் தினம்
June 20, 2022
எல்லாரும் கப்பலில்தான் வந்தோம்
உறவுகளை விட்டு உடமைகளை விட்டு
அடிமைகளாக மண்ணில் உழல்வதிலும் பார்க்க
அகதி வாழ்க்கை அவ்வளவு கொடியதல்ல என்பதால்
பிரிவுகள் எமக்குப் பெரிதாய்ப் படவில்லை.
எல்லாரும் பொய் சொல்லித்தான் வந்தோம்
பெற்றாரும் ஆசிரியரும் புகட்டியதை மறந்து
காட்டிலும் குளியிலும் பதுங்குவதிலும் பார்க்க
கண்காணாத நாட்டில் வாழ்வு கொடுமையல்ல என்பதால்
பொய்கள் எமக்குப் பாவமாய்ப் படவில்லை.
எல்லாரும் இயக்கங்களில்தான் இருந்தோம்
எந்த வேளையும் மரணத்தை முத்தமிடத் துணிந்து
எதிரிகள் போடும் பிச்சையிலும் பார்க்க
பெரியது சுதந்திரம் பிச்சையல்ல என்பதால்
பயங்கரவாதிகள் என்ற பட்டம் பொருட்டாகப் படவில்லை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE