INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

ILANGO KRISHNAN

 A POEM BY

ILANGO KRISHNAN

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

Well,
Let’s say
That you are genius unparalleled
That is, you are the ones who taught us Feminism
You are the ones who taught us Dalitism
That is,
You are the ones who taught us Poetry
But for you
We would have, indeed yes we would have
Forgotten Pudumaipithan
That is, poor Nicanor Parra
(Is the spelling correct – the woe of Tamil Medium)
But for you
We wouldn’t have got to know him
Then, what is his name
Ha-yes Kazantzakis (Again, the spelling)
Then, who – Lorca
Oh-no, he is not in your list
We, we alone spoke of all those
How conveniently we have forgotten
Then Marti
Then Neruda
Manushyaputran calls him a Tamil Poet. True to the core
Then, who is this Neruda?
Why should it annoy thee
It is we who proclaimed Post-Modernism
Next
We discussed decentralization
Before that
We debated the issue of Structuralism
We spoke of Dalit Politics
Feminism
Identity Politics
We proposed the neo-classic sloganeering
Workers of the World Unite
In Derida’s words
Yes, we held aloft Althusser
And we highlighted Gramsci whom you find hard to stomach
(How conveniently you’ve forgotten)
It is we who have brought into being the placet where Francis Banan and Bratan Bratan merge
It is we who hail and celebrate
Susan Chandok and Sheila Roboth
It is our male chauvinistic minds that keep discussing
Julio Cortazar and Judith Butler
The List of names ours would be longer than yours
I say it in plain words
losing poesy
So what
We know all too well
that you are cunningly bringing forth
your worn-out loincloth.
Better Luck Next time.

Ilango Krishnan

சரி!
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்...
நீங்கள் மேதைகள்
அதாவது எங்களுக்குப் பெண்ணியம் போதித்தது நீங்கள்தான்
அதாவது எங்களுக்கு தலித்தியம் கற்பித்தது நீங்கள்தான்
அதாவது
எங்களுக்கு கவிதையை கற்பித்தது நீங்கள்தான்
நீங்கள் இல்லை என்றால்
புதுமைப்பித்தனை.... ஆம் புதுமைப்பித்தனை நாங்கள்
ஆம் நாங்கள் மறந்திருப்போம்
அதாகப்பட்டது நிக்கோனர் பர்ரா
(இஸ்பெல்லிங் சரிதானே... பாவம் தமிழ் மீடியம்)
நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அவரை தெரியாமலே போயிருப்போம்
அப்புறம் அவர் பெயர் பெயரென்ன
ஆங்... கசாண்ட்ண்சகிஸ் (மறுபடியும் பெல்லிங்) அவரெல்லாம் தெரிஞ்சிருக்கிகுமா
அப்புறம் இன்னொருவர் லோர்காவா
அச்சோ அவரெல்லாம் உங்கள் லிஸ்ட்டே இல்லியே
நாங்கள்தான் நாங்களேதான் அவரை எல்லாம் சொன்னோம்
எவ்வளவு வசதி மறந்தோம்
அப்புறம் மார்த்தி
அவன் யார் இன்னும் அந்த நெரூதா,
மனுஷ்யபுத்திரன் அவரை தமிழ் கவி என்கிறார். சத்தியமான சொல்.
உங்களுக்கு என்ன பிரச்சனை
நாங்கள்தான் பின் நவீனத்துவத்தை அறிவித்தோம்
பிறகு
மைய தகர்ப்பைப் பேசினோம்
முன்பே
அமைப்பியலை பிரச்சனைப்படுத்தினோம்
தலித் அரசியலை
பெண்ணியத்தை
அடையாள அரசியலை பேசினோம்
உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்ற புதுச் செவ்வியல் கோஷத்தை தெரிதாவின் சொற்களில் முன் மொழிந்தோம்
ஆம் அல்தூஸரைத் தூக்கிப் பிடித்தோம்
உங்ளால் செரிக்கவே இயலாத கிராம்ஷியையும் முன் வைத்தோம்
(எவ்வளவு வசதியாய் மறந்தீர்கள்)
பிரான்சிஸ் பனானும் ப்ரேட்டன் ப்ரேட்டன்பாவும் ஒன்றிணையும் இடத்தை நாங்கள்தான் உருவாக்கினோம்
சூசன் சொண்டாக்கையும் ஷீலா ரோபோத்தையும் நாங்கள்தான் கொண்டாடுகிறோம்.
ஹூலியோ கிருஷ்தோவாவையும் ஜூடித் பட்லரையும் எங்கள் ஆணாதிக்க மூளைகள்தான் பேசிக் கொண்டிருக்கின்றன.
பெயர்களின் பட்டியலை உங்களை விடவும் நாங்கள் பெரிதாகவே சொல்வோம். எதார்த்தமாய் சொல்கிறேன்.
நான் இதில் கவித்துவத்தைத் தவறவே விடுகிறேன்.
ஆனாலும் என்ன
உங்கள் பழைய கோவணத்தை
சாதுர்யமாகக் கொண்டு வருவதை
புரிந்தே இருக்கிறோம்
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

இளங்கோ கிருஷ்ணன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE